சனி, 16 அக்டோபர், 2021

திருமணம் கைகூடியதும் முதலில் செய்ய வேண்டிய காரியம்

 

திருமணம் கைகூடியதும் மணமக்களின்  பெற்றோர் செய்யக்கூடிய முதல் காரியம்...


திருமணம் கனிந்ததும் முதலில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய ஞாபகத்தில் வர வேண்டிய  காரியம் குலதெய்வ வழிபாடு.

குலதெய்வத்திற்கு நன்றி சொல்லுங்கள்.

திருமணம் இனிதே நடந்து, குழந்தை பாக்கியம் நிலைத்து , நம்முடைய குலத்தை வாழையடி வாழையாக வளர செய்து , நம்முடைய சந்ததிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம்.


திருமணம் கைகூடியதும்  நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று பூஜை மஙகலப்படுத்தவும். விளக்கேற்றவும்.

ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயம்  அல்லது வெள்ளி நாணயம் என அவர்களுடைய வசதிக்கு தகுந்தவாறு  காணிக்கை...


  மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து  குலதெய்வத்தை முழுமனதோடு வேண்டிக் கொள்ளவும் .


'திருமணம் தங்கு தடையின்றி இனிதே நடைபெற வேண்டும் ' என குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளவும்.

இதுதான் முதல் வேண்டுதல்.

அடுத்து திருமண பத்திரிக்கை அச்சடித்து முதல் பத்திரிக்கை குல தெய்வ கோவிலில்  தெய்வத்தின் பாதத்தில் வைக்கப்பட வேண்டும்.


திருமணபத்திரிக்கை  நல்ல நாளை (சுபநாள்) தேர்ந்தெடுத்து குலதெய்வ கோவிலுக்கு சென்று,  குல தெய்வத்திற்கு அபிஷேகம் ஆராதனை பொங்கல் வைத்து சிறப்பாக தெய்வத்தின் மனதை குளிர படுத்தவும்.

அந்த நேரத்தில் பத்திரிக்கையை அவள் பாதத்தில் வைக்கும்போது நம்முடைய குல தெய்வத்தின் மனம் குளிர்ச்சி பெற்று ....

மகிழ்ச்சியோடு பத்திரிக்கையை ஏற்றுக்கொண்டு வாழ்த்தி அருள்பாவிப்பாள்.

அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுபமாக நடக்கும்.

மேளதாளங்கள் முழங்க, பெற்றோர்களின் மனம் மகிழ, சொந்தபந்தங்கள் வாழ்த்த, தெய்வத்தின் ஆசியோடு திருமணம் சிறப்பாக நடந்தேறும் .

திருமணம் நடந்த பிறகு நல்ல நாளில்  தம்பதியரை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபடுதல் சிறப்பு.

முடிந்து வைத்த காணிக்கையை கோவில் உண்டியலில் சேர்த்து விடவும்.

நாம் வாழ்வோம் .நம் பண்பாடுகளை மலர வைப்போம் . தெய்வத்தின் பரிபூரணமான வாழ்த்து பெற்று வாழ்வினில் வளம் காண்போம்.

திருமணம் கை கூடி முகூர்த்த கால் நடும் விழா செய்வதற்கான விளக்கங்கள்🙏🌹🍀🌹👇👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC



'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.

புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.


📞‌அணுகவும் 8124152666

💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐

https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds

Copy rights at balakshitha

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்