புதன், 27 பிப்ரவரி, 2019

சூரிய ஒளி * மருத்துவம்


மலரவன்  மலர்கின்றான்*
எனசேவலோ ஒலி
எழுப்ப -அதைக்கண்ட
மலர்களோ !மலர்கின்ற
அழகைப் பார்த்து
மகிழ்ச்சியுற்ற மாதவனோ
புவியெல்லாம்  ஒளிவீச *
இயற்கை எல்லாம்
எனக்கே சொந்தம்*
என நினைத்த
பறவைகளின்
கீச் என்றஒலி
அலையோ
கானமாய்
காதில் விழ!
கதிரவனின் ஒளி *
கண்களுக்கு புத்துணர்ச்சி 
என அறிந்து காலை வணக்கத்தை கதிரவனோடு பகிர்வோமே..
நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமாக தேவைப்படுவது வைட்டமின்கள் *
வைட்டமின் சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடலில் பல நோய்கள் வருவதற்கு காரணமாகி விடும் .எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன வைட்டமின் என்று அறிந்து உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலும் ..

செலவே இல்லாத கிடைக்கக்கூடிய ஒரே வைட்டமின்தான் வைட்டமின் -D.
வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைக்கின்றது. அதனால் பெறப்படும் நன்மைகள்..
நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாஸ்பரஸ் -கால்சியம் சத்துக்களை உடல் ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.

இதனால் எலும்புகளும் பற்களும் பலம் பெறுகின்றன*
நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது*
கண்பார்வை குறைபாடுகள் நீங்குகின்றது *
அலர்ஜி ,தோல் நோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஒரே தீர்வு சூரிய குளியல்*
அரை மணி நேரம் இளங்காலைப் பொழுதில் நின்றால் பூரணமாக குணமாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சூரிய ஒளியை பெரும்பொழுது இன்சுலின் சுரப்பு தூண்டப்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கின்றது*
இந்த வைட்டமின் டி கிடைக்கக்கூடிய சூரிய ஒளியில் உலாவுவதற்கு ஒரு சில விதிமுறைகள் உண்டு .
வெண்ணிற தோல் உடையவர்கள் சுமார் அரைமணி நேரம் நின்றால் தேவையான வைட்டமின் டி கிடைத்துவிடும் .

அதே நேரத்தில் கொஞ்சம் கருமை நிறம் கொண்டவர்கள் -அதே அளவு வைட்டமின் டி கிடைக்க 3 மணி நேரமாவது சூரிய ஒளியில் உலாவ வேண்டும் .
அதே நேரத்தில் சூரிய ஒளி அதிகமானாலும் ஆபத்துதான் தோல் அலர்ஜி  கூடஏற்படலாம்.
சூரிய ஒளியில் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை வரும்போது தொப்பி
கூலிங்கிளாஸ் சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தி நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம் .

சூரிய ஒளியில் வைட்டமின் டி-யை அளவாக பெற்று நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோமே*
Copyrighs at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக