அதிகாலை பொழுதினிலே- மேகத்தின் நடுவினிலே,
தேவர்களோ ரதத்திலே- உலா வந்து கொண்டிருக்க ,
அழகிய சிரிப்பொலி காதினிலே -விழக்கேட்ட
தேவர்களின் கண்களுக்கு,
தென்பட்டது ஒரு குழந்தை
பூமிதனில் _ சிரிக்கின்றான் !சிணுங்குகிறான் ! கைகளை ஆட்டி மகிழ்கின்றான் !
கவசகுண்டலம் அவன் வசமே_ காணும் அழகெல்லாம் அவன் வசமே !ஆனந்தம் அடைந்த தேவர்களோ - ஆசையோடு வாரி அணைப்பதற்கு, கைகளை நீட்டி அழைத்தனரே-
"யாசகம் கேட்க வந்தனரோ" என நினைத்த மழலை அவன் ..
தன் ஆபரணத்தை கழற்றி நீட்டுகின்றான் . 'வருங்காலத்தில் கர்ணன் *நானே 'என விழைகின்றான்.
குழந்தையாக இருக்கும்போதே கர்ணன் கொடை வள்ளலாக திகழ்ந்தவன். அதனால்தான் இன்றும் அவன் புகழ் நிலை பெற்று இருக்கின்றது.
ஒருநாள் கர்ணன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையிலே, அவனுக்குள் இருக்கும் ஆத்மாவாகிய தானமும், தவமும், பொழுதுபோக்குக்காக பேசிக்கொண்டே வருகையிலே , நடந்த உரையாடலை சற்றுப் பார்ப்போமா!
தானம் _"பெரும்புகழை அள்ளி
கொடுப்பவன் நானல்லவோ"
தவம் _"தவமின்றி தானமேது ? அனைத்து புகழும் எனக்கல்லவோ!"
தானம் _"ஒருக்காலும் கிடையாது நெஞ்சம் நெகிழ வாழ்த்து பெற்று ,
பூர்வ ஜென்மபாவத்தை தீர்த்து
வைத்து, மோட்சத்திற்கு அழைத்துச் செல்வது , அனைத்து பெருமையும் உடையவன் யாமே ".
தவம் _" ஓ..நீ சொல்வது சரிதான் - ஆனால் தவமின்றி பொன்னேது! பொருள் ஏது? ஆரோக்கியம் என்பதேது!இது மட்டுமன்றி
குழந்தைச் செல்வம் தான் ஏது? பார்க்கப்போனால் பதினாறு பேறுகளையும், (செல்வங்களையும்) பெற்றுத்தருவது நானே ..நானே.. நானே..
(மூச்சு வாங்குகிறது தவத்திற்கு )
நானே பெரியவன்
இல்லை இல்லை
நானே பெரியவன்
வாக்குவாதம் முடிவிலே,
தம்முடைய வேலைகளை
செய்ய மாட்டேன் -என
பிடிவாதம் முத்தி போக
தானமும் , தவமும்செயலற்று
நின்று விட்டன.
காலையிலே கர்ணனாலே
எழுந்திருக்கவே முடியல ..
நமக்கு இவ்வளவு சோர்வு
எப்படி வந்தது ! என்று
ஆச்சரியமுற்ற கர்ணனோ படுக்கையிலே..
ஒரு நாள் , இரண்டு
மூன்று நாள் ஆச்சு .
.இது ஒன்றும் சரிவராது
என,மனமோ -எழுந்தது.
தவத்தையும் - தானத்தையும் அழைத்தது .ஒரு மனிதனுக்கு
இரண்டு கண்கள் போன்றது
தானம் ,தவம் *
என்பதை அறியாமல் போவீரோ..
'தாம் வாழ்க்கையில்
சீரும் சிறப்புமாய்
நிலை பெற்று வாழ
வேண்டும் 'என்று தவமிருந்து
வரம் பெற்றாலும் , தானத்தின் செயல்பாடுகளில் -சிறப்பு இல்லை என்றால் தவம் செய்து
என்ன பயன்!
தானமும் தவமும் தன் தவறை உணர்ந்தன .அடுத்தது என்னநடந்திருக்கும் !
கர்ணன்
எழுந்து விட்டான்
நம் நினைவுகளையும்
தட்டி எழுப்பி விட்டான்..
கர்ணனுக்கு மட்டுமா
கைகள் சிவக்கும்! நம்முடைய
கைகளும் சிவந்த கைகள்தான் . நம்மால் முடிந்த அளவிற்கு
பிறருக்கு உதவி செய்து
மகிழ்ச்சியைக் கண்டு, வாழ்வின் பயனைஅடைவோமே.
Copyrighs at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்