இந்த பூமியில் நம்முடைய பிறப்பு என்பது இறைவன் கொடுத்த வரம். அந்த வரம் இனிதாகி- நற்பண்புகள் நிறைந்த அர்த்தம் நிறைந்த வாழ்க்கையாக தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி கண்டு முடிவிலே ஆன்மீகத்தில் லயித்து தெய்வத்தின் பாதம் பணிந்து- நற்கதி அடைய வேண்டும் என்பதே- இந்த மனித பிறவியின் சாராம்சம் .
அப்படி நாம் வாழ்வதற்கு இந்த பூமியில் இடம் வேண்டும் .நமக்கு சொந்தமான ஒரு இடம் வேண்டும். பூர்வீக மனை வீடு அமைய பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வது என்பது பூர்வ ஜென்ம பாக்கியம்
ஆனால் சிலருக்கோ அந்த பாக்கியம் இல்லை என்றாலும் நம்மால் முடியும் என்று முழு முயற்சியோடு இறங்கினால் நிச்சயம் அந்த பாக்கியத்தை பெறலாம் -என்பது திண்ணம்.
அதிக உழைப்பு இருந்தாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே நமக்கு மனை வீடு அமையும்.
அவ்வாறு தெய்வத்தின் அருளை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு அதன்படி விரதம் இருந்து வழிபட்டால் நமக்கு சொந்தமாக அழகிய வீடு அமையும் .
வாழ்வில் யான் இன்பம் பெற - கணபதி நாமம் தனை 108 முறை போற்றிடவே அருள் புரிவாயே விநாயகா - நின் பாதம் பணிந்தேன் ஆசியுரை வழங்குவாயே கணநாதனே- நினைத்த காரியம் ஜெயமாக முதற்கண் விநாயகரை வணங்கி - ஆனந்த மிகுதியொடு
ஓம் கம் கண் கணபதயே நமஹ-எனும் இந்த கணபதி மந்திரம் நாம் வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு -
அற்புதமான மந்திரம் 108 முறை போற்றி வழிபடக்கூடிய இந்த சுலோகத்தை-வெள்ளிக்கிழமை தோறும் தீபம் ஏற்றி..
ஒரு வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வடக்கு நோக்கி மனையிலே அமர்ந்து காரியம் நிறைவேறும் வரை சொல்வது என்பது சிறப்பு.
நாம் நினைத்த காரியம் ஜெயமாகும்.
வீடு மனை வாங்கும் யோகம் பிறக்கும் வாழ்க்கையிலே சிறப்பு பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு கணபதி நாமத்தினை வெள்ளிக்கிழமைதோறும் 108 முறை போற்றி வழிபடுவோம்.
Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்