பௌர்ணமியின் சிறப்பு
இந்த பூமி -கடல்- காற்று அனைத்தும் தமக்குள் அடக்கமாக தாமே ஆதிபராசக்தியாக* அன்னையின் அம்சமாக* தாய்மையின் சிகரமாக*இந்த பிரபஞ்சத்தையே ஆளுகின்ற தாய் அபிராமிக்கு பிடித்தமான திதி பௌர்ணமி திதி .
அம்பாளுடைய அழகு போன்று வானில் சந்திரன் பிரகாசிப்பதற்கு ஒரு காரணம் உண்டு
உலகத்திற்கே ஒலி
கொடுக்கக் கூடிய
சந்திரனுக்கு கர்வம்
அதிகமாகி
" ஒளி படைத்த நிலவாக
வானத்திலே* நான் ஜொலிக்க என்னொளி
இல்லையென்றால்
வையகமே
இருண்டு விடும் ..'
எனக் கூறி
சந்திரனோ ஆர்ப்பரிக்க
இதைக்கண்ட எம்பெருமான் விநாயகருக்கோ
கோபம் அதிகமாகி ,
சந்திரனை ஒளி இழக்க
செய்துவிட
அம்பிகையின் உதவியை நாடுகின்றான்சந்திரன்.
கர்வம் உடையவன் முடிவில் செல்லாக்காசாகி விடுகின்றான்-
தன்னடக்கம் உடையவனோ முடிவில்
வான்புகழ் நிலைத்து நிற்பான்*
என உணர்ந்த சந்திரன்,"தம்மொளி
உலகத்திற்கு மட்டும் அன்றி உள்ளத்திற்கும் ஒளி கொடுக்க ஒருபோதும் தவற மாட்டேன்" எனக் கூற, சந்திரனின் வாக்குதனை அம்பிகையோ முன்மொழிய -தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு சந்திரனுக்கு ஒளியை கொடுக்கின்றான் கணபதி.
'தவறு செய்பவர்களை தணடிப்பவள் காளி *என்றால் ,தவறை உணர்கின்ற சூழ்நிலையை உருவாக்கி ,மன்னித்து அருள்வது அம்பிகைக்கு உரிய குணம் அன்றோ* அதனால் தான் பௌர்ணமி அன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தி அம்பிகையிடம் நிறைந்திருக்க சக்தி மண்டலத்தில் அம்பிகை அமர்ந்து கொண்டு ஆட்சி செய்கின்றாள். அன்றைய தினம் அவளை வணங்கினால் இரு சக்திகளின் பலன் கிடைக்கப் பெற்று- நினைத்தது பூர்த்தியாகும்* என்பது ஐதீகம் .
தெய்வ சிந்தனை நிறைந்து இருக்க, அம்பாளின் பாதம் பணிந்து- ஆனந்த பரவசம் கிடைக்க பெற்று, அவள் அருள் பெறுவோமே*
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
தோஷங்கள் அனைத்தும் விலகி குடும்பம் சுபிட்சம் பெற கல்லுப்பு பரிகாரம்🙏🌹👇👇
Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்