புரட்டாசிமாதம் வரக்கூடிய அமாவாசை திதி
2-10-2024 புதன்கிழமை மஹாளய அமாவாசை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?
பித்ருக்களை நினைத்து வழிபடக்கூடிய தினம் அமாவாசை. முக்கியமாக தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை என்று சொல்லக்கூடிய புரட்டாசி அமாவாசை நம்முடைய முன்னோர்கள் நம்முடைய இல்லத்திற்கு வந்து தங்கி இருந்து வாழ்த்துகின்றனர்.. அவர்களுடைய ஆசியை நமக்கு தந்து நம்மை மகிழ்விக்க கூடிய அருமையான தினம் தான் மஹாளய அமாவாசை .
அமாவாசை அன்று நாம் செய்யக்கூடியது என்ன! என்பதை பார்ப்பதற்கு முன்பு இறைவன் கொடுத்த இந்த மனிதப் பிறவியில் நான் யார் சரியான பாதையில் நான் செல்கின்றேனா என்னும் உணர்தலை உள் உணர்வில் அறிந்து கொள்வோம்.
தவறு செய்யாத மனிதன் என்பவர் இந்த உலகில் இல்லை. ஏதாவது ஒரு விதத்தில் ஒரு சில தவறுகள் நம்மை அறியாது நிகழ்வதுண்டு. நம்முடைய பாவ புண்ணியத்திற்கேற்றவாறு அந்தத் தவறுகள் நடக்கின்றது. அதை மாற்றுவதற்கான சரி செய்வதற்கான மன அமைதியை பெறுவதற்கான பதிவாக இந்த மகாலய அமாவாசை பதிவு நிச்சயமாக அமையும்.
தவறுகள் என பார்க்கும் பொழுது சரி செய்யக்கூடிய தவறுகள் சரிசெய்ய முடியாத தவறுகள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
சூழ்நிலை காரணமாக பொய் சொல்வது, கோபம் வந்தால் தேவையற்ற வார்த்தைகள் பேசுவது, செய்யக்கூடிய வேலையில் கவனம் தவறி தவறு செய்வது, எனும் சிறிய தவறுகளை , இனி தவறு செய்யக்கூடாது என உறுதி கொண்டு தவறை திருத்தி கொள்ளலாம்.
மற்றவரை பெரிதும் பாதித்து மன்னிப்பை கூட ஏற்றுக்கொள்ள முடியாத சில தவறுகள் சரி செய்ய முடிவது என்பது மிகக்கடினமே.
வாகன விபத்து , சொத்து தகராறில் விபரீதம் , வீண் பழியால் அவமானம் போன்றவையால் மனம் மிகுந்த அளவில் பாதிப்பு விட்டால் , அதற்கு பரிகாரத்தை தவிர வேறு வழி கிடையாது.
திருதராஷ்டிரன் மகன் மீது உள்ள அன்பினால் , சகோதரன் மகன்களுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை கொடுக்க இயலாது தவறு செய்தான் அன்று . முடிவில் மகாபாரத போரின் உச்சக்கட்டத்தில் சரி செய்ய முயற்சித்தும் பலன் இன்றி துன்பத்தோடு மாண்டான் என்கிறது மகாபாரதம்.
ஆனால் இன்று தவறு என்று உணர்ந்து கொண்டால் அதை சரி செய்து தவறு இழைத்தவர்களுக்கு உதவி செய்தும் , பல தானதர்மங்கள் செய்தும் , தெய்வ வழிபாடுகள் மூலமாகவும் , அதிலிருந்து மீள முடியும் என்கின்றது கலிகாலம்.
புரட்டாசிமாதம் வரக்கூடிய அமாவாசை திதி
அதற்காகத்தான் ஒவ்வொரு அமாவாசை தினமும் வருகின்றது. தவறை சுட்டிக் காட்டி , நம் மனதை திருத்திக் கொள்வதற்கு அற்புதமான நாள்தான் மஹாளய அமாவாசை என்று கூறுகின்றனர் நம் பெரியோர்கள்.
அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து, சிறிது நேரம் சிந்தனைக்கு இடம் கொடுத்து, நாம் செய்த தவறுகளை உணர்ந்து அதற்கேற்ற தெய்வ வழிபாடு அதற்கான பரிகாரம் செய்தால் நம்முடைய பாவங்கள் விலகி , நம்முடைய தலைமுறையினர் நலமோடு வாழ்வார்கள் .
தவறு செய்து விட்டோம் என்று மனதில் வருந்துவோர் , பட்டினத்தார் பாடல் வரிகளை இறந்த ஆத்மாவை நினைக்கும் தினமாகிய அமாவாசை தினத்தில் பாடி வர படிப்படியாக நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை காணலாம்.
கல்லா பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையா பிழையும் என் நெஞ்சை அழுத்த சொல்லாப் பிழையும் துதியா பிழையும் தொழா பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே தெரிந்து பிழை செய்தேனோ ! தெரியாமல் பிழை செய்தேனோ ! நினைத்து நினைத்து கசிந்து உருகுகின்றேன் ..அறியேனே தில்லை அம்பலத்தை நினைவில் நின்ற பிழை செய்தேனோ !நினைவில் இல்லாத பிழை செய்தேனோ! அனைத்தும் அறியேனே அம்பலத்தை ஆண்டவனே சிவாயநம எனும் ஐந்தெழுத்தை சொல்லாத பிழை செய்தேனோ ! கைகூப்பி வணங்காத பிழை செய்தேனோ !மனதாலும் நினைக்க செய்தேனோ ,எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே.
எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகள் தொடர்ந்து அமாவாசையில் விளக்கேற்றி வடக்கு நோக்கி அமர்ந்து மனமுருக பாடுங்கள். தீர்க்க முடியாத தவறுகள் கூட சரிசெய்யப்பட்டு உங்கள் வாழ்க்கை உவகை மேவிட வாழ்க்கை இனிதாகும்.
இனியாவது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து சொல் இதனை மனம் உருகி மனம் உவந்து மெய்மறந்து கனிந்துரூக தெய்வ மணம் கமழ்ந்து சொல்லி சொல்லி நமச்சிவாய எனும் நாமத்தோடு ஐக்கியமாகி மனித பிறவியின் பிறந்த பயனை அடைவோம்.
மஹாளய அமாவாசை அன்று நாம் செய்யக்கூடிய முக்கியமான நற்செயல்கள்
நன்றி
பாலாக்க்ஷிதா 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக