ஓரறிவு முதல் அனைத்து ஜீவராசிகளையும் நானே அருள் பாவித்து காத்து அருள்கின்றேன் -என நமக்கெல்லாம்அம்மன் அவள் உணர்த்தும் படிகளே நவராத்திரியின்போது நாம் விரதமிருந்து பூஜித்து வழங்கக்கூடிய கொலுபடிகள் .
அதற்கான உதாரணமே..
1வது படி -மரம் செடி கொடி
2வது படி -நத்தை சங்கு ஆமை
3வது படி -எறும்பு கரையான்
4வது படி- நண்டு வண்டு பறவைகள்
5வது படி- ஆடு மாடு சிங்கம் புலி 6வது படி - மனிதர்கள்
7வது படி - மகரிஷி முனிவர்கள்
8வதுபடி- தேவர்கள் நவக்கிரகங்கள் பஞ்சபூத தெய்வங்கள் என கொலு பொம்மைகளோடு..
9வது படியிலே -பிரம்மா விஷ்ணு சிவன் விநாயகர் முருகர் என அனைத்து தெய்வங்களோடும் சேர்ந்து அம்மன் அவள் கொலுவில் காட்சி தந்து -இந்த எட்டுப் படிகளிலும் உள்ள ஜீவராசிகளையும் நானே காத்து அருள் புரிகின்றேன் என்று உணர்த்தும் படிகளே நவராத்திரி அன்று நாம் அழகாக கொலு வைத்து விரதமிருந்து வணங்கக்கூடிய கொலு படிகள்.
பலவிதங்களில் ஆனந்தம் கொண்ட வாழ்க்கை இருப்பினும் அம்பிகை அவளையே முழுமையாக நம்பி அவளுடைய பாதம் பணிந்து ஐக்கியமாகும் அந்த
பரமானந்தத்திற்கு இணை வாழ்க்கையில் இருக்க முடியாது. அதுவே மிகப்பெரிய மன நிறைவைத் தரும் .அப்படிப்பட்ட மன நிறைவை தரும் படிகளே நவராத்திரி கொலு படிகள்.
தெய்வீகமான நவராத்திரி கொலு படிகள் நமக்கு உணர்த்தும் சிறப்பான கருத்து..
வாழ்க்கையில் முதல் படியிலிருந்து ஒவ்வொரு படியாக நாம் முன்னேறி முடிவிலே முதிர்ச்சி பெற்று தெய்வத்தோடு ஐக்கியமாகி மறு பிறப்பில்லா மனித பிறவியின் பயனை அடைகின்றோம்
அதற்கான உதாரணமே ..
முதல்படி நாம் ஒன்றும் அறியா -படி 2வதுபடி-தாய்தந்தையரைஅறியும் --படி
3வது படி -கல்வியை கற்கும் -படி 4வது படி- கற்றதை மனதில் ஏற்றும்- படி
5வது படி -ஏற்றதை மனதில் அறியும் படி
6வது படி- ஆறறிவு நிறைவு கொண்ட -படி
7வதுபடி - நிறைவை மற்றவருக்கு உணர்த்தும் -படி
8வது படி -வாழ்வின் உயர்வை தொட்ட -படி
9வது படி -ஆன்மீக கடலில் மூழ்கும் படி வாழ்ந்து அளவிலா ஆனந்தம் அடைந்து மனித பிறவியின் பயனை அடையலாம்.
கோவில் மற்றும் தொன்றுதொட்டு கொலுவைத்து வணங்குவோர் இல்லத்திற்கு சென்று -இந்த ஐதீக சிறப்புமிக்க கொலுவினை தரிசித்து வணங்கி வந்தால் -அடுத்து வரும் மாதமாகிய கார்த்திகை மாதம் ஒரு நல்ல செய்தி நம் இல்லத்தில் வந்து சேரும் என்பதால் நவராத்திரி ஒன்பது நாள் நடைபெறும் நாட்களில் ஒரு நாள் அவ்வாறு சென்று வணங்கி நற்பயனை அடைவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்