வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வேலை செய்வது எப்படி!

 எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வேலை செய்வது எப்படி! என்பதை  பணம் கொடுத்து வாங்குவது என்றால் இன்று உலகில் முக்கால்வாசி மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்துகொண்டிருப்பார்கள் . ஆனால் மனம் சம்பந்தப்பட்டு  அல்லவா அமைந்துவிட்டது என் செய்வது! 



 மனம் மட்டுமே மகிழ்ச்சியை கெடுப்பதும் கொடுப்பதும் என தன் சாம்ராஜ்யத்தை ஆளுமை செய்ய.‌. அடுத்தது நாம் என்ன செய்ய வேண்டும்!  என்று யோசிப்போம்.


 மகிழ்ச்சியோடு வேலையை செய்வது எப்படி !


1- பிடித்த வேலை

2- பிடிக்காத வேலை 


பிடித்த வேலை என்றதும் மனம் நம்மை அறியாது மகிழ்ச்சி பிறக்க... வேலை இனிதே நடக்கின்றது. நிறைவு பெறுகின்றது.



 அதனால் அதைப்பற்றி சிந்திப்பதை விடுத்து..


 பிடிக்காத வேலையை மகிழ்ச்சியோடு எப்படி செய்ய வேண்டும் பார்ப்போம்.

 பிடிக்காத வேலையில் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்க... மகிழ்ச்சி என்பது எங்கே போய் ஒளிந்து கொண்டது ! 


தேடி பிடித்து மகிழ்ச்சியினை மனதில் நிரப்பி வேலையை இனிதே நிறைவு பெற வழிமுறைதனை காண்போம்.


முதலில்  நம் மனம் தெளிவு பெற வேண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பிடிக்கின்ற,  பிடிக்காத வேலை எனினும் அதை மகிழ்ச்சியோடு செய்ய மனதிற்கு தெரியப்படுத்த வேண்டும்


மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது தினமும் சிறிது நேரம்  யோகாசனம் -  மூச்சுப்பயிற்சி அதற்கான பலன் -  பொறுமை நிதானம் செய்யக்கூடிய திறனில் வேகம் ,  எடுத்தேன் கவிழ்த்தேன் என இலாது  எப்படி எடுத்தால் வேலை இலகுவாக முடியும் என தெளிமானம் கிடைக்கும்.


வேலை முடியும் வரை மனதிற்கு பிறப்பிக்கப்படும் 6 கட்டளைகள்..


  1- பல வண்ண மலர்கள்  பொறுமையாய் தர வரிசைப்படி   பிரித்து, 

 2 - அதை கலையாது கவனமாக பாதுகாத்து,

  3 - எப்படி தொடுத்தால் அந்த மாலை அழகு பெறும் என சிந்தித்து, 

4  -   காலம் தவறாது கோர்த்து முடிப்பதற்கு,  நாம் மட்டும் போதுமா!  இருவர் துணை வேண்டுமா என தீர்மானித்து,

5-  கோர்க்கும் நூல் , ஊசி,  வண்ண மலர்கள் கோர்க்கும் முறை,  அவிழ்ந்து விடாது பாதுகாப்பான முடிச்சு, சேரவேண்டிய இடம் இவை அனைத்தும் முதலில் தெளிவாக தீர்மானித்து  அதை அப்படியே..

 7 - குறிப்பெடுத்தல் என இவ்வழியே முறைதனை பின்பற்ற  , நாம் நினைத்த நேரத்தில் அந்த மாலை கட்டி முடிக்கப்பட்டு மிக அழகாய் தெய்வ சந்நிதானத்தில் சென்று தெய்வத்தின் கழுத்தில் நிறைவாய்  அமைந்து தெய்வத்தின் மனம் குளிர்ந்து அதற்கான பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் .


நமக்கு அளிக்கப்பட்ட வேலையை முழுமனதோடு இவ் வழியை பின்பற்றி செய்க. இனி  பிடிக்காத ஒரு வேலையை செய்தாலும் அது மிகவும் பிடித்தமானதாக மகிழ்ச்சியோடு செய்யக்கூடிய வேலையாக அமையும்.


 எந்த வேலை செய்யணும் மனம் நிறைவான மகிழ்ச்சியோடு செய்முறை அறிந்து,  முறையோடு செய்து,  வெற்றியோடு முடித்து வாழ்க்கையில் இனிது காண்கவே.

குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக் கூடிய ஐந்து விதமான கலைகள்🙏🌹👇


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக