திருமணம் விரைவில் கை கூட சங்கடகரசதுர்த்தி விரதம்
பெற்றவர்கள் -தன்
பிள்ளைகளுக்கு காலா காலத்தில் திருமணம் நடக்க வேண்டும்
என்பது கனிவதற்கான
ஒரு நல்ல சிறப்பான நாளே
இந்த சங்கடகர சதுர்த்தி *
நம்முடைய வீட்டின்
அருகாமையில் வடக்கு பார்த்த விநாயகர் கோவில் இருந்தால்
சங்கடகர சதுர்த்தி அன்று
நீராடி வீட்டில் விளக்கேற்றி
காலையிலோ அல்லது
மாலையிலோ கோவிலுக்கு
சென்று ..
'வேண்டுதலை'நிறைவேற்றுமாறு மனமுருக வேண்டி
கர்ப்பக் கிரகத்தில்
வீற்றிருக்கும் விநாயகரின்
சுவற்றின் பின்புறம் உள்ள மாடத்தில் கோவிலை சுற்றி வந்து இரண்டு அகல்விளக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் அடுத்த
சங்கடகர சதுர்த்தியில்
திருமணம் கைகூடும்*
சங்கடஹர சதுர்த்தியில் தொடங்கி தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை சென்று விளக்கேற்றி வந்தால் . நல்ல இடத்தில்
வரன் அமைந்து திருமணம் சிறப்பாக நடைபெறும்.
திருமணமாகாத மகளோ மகனோ வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்கள் பயன்படுத்தும் ஆடையை பெற்றவர்கள் எடுத்துச் சென்று வேண்டி விளக்கேற்றினாலும்
பலன் கிடைக்கும் என வயதான மூத்தவர்கள் சொல்வதுண்டு ..
அருகம்புல் மாலை*
மலர்கள் *
கொண்டு விநாயகருக்கு
அர்ச்சனை செய்து
விளக்கேற்றுவது சிறப்பு*
நல்ல மனதோடு *
பண்போடு *
உயர்ந்த மனிதனாக *
வாழ தெய்வ வழிபாடு
நிச்சயம் வழிவகுக்கும்.
விநாயகப் பெருமானை வணங்குவதன் மூலமாக தடைகள் அனைத்தும் நீங்கும் நினைத்தது நிறைவேறும் .உள்ளத்தில் ஒளி உண்டாகும். வாழ்க்கையில் சிறப்பு உண்டாகும்.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக