தீராத நோய்கள் தீர உதவும் திருநீற்றுப்பதிகம்
ஈசனின் திருப்புகழை பாடிய திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் பாடிய தீராத நோய்களையும் தீர உதவும் திருநீற்றுப்பதிகம் தொடர்ந்து 21 நாட்கள் படித்து வந்தால் தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
நாள் -1
மந்திரமாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு
துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு
சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தில் உள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு
முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திரு ஆலவாயான் திருநீறே.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்