புதன், 6 ஜூன், 2018

எதிர்பார்ப்பு ஒரு பரிசு*


எதிர்பார்ப்பு  இல்லாத
 மனிதனே கிடையாது..
 கொடுத்த பரிசு அது*

எதிர்பார்ப்பில் ஏற்படும்
வெற்றி தோல்வி அனுபவம்
 இறைவன் நமக்கு
 கொடுக்கும் ஒரு பரிட்சை.

இதில் தோல்வியில் 
துவள்பவன்  பள்ளத்தில்
 விழுந்து விடுகின்றான்        
  
இறைவனோ அதைப் பற்றி
கவலை படுவதில்லை ..
ஆனால் இதில் வெற்றியை ஏற்று        தோல்வியை மிக மிக சுகமாக
ஏற்றுக் கொண்டு - இறைவனை 
 பார்த்து ஒரே ஒரு புன்னகை
 புரிந்து  விட்டால் போதும் 
 அடுத்து வரும்  இன்பத்தில்
 இறைவன் பங்கு அதிகம்*
    
காக்கை   குருவி போல்
கவலையின்றி யான் இருந்தால்
யாக்கை கொடுத்தவனை
யார் நினைப்பார்..

 எதிர்பார்ப்புகள்- வெற்றி என்பது   முடிவில் நன்மைக்கே..
  எதிர்பார்ப்புகள்- தோல்வி என்பது   முடிவில் நன்மைக்கே.. 

 அதற்கான காரணத்தை
 இறைவன்   அறிவான்..        எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை 
  தரலாம் .. அதை சந்திப்பது        ஏற்றுக்கொள்வது  -எனும் 
 அனுபவமே   வாழ்க்கை நமக்கு                கற்றுத்தரும் பாடம்*
 அதை சுகமாக ஏற்றுக் கொள்ளப்   பழகிவிட்டால் வாழ்க்கையின்
 நெளிவு சுளிவுகளை
 சமாளிக்கக் கூடிய 
 பக்குவம் அறிவு   பெற்று
  மன அமைதியோடு  வாழ்ந்து
  அதில் இறைவனை காணலாம்*

 அடுத்து வருவது அனைத்தும்          இனிதாகவே    நடக்கும்.

  எதிர்பார்ப்புகள் 
  இளமைக்கு சொந்தம்.. 
  இளமையில் எதிர்பார்ப்பு
  இல்லை எனில் முயற்சி -உழைப்பு  என்னும் வார்த்தை ஏது? 
  முயன்று பாருங்கள்.. 
  முடிவு இறைவனிடம்*
   கவலை நமக்கு எதற்கு! 
   வெற்றி வந்தால் இனிது_ 
   தோல்வி -என்பது தோல்வி அல்ல                    
  வெற்றிக்கு முதல் படியே.. 

         வாழ்வதற்கு பல வழிக வையகத்தில்  உள்ளதன்றோ !      
         வாழ்ந்திடுவோம் இனிதாக
         மகிழ்ச்சி கொள்ளும் நிறைவாக*



Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக