சமையல் வகுப்பறை class-1 எனும் நிகழ்ச்சியில் படிப்படியாக எனக்கு தெரிந்த சமையல் டிப்ஸ் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கின்றேன் நாம் ஒன்று ஒன்றாக நிறைய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் .
இந்த பகுதியில் சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது எப்படி!
சமையலறைக்கு போவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் ..
சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள்..
மற்றவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப சமைப்பது எப்படி
சமையலறையில் சமைப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள்
உடல் ஆரோக்கியத்திற்கும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எப்படிப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கலாம்
என பலதரப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் .
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .
இப்போது நான் சொல்லப் போகும் விஷயம் மிக முக்கியமாக எல்லா தாய்மார்களும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் .
சமையல் கற்றுக்கொள்ளும் நமக்கு முதன்முதலில் சமையலில் ஆர்வம் வருவது என்பது 14 15 வயதில் தான்..
மெல்ல சமையலறைக்கு சென்று அம்மா சமையல் செய்வதை எட்டி பார்ப்போம் ..அம்மாவை நகர சொல்லிவிட்டு -அம்மா கிளறிகொண்டிருக்கும் கரண்டியை நாம் வாங்கி கிளறுவோம்.
அம்மாவிற்கு பயம்.. எங்கே நம்ம குழந்தை கையை சுட்டுக் கொள்ளப் போகிறாள் என்ற பயத்தோடு ' நீ போய் படிக்கிற வேலையை பாரு' என சொல்லிக்கொண்டு விரட்டுவாங்க..
இந்த இடத்தில் இருந்து நாம் சமையலுக்கான வகுப்பறையை ஆரம்பிக்கலாம் .
இந்த 15 வயது என்பது- சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் வயது என்பதை எல்லா அம்மாக்களும் தெரிந்துகொள்வது மிக அவசியம் .
15 வயதில் வரக்கூடிய சமையல் ஆர்வத்தை செய்ய விடாது தடுத்து விட்டால் -
அடுத்து நம் குழந்தைகளுக்கு ஆர்வம் வராமல் கூட போகலாம் படிப்பை முடித்து காலேஜ் போன பிறகு- நமக்கு கைக்கு உதவாமல் கொஞ்சமும் பொறுப்பே இல்லாமல் தன் மகள் இருக்கிறாள் என்று அதே தாய் கஷ்டப்படுவதை நாம் நிறைய பார்க்கின்றோம்.
அதனால் சமையல் கற்றுக் கொள்ள ஆர்வம் வரும் வயது -15 அந்த வயதில் அம்மாக்கள் படிப்படியாக தம்முடைய குழந்தைகளுக்கு சமையல் சொல்லித்தர கற்று கொடுக்கலாம்.
Copy rights at Balakshitha
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக