சனி, 21 செப்டம்பர், 2019

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா


திருப்பதி ஏழுமலையான்



திருப்பதி மலை வாழும் வெங்கடேசா -திருமகள் மனம் நாடும் சீனிவாசா- நினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா -மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா -உரைத்தது கீதை எனும் தத்துவமே -அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே  .


நாராயணனின் நாமத்தை சொல்பவர்க்கு யாதொரு குறையும் வராது .

நாராயணன் புகழ்
பாடுபவருக்கு யாதொரு தீங்கும் வாராது


நாராயணனின் இருப்பிடமே திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கட மலை 


கோடி கோடி மக்கள் சென்று எம்பெருமானைத் தரிசித்து வணங்கி புண்ணிய மலை .ஏழு மலைகளை சுற்றி வந்து அந்த பெருமாளை தரிசிக்கும் புண்ணிய மலை.

நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீர்க்கும் புண்ணிய மலையும் திருவேங்கட மலையே. தரிசிக்கும்போது சாந்தமான ஒரு அமைதியை கொடுக்கும் ஒரு அற்புதமானமலை திருவேங்கட மலை .      


  கீழ்திருப்பதி மேல் திருப்பதி என புகழ் பெற்ற ஸ்தலமாக உருவாகி இருப்பது தனி சிறப்பு.


 திருவேங்கட மலையில் கோவிந்தனுக்கு விரதமிருந்து கீழ்திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு செல்கின்ற பொழுது மனம் முழுக்க முழுக்க நாராயணா நாராயணா என்று புண்ணிய நாமத்தை உச்சரித்துக் கொண்டே செல்கின்ற பக்தர்களை அன்போடு ஆட்் கொள்கின்றான் எம்பெருமான்.

  குளிர்காற்றும் -மலையில் சூழலும் மலையின் இயற்கையின் அழகு கொண்ட மலைக்கு நாம் செல்லும்போது ...

 நம் துன்பங்கள் அனைத்தும் விலகி புத்துணர்ச்சி பெற்ற மனிதனாக நம்மை மாற்றும் என்பது திருப்பதி மலையின் மகத்துவம் தனித்துவம் அதுவே நமக்கு எம்பெருமான் கொடுத்த மாபெரும் பாக்கியம்.




கோவிந்தனை நாம் தரிசிப்பது என்பது நாம் நம்முடைய வாழ்க்கையிலே பெற்ற ஒரு பெரிய வரமாகும் .கோவிந்தனை தரிசிக்கும் பொழுது ஏற்படும் அந்த இன்பமே என்றும் நிலையானது‌ தெய்வீகமானது

மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது.பரம கதியை கொடுக்கக் கூடியவன் நானே -என்ற அந்த புன்னகை நிறைந்த முகத்தோடு காட்சி தரும் எம்பெருமானின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது.


"வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் உம்முடைய பாதங்களை சரணம் "என சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பெருமாள் தரிசனம் கிடைத்ததை நினைத்து மனமோ பக்தியால் நிறைந்திருக்க..

கண்களில் இருந்து கண்ணீர் மல்க நின்று கொண்டிருக்கும் அந்த கணபொழுதுதான் இறைபக்தி என்பதாகும்.

‌ 

எம்பெருமானுக்காக பிரம்மாவால் ஏற்படுத்தப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படும் விழா பிரம்மோற்சவ திருவிழா.


திருப்பதி தலத்தில் புரட்டாசி மாதம் 9 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த பிரம்மோற்சவத்தின் பொழுது-

ஹம்ச வாகனம் -சிம்ம வாகனம் அனுமந்த வாகனம் -புஷ்பவனம்
கருட வாகனம்- முத்துப்பந்தல் வாகனம் -ரிஷப வாகனம் என்று பல வாகனங்களில்  வெங்கடேச பெருமாள் எழுந்தருளி காட்சி தருகின்றார்

அப்படிப்பட்ட தரிசனங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும்.

குழந்தைகள் நல்ல அறிவாற்றல் பெற்று படிப்பதற்கு புதன் நவக்கிரக வழிபாடு
🌹🍀🌹🍀🌹🍀👇👇👇👇👇👇


முத்து பந்தல்வாகனத்தில் சீனிவாச பெருமாள் காட்சி தருகின்ற போது முத்து எப்படி வெண்ணையாக உள்ளதோ அதுபோலவே பக்தர்களின் கூட்டமும் வெண்மையாக அதாவது தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார் .

அந்த பக்தர்களின் மனதை தான் நான் விரும்புகின்றேன் -என்று கூறுகின்றார் .

நல்ல மனதோடு- நல்ல பண்போடு -மனம் நிறைந்த பக்தியோடு -எனக்கு சாத்துகின்ற துளசிமாலையை எனக்கு மிகவும் பிடித்தமானது -அப்படிப்பட்ட தூய மனம் உடைய பக்தர்களே மனித பிறவியின் பயனை அடைந்து கடைசியில் தம்மை வந்து அடைவார்கள் -என்பதே பெருமானுடைய வாக்கு.

திருநாமம்


கண்ணனின் திரு நாமத்தை உச்சரித்தால் போதும் உடைந்த மனமும் உவகை கொண்டு எழுந்து விடும்

பகவத்கீதை


திரு கண்ணபிரான் திருவாய் மலர்ந்து அருளிய பகவத்கீதை நன்னெறி நூலை கண்ணால் பார்த்தாலே போதும்.. கவலை கொண்ட மனதில் புத்துணர்ச்சி புகுந்துவிடும் .

பக்தி


பக்தி எனும் சுவாசத்தை நுகர்ந்தாலே போதும் -சூரிய பலம் சந்திர பலம் சகல பலமும் கூடிவிடும் . 

சகஸ்ரநாமம்


பெருமாளின் சகஸ்ரநாமம் எனும் இனிய கானத்தை கேட்டாலே போதும் சகல ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் பெற்ற பலன் கிடைத்துவிடும்.

மனம்


 கண்ணனின் பாதத்தினை கரங்களால் தொட்டு வணங்க வேண்டும் என மனம் நினைத்தாலே போதும் நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் .

ஓம் வேங்கடேசாய 

நம ஹ


என் கண்ணை நான் மறந்து -உன்னிரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு -நின் கண்ணால் புவியெலாம் நீயெனவே நான்கண்டு நிறைவு கொண்டேன் -கோவிந்தா எனக்கு மோட்சத்தை அருள்வாயே.


சொந்தமாக வீடு மனை அமைவதற்கான தெய்வீக வழிபாட்டு முறைகள் புத்தகமாக Amazon Kindle app  டவுன்லோட் செய்து படித்து பயன் பெறுக 🙏🌹🍀🌹👇👇👇👇


திருமணத்திற்கு மாங்கல்யம் எந்தநாள் எப்படி யாரிடம் செய்வதற்கு கொடுக்க வேண்டும்🙏🌹👇


https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html


Copy rights at Balakshitha






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்