திருமணம்
பிறவியில் சிறந்தது மனிதபிறவி *மனிதப் பிறவியில் பிறந்தவர்கள் நான்கு நெறிகளை கடைபிடிக்கலாம் என்று வேதங்கள் கூறுகின்றன..
கிரஹஸ்தம் -பிரம்மச்சரியம் வானப்பிரஸ்தம் -சந்நியாசம்
இதில் கடைப்பிடிக்க வேண்டிய முதல் படிதான் கிரஹஸ்தம்
அதாவது இல்லறம்.
ஒரு ஆண் மகனும் ஒரு பெண் மகளும் இல்லறத்தில் இணைகின்ற
ஒரு பந்தம்தான் திருமணம் .
அக்னி சாட்சியாக அருந்ததி
பார்த்து- சப்தரிஷிகள்
வேத பிராமணர்கள்- உற்றார் உறவினர் -நண்பர்கள் சாட்சியாக வைத்து மேளதாளத்தோடு மணமகன் -மணமகள் கழுத்தில் கட்டப்படும் புனிதமான தாலியுடன் கூடிய மஞ்சள் கயிற்றை தான் மாங்கல்யம் என்கின்றோம் .இதன் பிறகே கணவன் மனைவி- என்ற அந்தஸ்தை பெற்று தம்பதிகளாக மாறுகின்றனர் .
இனிது இனிது வாழ்க்கை
இனிதன்றோ part -3🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_6.html
இனிது இனிது வாழ்க்கை
இனிது அன்றோ part- 5🍀🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/part-4.html
மனைவி என்பவள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களை விட சிறந்தவள் ஆவாள்- என்று காயத்ரி மந்திரம் கூறுகின்றது. அவளுடைய கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் 9 இழைகளை கொண்டதாக அமைகின்றது .
அந்த ஒவ்வொரு இழையுமே நமக்கு ஒரு கருத்தை சொல்கின்றது.
இழை (1) வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் .
(2 )மேன்மை உடையவளாய் திகழவேண்டும்.
(3) ஆற்றல் மிக்கவளாய் சிறக்க வேண்டும்.
(4) தூய்மை கொண்டவளாய் இருக்க வேண்டும்.
(5) தெய்வீக பக்தியோடு
(6) உத்தம குணங்களோடு
(7) விவேகத்தோடு
(8) தன்னடக்கத்தோடு
(9) பொறுமையோடும் -ஒரு பெண்
திகழ வேண்டும் என்பதே- மாங்கல்யத்தின் இலக்கணம் ஆகும். அந்த மாங்கல்யமே மங்களத்தின் அடையாளமாக திகழ்கின்றது.
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
திருமணம் நடைபெறும் பொழுது
வேத பிராமணர்கள் சொல்கின்ற மிக சிறப்பான ஸ்லோகம் இது..
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
சஞ்சீவ சரதம் சதம்.
'நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி- உன் கழுத்தில் தாலியை முடிச்சு போடுகின்றேன்-சௌபாக்யவதியே * நீ நூறு ஆண்டுகள் சுமங்கலியாக சுகமாக என்னுடன் வாழ்வாயாக -என்று ஆண்டவன் அருளட்டும்' என்று கூறியவாறு மணமகளின் கழுத்தில் தாலியை கட்டுகின்றான் மணமகன்.
அக்னிசாட்சியாக இப்படி மந்திரம சொல்லிமுறைப்படி மணமகன் -மண மகளுக்கு கட்டகின்ற புனிதமான மாங்கல்யம் நிலைத்து இருக்க வேண்டும்
என்றால் தெய்வத்தின் அருளானது நிறைந்து இருக்க வேண்டும்.தெய்வத்தின்
அனுகிரகம் கிடைத்தால்தான் -திருமணம்தங்கு தடையின்றி சிறப்பாகநடக்கும்.
அதனால்தான் வேத பிராமணர்கள் திருமணத்தின் போது கலச பூஜை -நவகிரக பூஜை நடத்துவர். கடவுளுடைய மனதை குளிர வைக்கக் கூடிய மகிழ்விக்க கூடிய சமஸ்கிருதசொற்கள் மந்திரத்தில் உண்டு .
ஹோம குண்டத்தை வளர்த்து நெய்வார்த்து நவ கிரக மந்திரம் வேத மந்திரங்கள் சொல்ல சொல்ல -அவை காற்றிலே கலந்து வானத்தை அடைந்து
வானத்தில் உள்ள தெய்வ சக்தியானது ஓமகுண்டத்திலே மீண்டும்
எழுந்து மணமக்களை வாழ்த்துகின்றது என்பது ஒரு ஐதீகம் .
அப்படிப்பட்ட ஐதிகம் நிறைந்த திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர்
புரிந்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை
அடையவேண்டும்.
திருமணம் விரைவில் கைகூட
சங்கடகர சதுர்த்தி வழிபாடு 🌹🍀🌹👇👇
திருமணம் விரைவில் கை கூட..
பச்சை நிறத்து பைங்களி போற்றி இச்சைக் கிசைந்த இன்பே போற்றி குவளைக் கண்மலர் கொம்பே போற்றி -தவள வெண் நீற்றோன் தலைவி போற்றி -பவள வாய்மேற் பசுங்கொடி போற்றி *
என்ற மீனாட்சியின் 108 போற்றி பாடலை வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி -வடக்கு முகமாக மணையில் அமர்ந்து பாடி வர திருமணம் விரைவில் கைகூடும். கன்னிப்பெண்களுக்கு நல்ல மாங்கல்யம் அமையும். வாழ்க்கை மிக சிறப்பாக அமையும்.
Copy rights at Balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்