வெள்ளி, 24 அக்டோபர், 2025

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

 பணம் பந்தியிலே குணம் குப்பையிலே கருத்துமிக்க திரைப்பட பாடல்






பணம் பந்தியிலே - குணம் குப்பையிலே என்பது இன்றைய  சமுதாயத்தில் நடக்கிறது சாதாரணமான விஷயமா போச்சு.

பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லையா?

 பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லையா யோசிக்க வேண்டிய கேள்விதான்!





வாழ்க்கையில் நிம்மதியே இல்லை ன்னு நாம் அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்கிறோம் . ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்!





' பணம் இல்லைன்னா நிம்மதி இல்லை, சொந்த பந்தங்களுக்குள்ள பிரச்சனைனா நிம்மதி இல்லை , உடல்நிலை சரியில்லைன்னா நிம்மதி இல்லை,  நம்மை யாரும் மதிக்க மாட்டறாங்களே  என்று நினைக்கும் போதும் நிம்மதி இல்லை '

இந்த புலம்பலை முதலில் நிறுத்தி விடுவோமா!





இவ்வாறு  புலம்புபவர்கள் எத்தனை பேர்? இந்த புலம்பலை நிறுத்தினாலே ஆட்டோமெட்டிக்கா எல்லாம் சரியாகிவிடும்.


 இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண்போமா!

 'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே -  பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்'

 என்று எப்படி வேண்டுமானாலும் கவிஞர்கள் பாட்டு எழுதலாம் . எந்தப் பாட்டை நாம் பாடலாம் என்று நாம் தான் செலக்ட் பண்ணனும்.







நமக்கேற்ற பாடல்தான் எது? 

நமக்கேற்ற பாடல்தான் எது?  புலம்பலை நிறுத்துவதற்கான வழிதான் என்ன என்று கேட்கும் அனைவருக்குள்ளும் ஒரு திறமை எனும் ஒளி இருக்கின்றது  ... அது என்ன என்பதை கண்டுபிடிப்போமா? உங்கள் ஒருவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும் என்பதில் நீங்கள்தான் தெளிவு கொள்ள வேண்டும்.

பணம் போதவில்லை என்று கவலையா?


 கீழ்கண்ட திரைப்பட பாடலை முதலில் காண்போம்👇

பணம் பந்தியிலே திரைப்பட பாடல்

 பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்த்துகின்றது இந்த திரைப்பட பாடல் . பணம் பத்தவே மாட்டேங்குது மாசக் கடைசியில் இவ்வாறு புலம்புகிறீர்களா ! அந்த புலம்பலை முதலில் தூக்கி எறியுங்கள். .நேர்மையான முறையில் எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்று  புலம்புவதற்கு பதிலாக யோசித்துப் பார்ப்போம்.

வயதாகிய பிறகு என்னால் சம்பாதிக்க முடியுமா? (Motivation After 40)




 


எனக்கு வயசு ஆயிடுச்சுப்பா!  நான் என்ன செய்ய முடியும்னு மட்டும் யாரும் சொல்லக்கூடாது.  வயது ஒரு தடையே இல்லைங்க.  60,  70 வயதுக்கு மேலே சம்பாதித்து முன்னுக்கு வந்து சாதனை கண்டவர்கள் நிறைய பேர் உண்டு.  நமக்குள்ள என்ன திறமை இருக்கு  என்பது நமக்குத் தெரியும் . அந்த திறமையை வைத்து வழி தேடுங்கள்.


வாழ்க்கை வாழ்வதற்கே!   (Self Confidence)






வயதைப் பற்றி யோசிக்காமல் என்ன செய்யலாம் என்று தன்னம்பிக்கையோடு யோசிக்க ஆரம்பியுங்கள் . தெய்வ நம்பிக்கையையும் கொஞ்சம் எடுத்துக் கொண்டால் சாதித்தவர்கள் பட்டியலில் நாமும்  நிச்சயம் இடம் பெறலாம் .

இப்பொழுது நாம் பாடப்போகும் பாடல் செலக்ட் செய்யலாமா?

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற என்ற பாடலை முதலில் பாடுவோம்.

 பணம் சம்பாதித்து முடித்ததும் பாடலை சற்றே மாற்றி விடலாம்.  பணம் என்னடா பணம் பணம் -  குணம் தானடா நிரந்தரம்


என்ற பாடலை பாடியவாறு அனைத்து துயரங்களையும் மறந்து சொந்த பந்தங்கள் அனைவரையும் கைகோர்த்து இணைத்து மகிழ்வோம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷


Copy rights @Balakshitha 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்