சனி, 27 ஜூன், 2020

திருமணம் விரைவில் நடந்தேற - மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோயில்





திருமணம் விரைவில் நடக்க மாயவரம் திருமணஞ்சேரி திருக்கோவில்

 தேனூறும் ஐஞ்சவை  பழத்தினில் கிடைக்கும் சுவை போல - அன்பு பண்பு -பாசம் -கனிவு- கோபம்- தாபம் அனைத்திலும் கலந்து பசுமை அனைத்தும் பெற்று- வாழ்க்கை எனும் அனுபவ பாடத்தில்  பயிற்சி பெற்று மழலைகள் தோள் சாயும் மகிழ்ச்சி பெற்று- தோரணங்கள் தொங்கும் சுப நிகழ்ச்சிகள் பல பெற்று- செல்வங்கள் அள்ளி குவியும் சீரும் சிறப்பும் இனிதே பெற்று வாழ்வதற்கு..

 இளமை பருவத்தில் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்  மட்டுமே இத்தனை சிறப்புகளையும் பெற்று வாழ்க்கை இனிதாகும..

அந்த திருமணம்  விரைவில் நடப்பதற்கு நாம்  செல்லக்கூடிய வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்..


தோஷங்கள் விலகி திருமணம் நடக்க நாம் செல்லக்கூடிய மிக அற்புதமான ஒரு திருத்தலம் ..

 மாயவரத்தில் திருமணஞ்சேரி ..அங்கு கல்யாண சுந்தரர் மிக அழகாக எழுந்தருளி காட்சி தருகின்றார்.

நம்முடைய ஜாதகத்தில் தோஷம் இருப்பின் திருமணம் தள்ளிப்போகும். தேவ தோஷம் -சர்ப்ப தோஷம்- அபிஷார தோஷம்-  பித்ரு தோஷம்- திருஷ்டி தோஷம் -பிரேத சாபம் என முன்ஜென்ம பாவ வினைக்கு ஏற்றவாறு கொண்ட நம்முடைய ஜாதக அமைப்பில் ஆறு வகையான தோஷங்களில் - ஏதாவது ஒரு தோஷம் இருந்தால் கூட திருமணம் தள்ளிப்போகும் வாய்ப்புண்டு..


எப்படிப்பட்ட தோஷங்கள் இருப்பின் திருமணஞ்சேரி கோவிலுக்கு ஒரு முறை சென்று முறைப்படி பரிகாரத்தை  செய்துவிட்டு வந்தால் அடுத்த மூன்று மாதத்திற்குள் திருமணம் நிச்சயம் கைகூடும்.


நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருமணஞ்சேரி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சென்று -அங்கே குறிப்பிட்ட பூஜை சாமான்களை பெற்று - ஐந்து நெய்தீபம் ஏற்றி பரிகாரத்தை முடித்து அந்த திருத்தலத்தில் கொடுக்கும் மாலை -விபூதி மஞ்சள் குங்குமம் எலுமிச்சை பழம் வாங்கிக் கொண்டு வரவும் .

திருமணம் விரைவில் நடந்தேற வீட்டிலேயே மரப்பாச்சி பொம்மை வழிபாடு 🌹🍀🌹🙏🙏👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html

திருமணம் விரைவில் நடந்தேற ஆலங்குடி குருபகவான்
 கோவில்🙏🙏🌹🍀🌹👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/06/blog-post_4.html

மறுநாள் திருமணத்திற்காக வேண்டுகின்ற மகனோ மகளோ கங்காஸ்நானம் (ஓம் என நீரிலே எழுதி  கங்கா நீராக நினைத்து) நீராடி திருத்தலத்தில் இருந்து கொண்டு வந்த எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி நினைத்த காரியம் ஜெயம் ஆக வேண்டி -கொண்டுவந்த மாலையை தன் கழுத்திலே அணிந்து -மஞ்சள் குங்குமம் விபூதியை நெற்றியில் நிறைத்து - எலுமிச்சைபழத்தை பிழிந்து குடிக்கவும் .

விரைவில் திருமணம் நடப்பதற்கு சங்கடஹர சதுர்த்தி விரதம்🙏🌹👇👇


பிறகு மாலைகளை ஒரு கவரில் சுற்றி துணிப்பையில் முடிந்து பத்திரமாக வைக்க வேண்டும். திருமணம் இனிதே முடிந்த பிறகு தம்பதி சமேதராய் திருமணஞ்சேரி சென்று அந்த ஆலயத்தில் சேர்த்து பரிகாரத்தை நிறைவு செய்யவும் .


தம்பதி சமேதரராய் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு இனிதே வாழ்ந்து வாழ்க்கை பயனை அடைகவே.

புத்தம் புதிதாய் பூத்த மலர் போல இனிப்பில் சிறந்த பழுத்த பழம் போல கனிவான சொல்லில் கட்டுப்பட்டு மயங்கும் மனம் போல -மங்கல இசை ஒளியான நாதம் போல - என்றென்றும் சிறப்பாய் தம்பதியர் வாழ்க்கையில் இனிமை கண்டு வாழிய வாழிய வாழியவே.

Copy rights at balakshitha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்