பசுமை தவழும் சோழ நாட்டிலே சீர்காழி என்னும் ஊரிலே
திருவாதிரை நட்சத்திரத்திலே பகவதி அம்மையின் -மணி வயிற்றிலே உதித்தவர்தான் ஆளுடைய பிள்ளையார்
என்னும் திருஞான சம்பந்தர்*
மூன்று வயது நிரம்பிய மழலையவன் -பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய தந்தை முகம் காணாது கண்களிலே நீர் ததும்ப பவளவாய் அழும் ஓசை குரல் கேட்டு ஓடிவந்த எம்பெருமானின் உமையவளோ! சிவனின் ஆணைப்படி வெள்ளிக் கிண்ணததிலே தாய்ப்பால்தனிலே ஞான அமிர்தம் குழைத்து ஊட்டிவிட- அறிவுச் செல்வத்தை அன்றுமுதல் பெற்றவன்தான் திருஞான சம்பந்தர்*
நீராடி முடித்த தந்தை சிவபாதர் மகன் அருகே வந்தார் ." யார் கொடுத்த பாலை நீ உண்டாய்
என கோபமாக 'கோல் 'கொண்டு கேட்க- வந்தது உமையவளோடு ஈசனே என கூறி புகழ்ந்து பாடல் ஒன்று பாடுகின்றார் ..
'தோடுடைய செவியன் விடை ஏறி' பாடலை கணீரென்று அந்த மூன்று வயது பாலகன் பாடுகின்றான்*
அறிவும் ஞானமும் சிவன்கொடுத்தது *
சொல்லும் குரலும்
சிவன் கொடுத்தது *
பெயரும் புகழும்
சிவன் கொடுத்தது *
அதை அறிந்த பாலகனோ பாட்டும் பக்தியும் மிகுதியாக வேதநெறி தழைத்தோங்க அர்த்தநாரீஸ்வரர் சிவனின் பாதம் பணிந்து புனிதவாய் மலர்ந்தழ பெருமானை போற்றி பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடி சிறுவயதிலேயே தெய்வத்திற்காக திருத் தொண்டு புரிந்தார் திருஞான சம்பந்தர்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்