சனி, 2 மார்ச், 2019

மகா சிவராத்திரியின் விரத முறை



Maha Shivaratri viratham murai
மகா சிவராத்திரி என்றால் என்ன?

மாசிமாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவுதான் மஹாசிவராத்திரி ஆகும்.  மாதம் தோறும் வரும் சிவராத்திரியை மாத சிவராத்திரி என்று அழைப்போம்.   சிவராத்திரிகள் ஐந்து  விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 


ஐந்து சிவராத்திரிகளின் சிறப்பு அம்சம் என்ன ?


 ஐந்து முகங்களைக் கொண்டவன் சிவபெருமான் . ஈசனின் ஐந்து முகத்தை நினைவூட்டும் விதமாகவும், பஞ்ச பூதங்களின் தத்துவங்களை விளக்கும் விதமாகவும் ஐந்துவித சிவராத்திரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 


இவைகளில் ஏதாவது ஒரே ஒரு சிவராத்திரி விரதம் இருந்தாலே போதும்; மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்துவிடமுடியும் என விளக்குகிறார் சித்தர்களின் தலைவரும், தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்தவருமான அகத்தியர். 


மகா சிவராத்திரி விரதம் இருப்பதின் பலன்களை தெரிந்து கொள்வதற்கு முன்பாக மகா சிவராத்திரி என்றால் என்ன என்பது பற்றி முதலில் காண்போம் வாருங்கள்!


 உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை மறந்து இறைவழிபாட்டை மறந்து பாவம் எது !புண்ணியம் எது !என்று பகுத்தறிவிலாது  தவறுகள் செய்கின்ற போது பலவிதமான தீய செயல்களும்  அதர்மங்களும் அதிகமாக ஏற்படுகின்றன..

அதர்மங்கள் அதிகமாக அதிகமாக அழிவுகளும் அதிகமாக ஏற்படுகின்றது.

இந்த அழிவுகள் மட்டுமல்லாது உலகத்தில் இயற்கை பேரழிவுகளும் அதிகமாகி..உலகமே இருள் சூழ்ந்து சுடுகாடு மயமாகி விடுகின்றது  ..

இதனைத்தான் உலகத்தின் முடிவு காலம் அதாவது அழிவுகாலம் என்கின்றோம் .

அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஒளிமயமான ஒப்பற்ற இறைவன் ஆதிக்காதியாய்  முடிவுக்கு முடிவாய்..

  மறைகளும் கடந்து நின்ற  இறைவனாகிய சிவபெருமான்* சினம் கொண்டு  ஊழி கூத்தாடுகின்றார் ..

அவ்வாறு அருள் நடம் புரியும் இறைவனை அன்னை உமாதேவி ஆனவள்..

உயிர்களிடத்திலே இரக்கம் கொள்ளுமாறு வேண்டி பூஜை செய்கின்றார் ..

பூஜைகளை ஏற்றுக்கொண்டு சிவபெருமானும் உயிர்களிடத்தில் கருணை கொண்டு மறுபடியும் புதிய உலகத்தை படைக்கின்றார்.

புதிய உலகத்தை படைக்கும் அந்த தினமே மகா சிவராத்திரி  ஆகும்.

தனித்து நின்ற உமையானவள் சிவபெருமானை பூஜித்து சிவ பெருஞ்சோதியில்  சுடரொளியில்* ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி தருகின்றார்.

புதிய உலகத்தை படைத்து சிவபெருமான் சக்தியோடு சேர்ந்து காட்சி தருகின்ற அந்த தினத்தில் ..

 நாம் இறைவனோடு இரண்டற கலந்து இறைவனோடு ஐக்கியமாகி தூய மனதோடு பக்தியோடும் வழிபட்டால்

நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி  புண்ணியத்தை பெறும் பாக்கியத்தை சிவபெருமான் நமக்கெல்லாம் அருளுவார் என்பதே  மகா சிவராத்திரியின் சிறப்பாகும்.

தனித்து நின்ற உமையானவள் சிவபெருமானை பூஜித்து சிவ பெருஞ்சோதியில்* சுடரொளியில்* ஐக்கியமாகி சிவசக்தி சொரூபமாக காட்சி தருகின்றார்.







Copyrighs at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்