ஒருமுறை சைதன்யர் என்ற ஞானி கோவிலுக்கு செல்கின்றார்..
ஒருவன் பகவத்கீதை படித்துக்கொண்டிருந்தான்.அவனை பார்த்த ஞானி- அவனுடைய ஆர்வத்தை பாராட்டி விட்டு நகர்கின்றார்..
அவருடைய கண்ணில் மற்றொருவன் தென்படுகின்றான். அவனுடைய கையிலும் பகவத்கீதை புத்தகம் இருந்தது..
ஆனால் அதில் ஒரு பக்கம் கூட அவன் புரட்ட வில்லை. அவனுடைய கைகள் பகவத்கீதையின் மேல்பாகத்தை தொட்டுக் கொண்டிருந்தது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
அவனிடம் சைதன்யர் "ஏனப்பா கீதையை புரட்டாமல் இருக்கின்றாய் ஆனால் உன் கண்ணில் கண்ணீர் வழிகின்றது -என்ன காரணம்"என்று கேட்கின்றார் அதற்கு அந்த பக்தன் பதில் சொல்கின்றான்...
" சுவாமி எனக்கு கீதையில்- ஒரு பொருள் கூட விளங்க வில்லை.. இருப்பினும் இந்த புத்தகம் என்னுடைய கையில் இருக்கும் போது என்னுடைய மனமானது நேர்வழிப் பாதையில் செல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. என்னுடைய மனக்கண்ணில் முன்பாக கண்ணபிரான் தேரில் அமர்ந்து கொண்டு அர்ச்சுனனுக்கு ஞானோபதேசம் செய்யும் காட்சி தென்படுகின்றது . அது பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால் என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிகிறது என்கின்றான் பக்தன்.
இதுதான் உண்மையான பக்தி ஆகும் இந்த பக்தியை அனைவரும் உணர்ந்துவிட்டால் மனமானது நல்வழி பாதையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.
பக்தி முக்தி பெற இனிதான 5 வழிகள்..
சிறப்பு- 1 மனதை ஒருநிலை படுத்துங்கள்.
சிறப்பு -2 காம குரோதத்தை விலக்குங்கள் .
சிறப்பு-3 பொருளின் மீது பற்று இல்லாது இருங்கள்.
சிறப்பு -4 மௌனத்தை கடைபிடியுங்கள்.
சிறப்பு- 5 நடப்பது அனைத்தும் அவன் செயலே -என நினையுங்கள்.
Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்