fastfood லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
fastfood லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

தமிழ்நாட்டில் அதிகமாக விற்பனையாகும் உணவுகள்

 தமிழ்நாட்டில் மிகவும் பிடித்தமான தெருவில் விற்கக்கூடிய

(street food ) அதாவது ஃபாஸ்ட் ஃபுட் என சொல்லக்கூடிய வகை உணவுகள்.



நாம் வீட்டில் வகைவகையாய் உணவுகள் பல நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தாலும் , குழந்தைகள் விரும்புவது தெருவீதியில் கிடைக்கக்கூடிய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தை என்பதால் வேறு வழியின்றி குழந்தைகள் நாம் அவர்கள் விரும்புவதை வாங்கிக் கொடுக்கிறோம். பெரியவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!


அவற்றில் மிகவும் அதிக கூடிய அனைவரும் அதிகமாக விரும்பக்கூடிய உணவுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு


 மிகவும் விருப்பமாக சாப்பிடக்கூடிய தெருக்களில் கூவியபடி விற்கக்கூடிய  காலைஉணவுகள்- இடியாப்பம் புட்டு


 இதமாய் பதமாய் பச்சரிசி மாவுதனில்  தண்ணீர்சேர்த்து  அவித்து அல்லது பிழிந்து, ஏலப்பொடி ,சர்க்கரை தேங்காய் கலந்த செய்யக்கூடிய அற்புத  டிபன் இது.

 ஆரோக்கியம் தரக்கூடிய தமிழ் கலாச்சார உணவும் இது.


 2,  மதிய உணவுகள்- தலைப்பாக்கட்டு பிரியாணி- சிக்கன்65


  கறியும் சூப்பும் சுவையூட்ட, பட்டை கிராம்பு மசாலா மணமும் ஒரு சேர, தேங்காய் பால் சுவையோ  சாதத்தோடு கலப்பட்டு கவர்ந்திழுக்கும் பிரியாணி 

( thalapakattu biriyani)


Chicken 65

சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு புளிப்பு கார சுவை சேர்த்து பதமாய்க் ஊறவைத்து , படபடவென எண்ணெயில் பொரித்து எடுத்த வாசனையின் மணமோ நாக்கினில் சுவையூட்டும் சிக்கன் 65( chicken 65)  என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய  விரும்பி உண்ணக்கூடிய  தெருவீதி உணவு (street food ) உணவு இது .


மாலை உணவுகள்

 பானி பூரி மசாலா பூரி, சமோசா, போண்டா , நூடுல்ஸ் , சுண்டல் என சிறுவர் முதல் பெரியவர் வரை போட்டி போட்டு வாங்கி சாப்பிடக்கூடிய இந்த உணவுகள் மாலைப்பொழுதில் கடற்கரை ஓரத்தில் காற்றில் சுவாசத்தில், ஆனந்தமாய் சாப்பிட அருமையாக ஏற்ற இந்த வகை உணவுகளும் தமிழ்நாட்டில் ஸ்பெஷலான உணவு வகைகள்.


சிந்திக்க ; ஆயிரம் செலவு செய்து நாக்கின் சுவைக்காக ஆயிரம் செலவு செய்து ஓட்டல் பல சென்று உண்டு மகிழ்ந்தாலும் , அனைத்து சுவையான உணவுகள் உண்பதற்கு இருந்தாலும் உடல் ஆரோக்கியம் கெடாத வண்ணம் பார்த்து,  சுவைத்து,  சுகமாய் வாழ்வதற்கு வழிவகுப்போம்.


பூண்டு சமையலில் சேர்ப்பதால் ஆரோக்கியமான வாழ்வு🌹🍀👇👇

https://balakshitha.blogspot.com/2020/04/blog-post_70.html