வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

வீடு கட்டும் யோகம் பெற திருச்செந்தூர் தீர்த்த வழிபாடு


 
வீடு கட்டும் யோகம் பெற திருச்செந்தூர் கடல் தீர்த்தம் வழிபாடு

தெய்வ பிராப்தம்இருந்தால் மட்டுமே ஒருவருக்கு வீடு கட்டும்
யோகம் கிடைக்கும்.

முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு இளம்வயது கடந்த வயது எனும் வித்தியாசம் இன்றி அனைவரும் மனமுருக வேண்டினால் நினைத்த காரியத்தை இனிதாக முடிக்கலாம்.

 நினைத்தது யாவும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும். மனத்தூய்மையோடும்- உடல் தூய்மையோடும்  மனதார வேண்டி வழிபட்டால் நினைக்கும் அனைத்து காரியம் ஜெயமாகும்.

திருச்செந்தூர் கடல் தீர்த்த வழிபாடு



 அதற்கான ஒரு அற்புதமான திருத்தலம் தான் முருகப்பெருமானின் இரண்டாவது அறுபடை வீடான திருச்செந்தூர். நம் மனதில் உள்ள அகம்பாவம்  எனும் அசுரனை வென்ற அற்புதமான திருத்தலம்.
வீடு மனை நமக்கு சொந்தமாக அமையவில்லை என ஏங்குவோர்க்கு..

ஒருமுறை திருச்செந்தூர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது தலமான திருச்செந்தூர் சென்று வந்தால் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் கிடைக்கும் என்பது திண்ணம்.

நினனத்த காரியமாக விரதம்இருக்கும் முறை🌹🍀🌹🍀👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/10/blog-post_15.html


கிருத்திகை அன்று எளிமையாக விரதம் இருக்கும் முறை 🌹🍀🌹🍀🌹👇👇👇👇

http://balakshitha.blogspot.com/2019/04/blog-post_7.html


 அந்த திருத்தலத்தில் புனித நீரில் நீராடி அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் பிரகாரத்தை ஒன்பது முறை வலம் வந்து வேண்டிக் கொண்டால் -சொந்தமாக வீடு கட்ட வேண்டும் எனும் கனவு நிஜமாகும்.

திருச்செந்தூர் வற்றாத கடலின் தீர்த்தத்தில் இறையருள் நிரம்பி கிடைக்கின்றது .

அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் முருகப்பெருமானை நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என வேண்டி.. அந்த திருத்தலத்தை வலம் வருவது சிறப்பு.

கடல் தீர்த்தத்தை நாம் கட்டப்போகும் மனையிலோ அல்லது நாம் குடியிருக்கும் வாடகை வீட்டிலோ முழுவதும் தெளித்து வேண்டும்.

 அந்த புனித நீரின் சக்தியானது விரைவில் வீடு கட்டும் பாக்கியத்தை நமக்கு அருளசெய்யும் .

சொந்தமாக வீடு மனை அமைய 10 தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் படித்து பயன்பெறுங்கள்1🙏🌹🍀🌹🍀👇👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



தொடர்ந்து 48 நாட்கள் தீபமேற்றி கந்தர்சஷ்டிகவசம் படிக்க நிச்சயம் பலன் விரைவில் கிடைக்கும். என்பதையும் மறவாது நிறைவேற்றுதல் நன்று .(ஓம் ஷண்முக பதயே நம என்னும் நாமத்தையும் தீபமேற்றி 108 முறை பாராயணம் செய்க)


தெய்வ சிந்தனை நிறைந்திருக்க மனதிலோ வேண்டிய காரியம் ஜெயமாக விநாயகப் பெருமானை முதல் வேண்டி அதன் பின்னே வேண்டுதலுக்கான தெய்வத்தை முன்னிறுத்தி-

அர்ச்சனைவழிபாடுகள் சிறப்பாக -உபவாசம் என்றும் முறையாக- கந்தசஷ்டி என  இருவேளையும் முருகன் புகழ் பாடி முறையான விரதம் இருப்பின் நினைத்த காரியம் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நாம் இருக்க -ஆனந்தம் அடைந்த முருகனோ தம் பக்தனின் ஆசையை நிறைவேற்றி வேண்டிய பலனை அருள்வானே .


கந்தா சரணம் சரணம் சரணமபய்யா.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக