ஞாயிறு, 15 மார்ச், 2020

நினைத்த காரியம் ஜெயமாக மஞ்சள் பிள்ளையார் வழிபாடு


காரியம் ஜெயமாக மஞ்சள் பிள்ளையார் வழிபாடு

 இந்த பூமியில் நம்முடைய பிறப்பு என்பது ஒரு வரம் .எந்த ஒரு காரியமும் நம்மால் முடியும்..

 என்ற நம்பிக்கையோடு இறங்கினால் அந்த காரியம் ஜெயமாகும் .


நாம் என்னதான் விழுந்து விழுந்து காரியத்தில் இறங்கினாலும் தெய்வத்தின் அனுகிரகம் இருந்தால் மட்டுமே நமக்கு அந்த காரியம் கைகூடும்.


ஒவ்வொருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு சங்கடம் இருக்கும் ..அந்த சங்கடங்கள் அனைத்தையும் விலகி நல்ல அனுக்கிரகத்தை கொடுப்பவன் தான் கணபதி.

சங்கடகர சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை 🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2018/09/blog-post.html

 எந்த காரியமும் தொடங்கினாலும் விநாயகரை தான் முதலில் வணங்க வேண்டும்.

 நாம் ஒரு காரியத்தை மனதில் நினைக்கின்றோம்.. அந்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என்றால் முதலில் விநாயகரை தான் வணங்க வேண்டும்.


 நான் சொல்லும் இந்த முறையை பின்பற்றி பாருங்கள்.5 வாரத்திலேயே உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.


 அமாவாசை முடிந்த வளர்பிறை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கலாம். அல்லது சங்கடகரசதுர்த்தி அன்றும் ஆரம்பிக்கலாம்.

 வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சுக்கிர ஓரையில் நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி அடைய கூடிய அற்புதமான நேரம் .



முதல் நாளே பூஜை அறையில் பூ போடுவதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் முடித்து வைத்து விடுங்கள் .

மறுநாள் ஸ்நானம் செய்த பிறகு பூஜை அறையில் மலர்களால் அலங்கரித்து ஐந்து முக விளக்கை ஏற்றி காலை   6 மணியிலிருந்து 7 மணிக்குள் வாசனை திரவியங்கள் வத்தி சாம்பிராணி தெய்வ பாடல்கள் அனைத்தும் தொடங்கிய பிறகு..

 ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள் .வெற்றிலையின் மேல் நீர் தெளித்து -பூஜை அறையில் ஒரு சின்ன மனைப் பலகையின் மேல் வைத்து ..


சிறிது மஞ்சளை தூவி அதன் மேலே மஞ்சள் பிள்ளையார் பிடித்து வையுங்கள் .நீங்கள் நினைத்த காரியம் ஜெயம் ஆக வேண்டும் என வேண்டிக் கொண்டு ..

பூ வைத்து வெற்றிலை பாக்கு தாம்பூலம் ஒரு இனிப்பு சர்க்கரை பொங்கல் அல்லது  கேசரி வைத்து படைக்கலாம் .


வடக்கு நோக்கி மனையிலே அமர்ந்து 'ஓம் கம் கணபதயே நமஹ' எனும் கணபதியின் நாமத்தை 108 முறை கையில் உதிரி மலர்களோடு சொல்லுங்கள் .



பிறகு அந்த மலர்களை மஞ்சள் பிள்ளையாருக்கு அர்ச்சனையாக தூவி உங்கள் வேண்டுதலை வைத்து பூஜையை நிறைவு செய்யலாம்.

அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து அதேபோல படைத்துக்கொண்டு வந்தால்..

 ஐந்து வாரத்திலேயே உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும்.

விரைவில் திருமணம் கைகூட சங்கடகரசதுர்த்தி விரதம் 🙏🌹👇👇



 தொடர்ந்து ஒன்பது வாரம் கண்டிப்பாக வழிபடவேண்டும்.

 நாம் நினைக்கும் காரியங்களை அனைத்தும் சுபமாக வெற்றியாக முடிவதற்கு விநாயகப் பெருமானை வழிபடுங்கள் .

சொந்தமாக வீடு மனை வாங்குவதற்கான 10 வழிபாட்டு முறைகள் புத்தகமாக அமேசானில் டவுன்லோட் செய்து படித்து பயன்பெறுங்கள் 🌹🍀🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

அனைத்தும் நல்ல விதமாக முடித்து வைப்பார் விநாயகப்பெருமான்.

கணேசன் அழகு மந்திரத்தில் -கணேசன் நாமம் மனதினில் -வாழ்க்கையின் ரகசியம்  வாக்கினில்- வருகின்ற சோதனை விடப்படும் விரைவினில் என உணர்ந்து ஸ்ரீ கணேச நாமம் உச்சரித்து வாழ்க்கையில் சிறப்பை காணலாம்.

 கணபதியே சரணம் சரணம் சரணம்

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக