சனி, 31 ஆகஸ்ட், 2019

விநாயகர் சதுர்த்தி வழிமுறைகளும் விரத பலன்கள்

விநாயகர் சதுர்த்தி வழிமுறைகளும் சிறந்த பலன்களும்

(Vinayagar Sathurthi)





மனம் இனிக்க, மங்கல நிகழ்ச்சிகள் அனைத்தும்  வீட்டினிலே இனிதேற, மாவிலை தோரணங்கள் மலர்களோடு சேர்ந்து இசைந்தாட, நாதஸ்வர இசையோ கானமழை பொழிந்தாட, விநாயகப்பெருமானை இந்த விநாயகர் சதுர்த்தியில்  வருக வருக என வரவேற்போம்.

  வருடம் முழுவதும் நாம் பெருமானை தேடி  கோவிலுக்கு செல்கின்றோம். ..ஆனால் விநாயகப்பெருமானே வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று நம் இல்லம் தேடி வருகின்றார் .

எப்படிப்பட்டகோலத்திலே வருகின்றான்! ஆடம்பரம் எதுவுமின்றி எளிமையான கோலத்திலே களிமண் என சொல்லக்கூடிய மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் பெருமானாக இல்லத்துக்குள் நுழைகின்றார்.  

அதற்கான தத்துவத்தையும் மிக அழகாக கூறுகின்றார் . 




'மனிதபிறவியில் பிறந்த நாம் என்றாவது ஒரு நாள் முடிவு மண்ணிலே என்பதை உணர்ந்து அகங்காரம் ஆணவம் அனைத்தையும் விடுத்து நல்லொழுக்கம் பக்தியோடு வாழ்ந்து முடிவில் என்னோடு ஐக்கியமாகுங்கள் 'என்று மிக அழகாக உணர்த்தவே களிமண் கோலத்தில் காட்சி தருகின்றார் விநாயகப் பெருமான் .

 நினைத்த காரியம் ஜெயமாக மஞ்சள் பிள்ளையார் வழிபாடு🙏🌹🍀🌹👇👇
http://balakshitha.blogspot.com/2020/03/blog-post_15.html

சங்கடகர சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை 🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2018/09/blog-post.html

சங்கடங்கள் அனைத்தும் தீர்ப்பவன் விநாயகப் பெருமான் -அவனே முக்கண் முதல்வனாக முப்பெரும் தலைவனாக  திகழ்கின்றான். 

அருகம் பூமாலையை சாற்றினால் ஆனந்தம் அடைகிறான். சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்போருக்கு அழியாத செல்வத்தை கொடுக்கின்றான்.அப்படிப்பட்ட மகத்தான விநாயக பெருமானின் அவதார தினம் இன்று.

விநாயக பெருமானுக்கு மிகவும் பிடித்தமான மலர்கள் - தும்பைப்பூ செம்பருத்தி மலர்- சங்குபுஷ்பம் எருக்கம்பூ -மாவிலை -அருகம்புல் வில்வ இலை -இவைகளால் விநாயக சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆனந்த வாழ்க்கைக்கு அருள்புரியும் அனந்தனவன் அருள் பெற்று சிறப்புடன் வாழ்ந்திடவே ஏற்புடைய தருணம் இது. 

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று ..

விநாயகருக்கு பிடித்தமான நெய்வேத்தியம்- சர்க்கரை -கரும்பு அவரை- துவரை -பழங்கள் -பருப்பு-நெய்- இளநீர் -தேன் -பயிறு அப்பம் -பச்சரிசி புட்டு -வெள்ளரி பழம் -கிழங்கு -அன்னம் -எள்- பொரி அவல்- கொழுக்கட்டை -கடலை முதலியன வைத்து படைத்தால் விநாயகர் மனம் நிறைந்து வாழ்த்துவது மட்டுமல்லாது நாம் கேட்கும் பலன்கள் அனைத்துப் கொடுக்கும் நேரம் இது. 
அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று..

திருமணம் விரைவில் நடைபெறுவதற்கான  வழிபாடு🌹👇👇



பச்சரிசிமா எனும் உடல் தனிலே சிந்தையை தெளிய வைக்கும் எள்ளோடு - தெய்வீகம் எனும் தேன் பாகு மனதோடு கூடிய பூரணம் உள் வைத்து கொழுக்கட்டை தனை செய்து நான் வைத்து படைத்தேன் என் பெருமானே !கொழுக்கட்டைப் பிரியனே ! நீ எனக்கு துன்பமில்லா இன்பவாழ்வுதனை கொடுப்பாயே' என வேண்டுகின்ற நேரமிது.. 

விநாயகர்பெருமானின் அவதார தினம் இன்று.

செப்பு தகட்டில் வரைந்து விநாயகர்யந்திரம் -விநாயகர் சதுர்த்தி அன்று வைத்து பூஜை செய்து வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டனால் தோஷங்கள் திருஷ்டிகள் எதுவும் நெருங்காது என்பதால் ..
தோஷங்கள் அனைத்தும்
விலகிடவே- 



கண்திருஷ்டி இல்லாது காத்திடவே தெய்வீக சக்தி வீட்டினில் நிறைந்திடவே சுபமான சுகம் அனைத்தும் கொடுப்பாயே. என விநாயக பெருமானை வேண்டி  அவ்வாறு செய்து அதற்கான பலனையும் பெறலாம்.

அருகம்புல் மாலைக்கு ஒரு தனி சிறப்பு உண்டு ..

ஆணவம் கொண்ட எமனுடைய மகன் அனலாசுரனை விநாயகரும் கோபம்கொண்ட விழுங்கிவிட அனலின் வெப்பம் தாங்காது விநாயகரும் திண்டாட- கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்தும் பலனில்லாமல் போக.. 

முடிவில்அருகம்புல்லே வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை விநாயகருக்கு அளித்தது. அருகம்புல்லின் சிறப்பினை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக- 

தம்மை வழிபடும் பக்தர்கள் அனைவரும் அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் வெப்பமெனும் துன்பத்தை நீக்கி குளிர்ச்சியான இன்பகரமான வாழ்க்கையை கொடுத்து நான் அருள் புரிவேன் என்கின்ற தத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்துகின்றார் விநாயகப்பெருமான் .

அப்படிப்பட்ட மகத்துவம் வாய்ந்த  விநாயகப் பெருமானின் அவதார தினம் இன்று..

பெருமானுக்கு மிக பிடித்தமான மந்திரம் ஸ்ரீ கணேச மந்திரம்.. விநாயகர் சதுர்த்தி அன்று ஐந்துமுக விளக்கேற்றி ஒளிர்கின்ற சுடர் தனிலே ..
 விநாயகப்பெருமானின் முன்பு  வடக்கு நோக்கி அமர்ந்து சொல்லக்கூடிய ஒரு முக்கியமான ஸ்லோகம் தான் ஸ்ரீ கணேச மந்திரம்   தொடங்குகின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கக்கூடிய ஒரு மந்திரமே ஸ்ரீ கணேச மந்திரம் .

வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியை கொடுக்க கூடிய  மந்திரமே ஸ்ரீ கணேச மந்திரம் .ஓம் எனும் மந்திரத்துடன் விநாயகரின் திருநாமங்கள் சேர்ந்து உச்சரிக்கும் பொழுது - 

அந்த தெய்வீக அதிர்வலைகள் நம் ஆத்மாவின் உள் சென்று தீய சக்திகள் விலகி நல்ல சிந்தனை கிடைத்து நேர்வழி பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது. 

ஆதலால் கணேசன் துதிகள் அனைத்தும் விநாயகர் சதுர்த்தி அன்று பாடினாலும் -ஸ்ரீ கணேச மந்திரத்தையும் சொல்லி விநாயகனின் அருள் பெற்று வாழ்க்கையில் சிறப்பை அடையலாம் .

நம்முடைய நல்ல மனதில்
இறைவன் இருக்கின்றான் .
நாம் காட்டும்  அன்பிலே
இறைவன் வாழ்கின்றான் .
நாம் காணும் அமைதியிலே

இரண்டற  கலக்கின்றான்.
தான தர்மத்திலே  நம்மோடு இறைவனும் இசைகின்றான். முடிவிலே  நாம் விரும்பும் மோட்சத்தையே நமக்கு தருகின்றான்.

நம்முடைய மனம்-சிந்தை -புலன் அனைத்தும் கணேசனின் திருநாமம் பாடி விநாயக சதுர்த்தியை மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வோமே.
ஓம் கணேசா சரணம் சரணம் சரணம்.

Copy  rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்