தீபாவளி அன்று பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்போம் (Diwali Safety Tips)

தீப ஒளி எனனும் பெயரே தீபாவளி (Diwali) என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் நம் மனதை தூய்மைப்படுத்தி உற்சாகம் , புத்துணர்ச்சி மற்றும் இனிய தொடக்கத்தை அளிக்கிறது. இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புன்னகைகள் நிறைந்த ஒரு மகிழ்ச்சிகரமான தீபாவளியை கொண்டாடுவோம்.
மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியை கொண்டாடுவோம் |Lets Celebrate Diwali with Joy and Safety
குழந்தைகள் குதுகலிக்கும் இந்த திருநாளில் பட்டாசு (Crackers) வெடிக்கும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு குறிப்புகள் இதோ;
குடும்பத்தினருக்கான முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகள் |Top &Safety Tips for Kids & Families
1. பாலிஸ்டர் ஆடைகள் தவிர்க்கவும்.
பட்டாசு வெடிக்கும் பொழுது காட்டன் ஆடைகள் அணியுங்கள். இது பாதுகாப்பானது | Avoid Pollster Clothes
2. பெற்றோர் கண்காணிப்பு அவசியம் | Supervision is Safely
அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து குழந்தைகளோடு சேர்ந்து பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதும் கூட என்பதை பெற்றோர்கள் உணருங்கள்.
3. காலில் செருப்பு அணியுங்கள் | Wear Footwear
வெடிக்கும் தீப்பொறிகள் காலில் விழாமல் இருக்க இது அவசியம் .
4. தண்ணீர் மணல் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் | Keep Water &Sand Nearby
ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் தயார் நிலையில் இருக்கட்டும். ஏதாவது தீப்பற்றினால் உடனே அணைக்க உதவும்.
5. வெடித்த பட்டாசுகளை பாதுகாப்பாக அகற்றுங்கள் | Dispose Used Crackers Safely
கம்பி ,மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்றவற்றை வெடித்து முடித்ததும் தண்ணீர் போட்டு அணைத்து விடுங்கள்.
6. நேருக்கு நேர் வெடிக்காதீர்கள் | Don't Face Crackers Directly
பட்டாசு வெடிக்கும் போது பக்கவாட்டில் நின்று வெடிக்கவும். இது முகம் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பானது.
7. மின் ஒயர்கள் மற்றும் மருத்துவமனை அருகில் வெடிக்காதீர்கள் |Avoid Crowded & Electrical Areas
தீப்பற்றும் ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
8. மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதியுங்கள் | Respect Others
அருகில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், விலங்குகள் ஆகியோருக்கு இடையூறு ஏற்படாதவாறு பொறுப்புடன் வெடிக்கவும் .
9. வெடிக்கும் முன் அறிவுரை கொடுங்கள்| Teach Kids Before Burn
பட்டாசு வெடிக்கும் முறைகளை குழந்தைகளுக்கு முன்பே அறிவுரை அளிக்கவும். அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆனால் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவதற்கு பெற்றோர்களாகிய நமது கடமையை நிறைவாக செய்வோம்.
பாதுகாப்பான தீப ஒளி திருநாளை கொண்டாடுவோம் |Let's Make This Diwali Safety, Bright & Beautiful
நம் வீடுகளும் நம் மனங்களும் ஒலி பெறட்டும். மற்றவர்களின் மகிழ்ச்சியையும் மதித்து பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து இந்த தீபாவளியை இனிதாகவும் இனிமையாகவும் மாற்றுவோம்.
பார்க்கலாம்... நலபாகு லட்டு செய்ததற்கான தூர்தர்ஷன் லிங்க் இங்கே
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷
Copy rights @Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்