இனிது இனிது வாழ்க்கை இனிது* அதைவிடஇனிது- மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் இனிது* அதனினும் இனிது -எண்ணங்கள் வடிவாக்கம் இனிது அனைத்திற்கும் இனிது தெய்வத்தின் அருள் கிடைப்பது இனிது அன்றோ!
அரைகுறை அறிவு என்பது அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்தை தரும் -என்பது பழமொழி
ஒரு செயல் சிறப்பாக
அமைவதற்கு அதற்கான
செயல் பற்றிய முழு விபரங்களையும் முழுமையாக அறிந்து கொண்டு செயல்பட்டால் -வெற்றி நிச்சயம்*
இனிது இனிது வாழ்க்கை
இனி தன்றோ part-1🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2018/11/blog-post.html
இனிது இனிது வாழ்க்கை இனிதுதன்றோ part-3🍀🌹🍀👇👇
http://balakshitha.blogspot.com/2019/03/blog-post_6.html
அந்த செயல் முழுமை பெற மிக சிறப்பான வழிமுறைகள்
1- நம்மில் பலருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செயல் இனிது*
2- அனுபவம் பெற்ற மனிதரிடம் பகிர்வது இனிது*
3- செயல் வடிவாக்கத்தில் நேர்மை இனிது *
4- பற் பல சோதனை முறியடித்து வெற்றி பெறும் சுகம் இனிது *
5- இறைநம்பிக்கை கொண்ட மனம் வெற்றிக்கு இனிது*
இவையெல்லாம் கனிந்து வெற்றிக்கனியை தொடுவதற்கு சில பல காலம் ஆனாலும் தளராது முயற்சி செய்தால்- வெற்றி நிச்சயம் அதற்கான பலனை இறைவன் நிச்சயம் அளிப்பான்.
இவையெல்லாம் அடைந்த பின் நாம் அடுத்து இருக்க போவதற்கான வழி முறைகளை காண்போமே..
பெற்றோரை போற்று
என்றென்றும் மனமே*
அடுத்து இறைவனை
அகம் கொண்டு
காண்கவென் மனமே*
கர்வம் எனும் ஆணவத்தை
அழித்து விடு மனமே*
கர்ணனைப் போல் வாழ்ந்து பல நற்செயல் புரிந்து விடு மனமே* கோபத்தை குறைத்து விடு மனமே* புன்னகைக்கு இடம் கொடுத்து விடு மனமே*.
சிந்தனையில் தெளிவு கொண்டு வாழ்க என் மனமே* இறைவனிடத்தில் இனிமை கண்டு வாழ்க்கையிலே அமைதி கொண்டு வாழ்க வாழ்க என் மனமே.
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக