கந்த சஷ்டி கவசம் சிறப்பு
முருக பெருமான் கவசமான கந்த சஷ்டி கவசம் பிறந்த வரலாறு பற்றி அறிவோம்..
ஒரு மனிதர்-நன்றாக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர் திடீரென்று கடும்நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுகின்றார் .
கோடி கோடி சொத்து இருந்தும் சுகமின்றி படுத்துவிட்டால்- நாக்கிற்கு சுவை பார்க்கும் எண்ணம் தான் தோன்றுமோ! சுற்றியிருக்கும் பந்தம் தான் இனிக்குமோ !காண்கின்ற காட்சிகளில் லயிப்பதற்கு மனம்தான் விழையுமோ!
நோயை குணப்படுத்த முடியாது என்ற சூழ்நிலையில்- சாகலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றார் அம்மனிதர்.
கடைசியாக ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து விடுவோம் என விரக்தியோடு திருச்செந்தூர் செல்கின்றார்.
இரு கை கொண்டு வரவேற்கும் முருகனவன் -புன்சிரிப்பு உதட்டோரம் மின்னுகையிலே -மின்னல் பார்வையில் பல ஆயிரம் பொருள் உணர்த்தி ..தங்கம் என ஜொலிக்கின்றான் வேல் கொண்ட கந்தன் அவன்.
கண்களை மூடி முழுக்கமுழுக்க முருகப்பெருமானை நினைத்து அகத்தினிலே கண்டவர்க்கோ! முருகப்பெருமான் நேரிலேயே காட்சி தருகின்றார் .
தெய்வம் உண்டு என்னும் நம்பிக்கை மனதில் பதிந்து விட்டால்- இரு கைகூப்பி அவன் பாதம் பணிந்துவிட்டால் -மனம் முழுதும் மலர்வதனன் முகம் நிறைந்து விட்டால் -வாழ்நாள் முழுதும் அச்சுகமே பெரும்பெரும் சுகமென்று கண்டு கொண்டேன் முருகா முருகா என மகிழ்ச்சி மேவிட பிதற்றுகிறார்.
முருகனோ சிரிக்கின்றான்
பவளவாய் மலர்கின்றான்..
எம்மை நினைத்து ஒரு பதிகம் இயற்றுமாறும் அது உனக்கு மட்டுமல்ல உலகத்திற்கே நோய் தீர்க்கும் மருந்தாகவும் அமையும் -எனக் கூறி மறைந்துவிட மனிதரின் நாவினிலே உதிர்ந்தது மிக அழகான பதிகப் பாடல் ஒன்று.
அதே இடத்தில் அமர்ந்து பதிகம் இயற்றுகின்றார் .அவர்தான் பால தேவராயர். அவர் பாடிய பதிகமே கந்தர் சஷ்டி கவசம்.அவருடைய நோய் அவரை விட்டு அகன்றது .
திருச்செந்தூர் கடலினிலே நீராடி நோய் நொடி -பிணி பாவம் அனைத்தும் நீங்கப் பெற்றவராய்-ஆனந்தம் பெருக்கெடுத்து அறுபடை வீடுகள் அனைத்திற்கும் சென்று முருகப்பெருமானை வணங்கி ஆனந்தம் கொள்கின்றார்.
பிரதோஷம் அன்று விரதம்
இருக்கும் முறை🙏🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/1.html
கிருத்திகை அன்று விரதம்
இருக்கும் முறை🙏🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2019/04/blog-post_7.html
அந்தப் பதிகம்தான் கந்த சஷ்டி கவசம் .எந்த பிணியையும் துயரத்தையும் போக்கக்கூடிய பதிகம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் நலம் காக்க வேண்டி முருகப்பெருமானின் வேல் காக்க என தியானித்து பாடும் அற்புதமான பாடல்.
தெய்வத்தை நம்பினால் ஒருபொழுதும் நம்மை கைவிட மாட்டான் என்பதற்கு பால தேவராயர் சாட்சி அன்றோ !
கந்தர்சஷ்டிகவசம் படிப்போர் கலக்கமடைய மாட்டார் என்பது- என்றும் நாம் காணும் காட்சியன்றோ!
48 நாட்கள் அவன் புகழ் பாட பாட- நோய் நொடி அகலும் என்பதும் சத்தியம் அன்றோ .
முருகா உன் பாதமே சரணம் சரணம் சரணம்
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக