Balakshitha Blog is a creative educational platform founded by Balakshitha Latha Kumar, dedicated to spreading positivity, wisdom, and cultural values among children and families. This blog is a beautiful blend of Anmeegam (spiritual insights), health and wellness tips, fireless cooking ideas, samaiyal tipsTamil cultural treasures, and fun learning resources for kids.Read our posts, feel inspired, and Share your thoughts and light up our Balakshitha community. Thank you 🙏
மகிஷி என்னும் அரக்கி அனைவரையும் நடுங்க வைத்து துன்புறுத்தவே -அவளை அழிப்பதற்கு ..
மோகினி அவதாரத்தில் விஷ்ணு சிவனோடு ஐக்கியமாகி பிறக்கின்றான் மணிகண்டன்.
பால் வதன நெற்றியிலே திலகம் கொண்டு கன்னங்கள் இரண்டும் வெண்ணை உருண்டை களாக ..
இதழ்களோ சிவந்த மாதுளை முத்துக்களாக -கழுத்திலே அழகிய மணியோடு பிறக்கின்றான் மணிகண்டன்.
அழுகுரல் கேட்டு கேரள பந்தள மகாராஜா- ஓடிவந்து அந்த அழகிய மழலையை அள்ளி தூக்கி மகிழ்கின்றார்.
கை கால்கள் துள்ள மகாராஜா குழந்தையை அள்ளி அணைத்ததும் அழுத குழந்தை சிரிக்கின்றான் . அவன் கழுத்தில் இருந்த மணியும் அந்த நேரத்தில் மிக அழகாய் ஒளிர்ந்தது கண்டு பரவசப்பட்டு ராஜன் , மணிகண்டன் என்று அவனுக்கு பெயர் சூட்டுகிறாகின்றார்
மகனாக அன்போடு வளர்க்கின்றார் அடுத்துஅரசிக்கு ஒரு மழலை பிறக்க மழலையின் பாசமோ அரசியின் கண்களைம றைக்கமணிகண்டன்
எங்கே ராஜ்ஜியத்தில் பங்கு கேட்பானோ -என பயந்து மனதில் நஞ்சு கொண்டு வஞ்சக செயல் புரிகின்றாள்.
தமக்குவயிற்றுவலி போல் பாசாங்கு செய்து- புலிப்பால் கொண்டு வர- அதை பருகினால் வலி குணமாகும் என்று பொய்யுரை உரைக்கின்றாள்.
தன் வளர்ப்பு தாயின் பொய்யுரை நாடகநோய் தீர்க்க -வீரம் பெற்ற புலி சுரந்த பால் தனை பெறுவதற்கு ஐயப்பன் செல்கின்றான்.
தவறுசெய்யும் நெஞ்சந்தனை நல்வழி பாதையில் -தன் வழிபடுத்தவே- காடு மலை நோக்கி விஷ்ணு மைந்தன் செல்கின்றான்.
வஞ்சம் நினைப்போர் நெஞ்சத்திலே பாசம் எனும் நெய்யூற்றி எமையே தஞ்சம் பெற வேண்டுமென சபரிநாதன் செல்கின்றான்.
"ஆபத்துணராது -தான் புலிப்பார்வை கொண்டுவர சம்மதம் என உரைத்த தன் மகன் நலமாய் திரும்பி வர வேண்டும் "என கலக்கமுற்ற தந்தையின் கைகளை தன் நெஞ்சுதனில் வைத்து தைரியம் கூறிவிட்டு மலர்வனம் புன்னகைக்க சபரிநாதன் செல்கின்றான் .
ஒருபருத்தி துணி எடுத்து இரு வகைகளாய் பிரித்து -ஒரு பகுதி
சிவ அம்சம் உடைய முக்கண் தேங்காயில் ஒரு கண் துளையிட்டு நீர் அகற்றி -சுத்தமான பசும் நெய் தனை ஊற்றி அடைத்து நெய்தேங்காய், மஞ்சள்- குங்குமம் -நெய் -பொறி அவல் - திரி வைத்து
இருமுடியிலே அடுத்த பகுதியில் -காடு மலையில் பசியாற பருப்பு அரிசி சில உணவுப் பொருட்களும் சமைப்பதற்கு வைத்து
என்றும் சிவன் உனக்கு துணை இருப்பான் என் மகனே போய் வா- என கண்ணீர் மல்க அனுப்பிவைத்த தந்தையின் துயர் நீக்க -நலமோடு திரும்புவேன் என சபதம் கொண்டு சிவ விஷ்ணு அம்சத்துடன் புன்னகை பூக்க செல்கின்றான்.
தீய சக்திகள் நம்மை சூழ்ந்தாலும் நல்மனம் கொண்டு -இரு முடி அணிந்து கல்லும் முள்ளும் தைத்தாலும் எமைப் போல் தாங்களும் காடு மலை கடந்து வந்து எமை தரிசித்தால் 'உன் குடும்பம் சிறப்போடு வாழ்வதற்கு யாம் அருள் புரிவோம்' என எடுத்துக் காட்டவே
திருமுடி அணிந்தவனே காடு மலை நோக்கி செல்கின்றான்.
மனித இனத்தவன் நம்மை தேடி வருகிறான் -என்றுணர்ந்த புலியோ சீற்றம் கொண்டு -சீறிப்பாய்ந்து ஓடிவர -ஐயப்பன் முகம் கண்டு
அடங்கி -ஒடுங்கி அமர்கையில் அதன் மீதேறி ஐயப்பன் நகருக்கு திரும்புகின்றான்.
புலியின் மீது புவிமைந்தன் அமர்ந்து வர -அங்கமெல்லாம் மலர்ந்தவனாய் வானமோ வரவேற்க ..
சூரியன்சந்திரரோ- சிவப்பான இதழ் விரித்து சிரித்தவாறு வரவேற்க ..
காடு மலை யாவும் -பசுமையான பாய் விரித்து வரவேற்க..
பறவைக் கூட்டங்களோ- பவளவாய்
திறந்து கானம் பாடி ஆர்ப்பரிக்க..
விலங்கு கூட்டங்களோ கூடி நின்று குதுகலமாய் வரவேற்க..
நீரோடைகள்- ஆரவாரத்தோடு ஆனந்தமாய் வரவேற்க..
சிந்தை குளிர்ந்தவனாய்- சிரிப்பு உதிர்த்தவனாய் - சிங்கார அழகன் அவன் நகரத்துக்குள் நுழைகிறான்.
புலியின்மீதேறி புவனேஸ்வரன் வருகின்றான்.அந்த அற்புதக் காட்சியை அதிசயம் மேலோங்க ஊர்மக்கள் பார்த்திடவே- ஓடிவந்த அரசியோ தன் செயல் கண்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்கின்றாள்.
மகிஷ முனிவரின் மேல் பகவான் நர்த்தனம் ஆடி தன் வெற்றிக்களிப்பு சூடிய -அற்புத காட்சி தனை காண வந்த சிவபெருமான்- தன் காளையை கட்டிவைத்த இடமான காளைகட்டி கடந்து
அழகா நதியின் வழி சென்று சபரிமலையிலே சாந்தமாய் அமர்கின்றான்.
அன்று அமர்ந்தவன் இன்றுவரை தமை பார்க்க வரும் பக்த கோடிகளை ஆனந்தமாய் வரவேற்று அருள்தனை புரிகின்றான்.
ஐயப்பனை தரிசனம் காண்போர் வாழ்வில் -சங்கடங்கள் தீருமே.
சாமி சரணம் என்போர் வாழ்வில் அனுதினமும் சுபதினமே.
இருமுடி அணிவோர்
மனதில் நீங்காத துயர் தீருமே.
கல்லும் முள்ளும் கடந்து வருவோர் வாழ்வில் வசந்தம் கூடுமே.
ஐயப்பன்நம்மை வாழ வைப்பான் வளர வைப்பான்-சிந்தை குளிர வைப்பான்- சிறந்த வாழ்வளிப்பான் புண்ணியம் கூட வைப்பான் சொர்க்கத்திலே நமக்கு இடம் அளிப்பான்
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely. உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்! அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள் 💭 Comment செய்யுங்கள் 🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்