திங்கள், 2 டிசம்பர், 2019

புதுமனை குடிபோகும் போது கவனிக்க வேண்டியவை

    கிரகபப்பிரவேசம்ரை ஒருவர் அனுசரித்து புதிய வீட்டை கோவிலாக பாவித்து வாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக பாசப்பிணைப்பு வாழவேண்டும் என உறுதிகொண்டு புதிய வீடு கிரகப்பிரவேசம் செய்வது உத்தமம் .
வீடு குடிபோகும் போது கவனிக்க வேண்டியவை..
சிறப்பு -1 குடி போவதற்கு ஏற்ற மாதங்கள்..
சித்திரை -வைகாசி- ஆவணி

ஐப்பசி -கார்த்திகை -தை போன்ற மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்தால்  குடும்பம் சுபிட்சம் பெறும்.

குடி போவதற்குஏற்ற நாள் ..

திங்கள் -புதன் -வியாழன்
வெள்ளி- ஞாயிறு

ஐயரிடம் சென்று நாள் பார்த்து வளர்பிறை நாள் பார்த்து தேதி குறித்து ஒரு புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வது மிக மிக உத்தமம் .


சிறப்பு -2  குடும்பத்தில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பு அனைவரும் ஒருமனதாக முடிவு எடுக்க வேண்டிய ஒரு விஷயம் ..

குடும்பம் ஒரு கோவில் போன்றது. புது வீடு ஒரு கோவிலாக கருதி- இனிவரும் காலம் ஒருவரை ஒருவர் அனுசரித்து- புதிய வீட்டு கோவிலாக பாவித்து வாழ்க்கையில் அனைவரும் ஒற்றுமையாக பாசப்பிணைப்போடு வாழவேண்டும்-என உறுதி கொள்க.

சிறப்பு-3 ‌கிரகப்பிரவேசம் போவதற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டிய மிக அவசியம் ..

யாரும் நடமாட்டம் இல்லாத புது வீடு என்பதால் தெய்வீக சக்தி இருக்காது. பல தீயசக்திகள்-திருஷ்டிகள் ஆன்மாக்கள் சுற்றிக்கொண்டு இருக்கும்.

அவை அனைத்தும் விலக கிரகப்பிரவேசத்திற்கு முதல்நாள் கொடும்பாவி என சொல்லக்கூடிய திருஷ்டி பொம்மையை வீடு கட்டும்போதே வைக்க வேண்டும்.. 


அப்பொழுதுதான் கண்திருஷ்டி என்று சொல்லக்கூடிய ஓமல்- தீய சக்திகள் அனைத்தும் அந்த திருஷ்டி பொம்மை கிரகித்துக்கொள்ளும்.

கிரகப்பிரவேசத்திற்கு முதல்நாள் மறக்காது அந்த பொம்மையை எடுத்து வீட்டை வலம் வந்து அந்த பொம்மையை எரிக்க வேண்டும்.
அடுத்த நிமிடமே வீட்டில் தெய்வீக சக்தி உள் நுழைவதற்கான புத்தம்புதிய பொலிவாக வீடு முழுமையாக சிறப்பு பெறும்.


சிறப்பு -4  வீடு முழுவதும் சுத்தம் செய்து வாசலில் மஞ்சள்- குங்குமம் பூக்கள் -மாவிலை தோரணங்கள் வைத்து - பச்சரிசி மாவு கோலம் மற்றும் வண்ணக்கோலங்கள் வீட்டை அழகு படுத்த வேண்டும்.

வாழைமரம் குலையோடு  சேர்த்து வீட்டின் வாசலில் இருபுறமும் கட்டுவது தெய்வீக தன்மையை அதிகப்படுத்தும்.


சிறப்பு -5  ‌ அதிகாலை பிரம்ம முகூர்த்தமான 4/30 மணியிலிருந்து6 மணிக்குள் கிரகப்பிரவேசம் செய்வது என்பது மிக மிக உத்தமம்.

சிறப்பு-6  அனைவரும் கங்கா ஸ்நானம் செய்து புத்தம் புது பொலிவுடன்

5 பல்லா (சிறிய மண்ணால் செய்யப்பட்ட சட்டி முன்பே வாங்கி வைக்கவும்) அதில்
கழுத்து பாகத்தில் மல்லிகைப்பூவை சுற்றி மஞ்சள் -குங்குமம் இட்டு அரிசி- பருப்பு- புளி -கல்உப்பு -சர்க்கரை நிரப்பி -ஒரு குடம் தண்ணிர்- சுவாமி படம் எடுத்துக்கொண்டு புது வீட்டு அருகாமையில் உள்ள கோவிலுக்கு (முதல்நாளே -அய்யரிடம்  கோவிலை திறந்து வைக்குமாறு சொல்லி வைக்கலாம் .

