மாசி மகம் தீர்த்தவாரி பெருவிழா
நீலவண்ண கார்மேகத்தின் பொழிகின்ற மழையாக- கட்டுக்கடங்கா காளையென ஓடுகின்ற நதியாக -அனைத்துநதிகளும் ஒன்று சேரும் கடலுக்கே தலைவனாக தேவலோகத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்த வருணனோ !
பிடிபட்டான் அன்று பிரம்மஹத்தி தோஷத்திலே..
அதனால் கட்டுண்டு விழுந்தான் கடல் தனிலே ..
உலக ஜீவராசிகள் அனைத்தும் நீரின்றி முகம் வாட -இயற்கை வளங்கள் அனைத்தும் வறட்சி கண்டு தலை சாய - மூவுலகும் தவிக்கின்ற அந்நேரத்தில்..
தேவலோகம் பூலோகம் என அனைவரும் சேர்ந்து வருணனை மீட்டு தருமாறு பரமேஸ்வரனை தியானிக்க- தோஷத்தை விலக்கி வருணனை மீட்டு..
தேவலோகத்திற்கு ஈசன் அனுப்பிய அந்த புனித தினமே மாசி மகம் தீர்த்தவாரி பெருவிழா.
தேவலோகத்திலே உள்ள அனைவரும் பூலோகத்தில் வந்து நீராடுகின்ற பெருவிழா.
அன்றைய தினத்திலே திருத்தலங்களுக்கு சென்று சமுத்திரம் எனும் தீர்த்தவாரியிலே நீராடி மூர்த்தியை தரிசித்தால் ஏற்படும் சிறப்புகள்..
சிறப்பு-1 பாவ வினைகள் அனைத்தும் விலகும்.
சிறப்பு-2 மாசற்ற மனதை பெற்று மங்கல வாழ்வு கிடைக்கும் .
சிறப்பு-3 திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
சிறப்பு-4 பிரிந்த தம்பதியர் மனமொத்து ஒன்று சேர்வர்.
சிறப்பு-5 நீண்டநாள் எதிர்பார்க்கும் குழந்தை பாக்கியம் பெறுவர் .
தேவர் அடைந்த புண்ணியம் தான் பெறுவதற்கு - மாசிமகத்தில் நீராடி வாழ்க்கையில் சிறந்த பயனை அடையலாம்.
அன்றைய தினத்தில் பல கோவில்களில் திருமண உற்சவங்கள் நடக்கும் அந்த திருமண கோலத்தை தரிசித்தால்- நாம் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம் .
மாசற்ற மனம் பெற்று- மங்கள வாழ்வு நாம் பெற்று- பழம் கனிந்து விழுதல் போன்று- கைமேல் பலன் பெற்று நினைத்த காரியம் சித்தி பெற்று அனைவரும் சிறப்பாக வாழ்வதற்கு இந்த மாசி மக பெருவிழா தீர்த்தவாரி பெருவிழாவில் நீராடி- தெய்வ தீர்க்க தரிசனம் நாம் பெற்று- வாழ்விலே பிறந்த பயனை அடையலாம்.
Copy rights at balakshitha


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்