ஞாயிறு, 19 டிசம்பர், 2021

முதன்முதலில் வேலையில் அமர்வதற்கு முன் நினைவில் வையுங்கள்

 

உங்களுக்கு வேலை பணி கிடைத்து விட்டது வேலையில் சேர்வதற்கு முன்பாக தங்களுடைய சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு சின்ன ஆலோசனை...

நாம்  வேலை தேடுகின்றோம் நல்ல வேலை கிடைத்து ,  நல்ல பணியில் அமரவேண்டும் .மேலதிகாரியின் நன்மதிப்பை பெற வேண்டும். நன்னடத்தை மிக்கவர் எனும் பெயர் எடுக்க வேண்டும். உயர்ந்த ஸ்தானம் பெற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்ந்து உயர்வு பெற்று நிறைவு பெறவேண்டும் ...என்ற ஒரு குறிக்கோள் அனைவருக்கும் உண்டு.


அதன்படி உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது.  நீங்கள் பணிக்கு சென்று அமர வேண்டும் . அதற்கு முன்பாக உங்கள் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்!  என்பதை புரிந்து கொள்வது அவசியம்.

உதாரணத்திற்கு....

கட்டிடம் கட்ட கட்டுமானப் பணி உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்யவேண்டும்!  கட்டிடம் கட்டுவதற்கான முழு தகுதியும் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பணியை உங்களால் செவ்வனே செய்ய முடியும்.

முழு தகுதி பெற நான் என்ன செய்ய வேண்டும் ?


கட்டிடம் கட்டுவதற்கான அடித்தளம் ஆரம்பித்து கட்டுமானம் முடிவு வரை  நிறைவு வரை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

அந்தப் பயிற்சியில் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் .

அப்படி தயார் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் ?


கட்டிட அனுபவஸ்தர்கள் பலருடைய புத்தகம் கருத்துக்கள் அனைத்தும் திரட்ட வேண்டும் . அதற்கான குறிப்புகள் எடுத்து வைக்கவும் .  அதில் பல கேள்விகள் எழுப்புவதற்கு முயற்சி செய்யுங்கள் . விடை கிடைக்கும். (குறிப்புகள் முக்கியம் )அந்த விடைகளில் புதுமை புகுத்த வேண்டும்.

புதுமைகள் புகுத்த  நான் என்ன செய்ய வேண்டும் ?

சமையலில் தோசையோடு  சுவை தரும் சட்னி இட்டு  பரிமாறியது அந்தக் காலம்.
(அந்த கால கட்டுமானப்பணி )
அதே தோசையில் பீட்சா பனீர் காளான் சீஸ் சாஸ் என கலந்து விதவிதமாய் பரிமாறுவது இந்த காலம் .
(இந்த கால கட்டுமானப்பணி)

  ஒரு புள்ளி வைத்தால் ....அதில் கோலம் போட வேண்டும் என்ற உற்சாகம் பிறந்தால் மட்டுமே விதவிதமாகப் கோலங்கள் வரையலாம்.



 சூரியன் உதித்தால் தான் காலை உதயமாகும்... அதுபோல் எண்ணங்கள் உதித்தால் தான் மென்மேலும் உயர முடியும்.

நம்மை  இறைவன் படைக்கும் போட்டு சிந்தித்து செயல்படுத்தும் திறனையும் சேர்த்து படைத்துள்ளான்.

வேலை கிடைத்து விட்டது எனும்  மகிழ்ச்சியை விட ,  வேலையில் சேர்ந்து நம்ம வேலையின் மேலாளருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.

  பணியில் அமரர்வதற்கு முன்பாக நான் ஐந்து விஷயங்களை பற்றி தெளிவு படுத்த விரும்புகின்றேன்...

1- நாம் வேலையில் அமர்கின்ற இடம்

2 - வேலைக்கான சுற்றுப்புற சூழ்நிலை

3-  வேலை பற்றிய அனைத்து விவரங்கள்

4 - அந்தப் பணியில் நாம் புகுத்த கூடிய புதுமைகளின் சின்ன உதயம்

5-  நேர்மையான முறை கையாளுதல்

இதனை சிந்தனையில் வைத்து அனைத்தும் தெரிந்து , தெளிந்து நம்பிக்கையோடு புத்துணர்ச்சியோடு நாம்  வேலைக்கு போகிறோம் என்ற பரவசத்தோடு செல்ல தயாராகுங்கள்.

தெய்வத்தின் ஆசியோடு பணியில் சிறப்பு மேலாளர் எனும் உயர்வு பெற்று நல்லதொரு குடும்பம் அமைந்து, சிறப்பான வாழ்க்கை அமைந்து வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்வில்  உயர்வான தன் பணியில் வெற்றி வாகை சூடுங்கள்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்