தீபாவளி ஸ்பெஷல் - நலபாகு லட்டு (Diwali recipe)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி. (happy Diwali)
வண்ண வண்ண பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்பு காரங்கள் என வீடு முழுக்க உற்சாகம் நிறைந்திருக்கும் நேரம் இது. அந்த உற்சாகத்தில் வீட்டிலேயே ஒரு இனிப்பு செய்வது ஒரு பழக்கம் மட்டுமல்ல ... ஒரு பாசமான நினைவுகளும் கூட.
நலபாகு லட்டு - என்ன புதுமை! (Nalavagu Laddu)
- பார்ப்பவர்களை கவரும் லட்டுவின் வண்ண வடிவம் ,
- சுவையும் தித்திக்கும் திகட்டாத இனிப்பு
- வீடு முழுக்க நெய் மணம் பரப்பும் நறுமணம்
- முந்திரி, பாதாம் , பிஸ்தா கலந்த ஆரோக்கிய சுவை
- பச்சைப்பயிறு, கடலை மாவு, ரவை ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இந்த லட்டு இனிப்பு சுவையில் புதுமை உடலுக்கும் நன்மை தரக்கூடியது.
நலபாகு லட்டு செய்முறை (Nalavagu Laddu Recipe )
லட்டு செய்ய தேவையான பொருட்கள் (ingredients)
- கடலை மாவு - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு கப்
- பச்சை பயிறு - ஒரு டேபிள் ஸ்பூன்
- ரவை - ஒரு டீஸ்பூன் ஸ்பூன்
- கான்பிளவர் மாவு - ஒரு டீஸ்பூன்
- ஏலக்காய் பொடித்தது
- முந்திரி, பாதாம் , பிஸ்தா தலா ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கி வைத்தது
- நெய் ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை ( Preparation)
- பச்சைப்பயிறு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடலைமாவை சலித்து அதில் தண்ணீர் கேசரி பவுடர் சிறிது சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும்.
- வாணலியில் எண்ணெயில் காயவைத்து பூந்தி கரண்டி மூலம் பூந்தி போல பொரித்துக் கொள்ளவும் .
- வானலில் ரவையை வறுத்து எடுத்து வைக்கவும்..
- முந்திரிப் பருப்பை நெய்யில் வறுக்கவும.
- சர்க்கரை பாகு தயாரிக்கும் முறை - ஒரு கப் சர்க்கரை அரை கப் தண்ணீர் கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்..
- அதில் பூந்தி ரவை வேக வைத்த பச்சைப்பயிறு சேர்த்து சுண்டியதும் நெய் சேர்க்கவும்.
- ஆறியதும் வறுத்த முந்திரிப் பருப்பு பாதாம் பிஸ்தா சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
இதோ சுவையான நலபாகு லட்டு தயார்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழலாம்.
புதுச்சேரி தூர்தர்ஷன் நிலையத்தின் சிறப்பு விருந்தினராக நான்...
புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தீபாவளி ஸ்பெஷலுக்காக என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். மறக்க முடியாத அனுபவம் ஆக அந்த நிகழ்வு அமைந்திருந்தது. மகிழ்ச்சியும் பெருமையும் தந்த தூர்தர்ஷன் நிலையத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் .
பார்க்கலாம்... நலபாகு லட்டு செய்ததற்கான தூர்தர்ஷன் லிங்க் இங்கே
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா🌷
Copy rights at Balakshitha




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்