அங்கிருந்து காமாட்சி அம்மன் விளக்கு தீபமேற்றி மேளதாளம் முழங்க தம்பதியர் சொந்த பந்தங்களோடு வருவது மிக மிக உத்தமம்.

சிறப்பு-7 ‌பசுமாடு கன்று(முன்பே ஏற்பாடு செய்து கொள்ளவும்) வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து- ஐயர் மந்திரம் சொல்ல கணவன் -மனைவி இருவருமாக சேர்ந்து அந்த பசுவை மகாலட்சுமியாக மனதிலே நினைத்து மிக பயபக்தியோடு- மஞ்சளிட்டு குங்குமபொட்டு வைத்து வணங்க வேண்டும்.வீட்டிற்கு மங்களத்தை கொடுக்கும் .

பூஜை அறையில் ஐந்துமுக விளக்கேற்றி தெய்வீக மணம் கமழ -ஊதுபத்தி நறுமணத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து குலதெய்வத்தை பயபக்தியோடு வேண்டிக்கொண்டு இந்த விசேஷத்தை நடத்துதல் மிக மிக உத்தமம்.

சிறப்பு -8   தாய்வீட்டு சீதனமாக (அவரவர் வசதிக்கு ஏற்றவாறு ) பழவரிசை தட்டுகள் -பெண்ணுக்கு பட்டுப்புடவை -மாப்பிள்ளைக்கு பட்டு வேஷ்டி வைத்து கொடுக்க -

தம்பதியர் ஆசீர்வாதம் பெற்று அதனை வாங்கி கட்டிக் கொண்டு வந்து மனையிலே அமர்ந்து ஐயர் ஹோமம்  வளர்த்தி மந்திரம் சொல்ல -கிரகப் பிரவேசம் செய்வது என்பது வாழ்க்கையில் என்றென்றும் கண்ணுக்கினிய பேரின்பம் கிடைக்கும். மங்கலம் கிடைக்கும்.


சிறப்பு- 9 சொந்த பந்தங்கள் புடைசூழ கிரகப்பிரவேசம் இனிதாக நடந்தேற பால்காய்ச்சும் வைபோகம் இனிதாக நடந்தேற..

மஞ்சள் குங்குமம் வைத்த ஒன்பது செங்கற்கள் அடுக்கி வைத்து -அதில் புத்தம்புது  பாத்திரத்தில் பால் காய்ச்சி ஏலக்காய் சர்க்கரை சேர்த்து பொங்கியதும் நன்கு காய்ச்சி குடும்பத்தில் உள்ள அனைவரும் குடிக்க வேண்டும்.

சிறப்பு -10  கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் -அன்று முழுவதும் பூஜை அறையில் ஏற்றி வைத்த தீபம் மலர்ந்து இருக்க வேண்டும் .

சொந்த வீடு மனை அமையும் செவ்வாய்கிரக வழிபாடு🙏🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_10.html

கிரகப்பிரவேசம் செய்யும்போது தேவையான பொருட்கள் 🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/12/blog-post_3.html


இரவு குடும்பத்தார் வீட்டில் தங்க வேண்டும் கதவை பூட்ட கூடாது.
இந்த  சம்பிரதாயத்தோடு நாம் கிரகப்பிரவேசம் செய்து வீட்டில் குடியேறினால் அனைத்து சுபிட்சமும் பெற்று மங்கலங்கள்- சுப நிகழ்ச்சிகள்

அனைத்தும் நடந்தேறும் .

புதிய இல்லம் குடிபுகுந்து -என்றும் தீபம் ஒளிர்ந்துகொண்டு இருக்க -தெய்வீக மணம் வீசிக் கொண்டிருக்க நல்ல எண்ணங்கள் மலர்ந்து கொண்டு இருக்க -சுபநிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்து கொண்டிருக்க- மனதில் ஆனந்தம் என்றும் குடிகொண்டிருக்க-இனிதாக வாழ்ந்து தெய்வத்தின் அருளைப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து மகிழ்வோம்.

என்பதால் இனிதான வாழ்க்கை வாழ்ந்து சிறப்பை அடையலாம்.

Copyrights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக