ஞாயிறு, 17 ஜூன், 2018

வாழ்க்கை_ஒரு அலசல்



வாழ்க்கையில்
 நாம் அனைவரும் 
குழந்தைப் பருவம் 
இளமைப் பருவம் 
கடந்து முதுமைப் பருவத்தை அடைகின்றோம். 

 இந்த பிரபஞ்சத்தில் 
நாம் வாழும் வாழ்க்கை 
என்பது ஒரு 
கணப்பொழுது தான்..    

காலம் என்பது 
மிக வேகமாக 
நகரக் கூடியது..

இவ்வளவு சீக்கிரம் 
நம்முடைய வயதின் 
முதுமையை அடைந்து விட்டோம் என்று எண்ணுகின்ற பொழுது 
நமக்கே ஆச்சரியமாக தான் 
தோன்றும் !  

வாழ்க்கையில் 
முதுமை என்பதை 
யாரும் தட்டிக் கழிக்க முடியாது
தப்பிக்கவும் முடியாது .

நம் வயதை கடந்த பின் 
இளமை கால அனுபவங்களை 
அசை போடுவது என்பது 
மறுக்க முடியாத உண்மை ..

அந்த நேரத்தில் 
நாம் கடந்த வந்த 
பாதையை நாம் திரும்பி 
பார்க்கின்ற பொழுது ..

நம்முடைய மனம் 
நிறைந்து இருக்க 
வேண்டும்*, நம்முடைய 
எண்ணங்கள் 
மகிழ்ச்சி நிறைந்ததாக 
இருக்க வேண்டும் *

அப்படி
 யார் மன நிறைவுடன் 
இருக்கிறார்களோ 
அவர்களே
தெய்வீக பாதையை நோக்கி செல்பவர்கள் 
ஆவார்கள் .

முதுமையை 
அடைந்த பின்னர்  
வருந்துவதில் 
பயன் எதுவும் இல்லை ..
அதன்பின் அவர்கள் 
என்னதான் தன்னுடைய 
பாவத்திற்கு பரிகாரம் தேட நினைத்தாலும் '
'விழலுக்கு இறைத்த நீர் போல்'ஆகிவிடும் ..'

ஆதலால் இளமையிலேயே 
அடிக்கடி நம்முடைய
 மனதுடன் பேசிப் பார்த்து 
தவறு இருந்தால் -தம்முடைய 
தவறை உணர்ந்து தம்மை மாற்றிக் கொண்டு ..

நம்முடைய மனதில் 
அமைதியும் மகிழ்ச்சியும் 
கூடிய ஒரு சூழ்நிலையை 
உருவாக்கி உன்னதமான 
நிலை கொண்டு..

தெய்வத்தின் அருளைப் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மேன்மையை அடையலாம்.

என் கண்ணை 
நான் மறந்து உன்னிரு 
கண்களையே என்னகத்தில் 
இசைத்துக் கொண்டு 
நின் கண்ணால் புவியெல்லாம் நீயெனவே நான்கண்டு 
நிறைவு கொண்டேன் -கோவிந்தா
எனக்கு மோட்சம்  
அருள்வாயே*



Copy rights at  Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக