மரப்பாச்சி பொம்மை வழிபாடு திருமணம் ஆகாது ஒரு மகனோ மகளோ இருந்தால் அந்த வீட்டிலே கீழ்காணும் முறைப்படி மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.
விரைவில் திருமணம் கைகட சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇👇👇👇
திருமணம் ஆகாது ஏதாவது ஒருவிதத்தில் திருமணம் தடைபடும் சமயத்தில் மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சந்தன மரத்தால் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு தெய்வீக சக்தி அதிகம் . அந்த பொம்மைகளுக்கு உயிர் உண்டு .அந்த பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் உடனே திருமணம் நிச்சயம் ஆகும்.
திருமணம் விரைவில் நடக்க ஆலங்குடி குரு பகவான் கோவில் பரிகாரம்🌺🍀👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html
திருமணம் விரைவில் நடக்க பிரம்ம முகூர்த்த வழிபாடு 🌹🙏🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/05/blog-post_29.html
ஒரு திருமணத்தில் எப்படி முறைப்படி திருமணம் நடக்கின்றதோ அதுபோலவே மரப்பாச்சி பொம்மைகளுக்கு திருமணம் நடத்த வேண்டும். ஆண் -பெண் என மரப்பாச்சி பொம்மைகள் கடைகளில் கிடைக்கும் . வாங்கிவந்து திருமணத்திற்கான மாதங்கள் சித்திரை- வைகாசி- ஆனி- ஆவணி கார்த்திகை- தை என ஏதாவது ஒரு மாதத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
அந்த மாதத்தில் நல்ல நாள் பார்த்து அந்த நாளிலே திருமணத்தை நடத்த வேண்டும். நம் குடும்பத்தில் முக்கிய உறவினர்கள் என ஒன்பது பேர் சேர்ந்து இந்த திருமணத்தை நடத்தலாம் .மிக அழகாக மரப்பாச்சி பொம்மைகளை மணமகன் மணமகள் ஆக அலங்கரித்து- வரிசைத் தட்டுக்கள் புடைசூழ மங்கல நிகழ்ச்சியாக இந்த திருமணத்தை நடத்த வேண்டும்.
மஞ்சள் கயிற்றில் தாலி கோர்த்து அனைவரும் ஆசியோடும் மரப்பாச்சி பொம்மையான மணமகன் -மரப்பாச்சி பொம்மையான மணமகளுக்கு தாலி கட்ட திருமணத்தை நடத்தி- விருந்து படைக்க வேண்டும் .
இவ்வாறு மிகவும் ஆத்மார்த்தமாக இந்த திருமணத்தை நடத்தினால் அடுத்து வரும் மூன்று மாதங்களில் அந்த வீட்டில் சுபநிகழ்ச்சி நடக்கும்.
திருமணம் விரைவில் கை கூட தெய்வீக வழிபாடுகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🍀👇🌷🍀👇🌷
https://amzn.in/ibYVUJD
திருமணம் விரைவில் கை கூட தெய்வீக வழிபாடுகள் மற்றும் பரிகார ஸ்தலங்கள் மின்னணு புத்தகமாக அமேசானில் படித்து பயன் பெறுக 🌹🍀👇🌷🍀👇🌷
https://amzn.in/ibYVUJD
திருமணம் நிச்சயம் ஆகும். சுபமாக திருமணம் நடந்து தம்பதிகள் சீரும் சிறப்புமாய் ஒற்றுமையோடு வாழ்வார்கள் .திருமணம் முடிந்ததும் சீதன பொருட்களோடு மரப்பாச்சி பொம்மைகளையும் வைத்து- புகுந்த வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
வாழ்வினில் இன்பம் மலர அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ பழங்காலத்து சடங்கான- இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமணத்தை இனிதே நடத்தலாம். வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதற்கான மிகச்சிறந்த வழிபாடு இந்த மரப்பாச்சி பொம்மைகளின் திருமண வழிபாடு.
தங்கள் கருத்துகளை பதிவு செய்க
தங்கள் கருத்துகளை பதிவு செய்க
Copy rights at balakshitha