ஓம் ஒப்பிலா ஈசனே போற்றி*
ஓம் முதல்வனே போற்றி*
ஓம் முக்கண்ணனே போற்றி*
ஓம் அப்பனே போற்றி*
ஓம் அருள்வாய் போற்றி போற்றி*
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் * அந்த திருமண வாழ்க்கை கனிந்து மனம் போல் மாங்கல்யம் அமைந்து -அந்த மாங்கல்யம் தீர்க்க சுமங்கலி பவ * எனும் ஸ்லோகம்- நம் வாழ்க்கையில் என்றும் நிலையாக வேண்டி அந்த வேண்டுதலை ஏற்று அருள்கின்ற ஒரு அற்புத தலமே மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் *
மீன் போன்ற கண்
கொண்ட மீனாட்சி
சுந்தரேஸ்வரரை
திருமணம் புரிந்த
சிறப்பான தல வரலாறுதனை அறிந்து கொண்டு மனத்திற்கு பிடித்தமாக திருமண வாழ்க்கை அமைவதற்கான வழிமுறைகளை அறிவோமே ..
பாண்டிய மன்னன்
மலயத்வஜன்- காஞ்சனை தம்பதிக்கு குழந்தை வரம் வேண்டி
' காமேஷ்டி யாகம் '
நடத்துகையிலே யாக
குண்டத்தில் அழகு
மலராக *
பிஞ்சு கைகள் சிலம்பாட*
மீன் போன்ற
கண்களிலே
நீர் ததும்ப *
தாமரை மொட்டு
வாயிதழாட *
குழந்தை வடிவத்தில்
அம்மையோ காட்சி தர..
ஆனந்த பரவசம்
அனைவரின் நெஞ்சிலும்
ஊஞ்சல் ஆட ..அள்ளி
அணைத்து மகிழ்ச்சியிலே
தடாதகை எனும்
பெயரோடு மீனாட்சி
வளர்ந்தாளே மதுரையிலே*
கண்ணுக்கு இனியவளாய்
கன்னியாய்
வளர்ந்தவளோ
வீரத் திருமகளாய்
உலகத்தையே வசமாக்க
உலா வருகையிலே..
கைலாய மலையோ
கண்ணிலே பட்டுவிட
போரிட வந்தவளோ!
நாணத்தோடு தலைகவிழ்ந்தாள் சிவனின் பார்வையிலே..
பித்தனாக -புலித்தோல்
போர்த்தியவனாக
சுடுகாட்டிலே
திரிபவனாக -மண்டையோடு அணிபவனாக
காட்சியளித்த
எம்பெருமானோ! மீனாட்சியின்
கண்களுக்கு சுந்தரனாக
காட்சி தர. .
அந்நிமிடமே மீனாட்சியின்
பார்வையிலே சொக்கியதால் சுந்தரேஸ்வரர்* எனும்
பெயர் பெற்றவர் ஆகிறார் .
பிரம்மா *விஷ்ணு* தேவர்*
என படை சூழ மாப்பிள்ளையாக சென்றவரோ மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தருகின்றார் மதுரையிலே.
பிரதோஷம் அன்று
சிவனும் *சக்தியும் *ஒன்றாகி
நடனமாடும் அற்புத தருணம்
கொண்ட சிறப்பான தலமே
மதுரை மீனாட்சி திருக்கோவில்*
மனதிற்கு பிடித்தமான
மணவாளன்*
கிடைப்பதற்கும்
மனதிற்கு பிடித்தமான
மனைவி * அமைவதற்கும்
மிக அருமையான
தெய்வ வழிபாடு
பிரதோஷம்* அன்று
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து 5 அகல் தீபம்* ஏற்றி
வந்தால் மூன்று பிரதோஷத்துக்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்*
என அறிந்து அதன்படி நடந்து வாழ்க்கையில் சிறப்பை அடைவோமே.
ஜோதி எனும்
ஒளியிலே ஒளிர்ந்து*
ஞான ஒளி
நமக்கெல்லாம் அளித்து *
தவறு செய்யும்
மனதினை மறுத்து *
உண்மை எனும்
சொல்லிலே ஐக்கியமாகி*
பக்தி எனும் மார்க்கத்தை
நமக்குள்ளே புகுத்துகின்ற
இறைவனடி போற்றி போற்றி*
சொந்த வீடு மனை அமைவதற்கு பத்து தெய்வீக வழிபாடுகள் 🍀🌹🍀🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
விரைவில் திருமணம் கைகூட தெய்வ வழிபாடுமற்றும் பரிகாரஸ்தலங்கள்🌹👇
https://amzn.in/ibYVUJD
Copy rights at Balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்