திங்கள், 8 ஏப்ரல், 2019

சித்திரை மாத விசேஷங்கள்*


                                                    சித்திரை மாதத்தின் சிறப்பு*



சித்திரை திங்களே வருக வருக 
கோடி மலர் கொண்டு வாழ்த்த வருக.. 
வருடம் முழுதும் ஆனந்தமாய் வாழ -சிறப்பான செய்தி
பல சொல்க -சொல்க.


வாழையடி வாழையாக வளர்க - வந்தெமை வாழ்த்தி பலன் அருள்க அருள்க .

சித்திரை மாத திருநாள் 


சித்திரை மாத திருநாள் சிறப்பான வாழ்க்கைக்கு அடியெடுத்து வைக்கக் கூடிய முதல் நாள் *தமிழ் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுகூடி வாழ்த்துகின்ற பெருநாள்.

குல தெய்வத்தை நினைத்து படையல் வைக்கும் ஒரு திருநாள்.

உழவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் நன்னாள்.

சித்திரை மாதத்தில் வரக்கூடிய விசேஷ தினங்கள்..


24-4- 2021  புதன்கிழமை அன்று ஸ்ரீராம நவமி

அன்றைய தினத்தில்   நாம் பெருமாளின் காலை பதம் பற்றி அவன் நாமம் வரலாறுகள் செவிகேட்டு , ஏழு பிறப்புக்கும் இனிதான வாழ்வு பெற்று மேன்மையான செல்வங்கள் பல பெற்று, இந்திரலோகத்தில் இடம்பெற்று, இனிதான வாழ்க்கை பெறுவோம்.


24-4-2021 சனிக்கிழமை ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் 
என மதுரையிலே தீபாவளி திருவிழா*

மதுரைக்கு சென்று கள்ளழகர் வழிபாடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணக்கோலம் தரிசித்து வந்தால் திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது சிறப்பு *

அதை தொடர்ந்து..

26-4-2021 திங்கட்கிழமை 

சித்ரா பவுர்ணமி.

சித்திர குப்தன் எழுதும் பாவ கணக்குகள் விலகி புண்ணியத்தை அடைகின்ற திருநாள் என்பதே சித்ரா பௌர்ணமியின் சிறப்பு.


26,27 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்




என  பல சிறப்புமிக்க சுப நாட்கள் மலரக்கூடிய இந்த சித்திரை மாதத்தில் ..முக்கியமாக அம்மனுக்கு ஏற்ற ஒரு மாதமாக புகழ்பெற்றது சித்திரை மாதம்.

இந்த சித்திரை மாதம் முழுவதும் அம்மன் அவள் அழகும்* ஆனந்தமும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்யும் நேரம் இது  .

கோவில்களில் அம்மன் அவள்
அபிஷேகம் ,அலங்காரம் , பொங்கல் வைத்தல் ,கூழ் ஊற்றுதல் ,கரகாட்டம், உடுக்கை சத்தம் ,மாவிலை  தோரணங்களோடு   மிக அழகாக காட்சி அளிப்பாள் .

சித்திரைதிங்களை கோடி மலர் கொண்டு வரவேற்று - இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் .பல மங்கல
காரியங்கள் அனைத்தும் இல்லத்தில் நடைபெற வேண்டும்.

சித்திரை தொடக்கம்  சிறப்பான மாதம் சிந்தையில் குளிரவைக்கும் மாதம் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் மாதம். இந்த மாதத்தில் நல்வழியில் நாம் நடந்து நற்பண்புகள் நம்மை சார்ந்து நற்கருத்துக்கள் பலகற்று -நல்வாழ்வு நாம் பெற்று ,வாழ்வோம் வாழ்ந்த வாழ்ந்த பயனை அடைவோம்.


சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு  புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇

https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html

திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇

https://youtu.be/0p5op0-Zjwk

சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇

https://youtu.be/pJIjgbDhT_4

Copy rights at Balakshitha.



Copy rights at Balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக