உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கும் ஏற்றதான அருமையான மசாலா டீ
நம் உடலுக்கு காலை எழுந்ததும் தூக்க கலக்கம் பறந்து உடலில் ஒரு சின்ன புத்துணர்ச்சி கிடைப்பது அவசியம் அன்றோ!
நாவின் சுவை கூடி- பெட்ரோல் இட்டால் வண்டி துள்ளி ஓடுவது போல -ஒரு பூஸ்ட் எனர்ஜி உடலில் ஏற்பட்டு பணிகள் விரைவாக நடந்தேற-
தேனிர் என்று அழைக்கப்படும் சுவையான பானம் குடிப்பதும் அவசியம் அன்றோ!
அந்த டீ எனும் தேனீரில் உடலும் ஆரோக்கியமாக -நோய்நொடி பிணி அகல- அதேசமயத்தில் வாய்க்கும் சூடாக ருசியாக குடிப்பதற்கு நாம் சேர்க்க போகும் சில பொருட்களை பார்க்கலாம்.
1- இஞ்சி அல்லது சுக்கு
2 - ஏலக்காய்
3 -பட்டை
4- கொத்தமல்லி
5 - மிளகு பொடி
இந்த ஐந்து பொருட்களும் எப்பொழுதும் ஒரு அஞ்சலை பெட்டியை வைத்து சமையலறையில் இருப்பது அவசியம்.
காலையில் தூங்கி எழுந்ததும் இந்த நோய் தீர்க்கும் மூலிகை மருந்தாக இருக்கக்கூடிய எந்த 5 பொருட்களும் டீயில் கலந்து குடிக்கும் பொழுது..
உடல் புத்துணர்ச்சியோடு எந்தவித நோயும் அணுகாது நம்முடைய உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.
இஞ்சியின் சிறப்பு..
இஞ்சக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை என்பது பழமொழி..
'இஞ்சி இல்லா இல்லத்தரசி வீடு இனிமை காணா' என்பது புது மொழி. இருந்தாலும் பொன் மொழி .
நோய்நொடியின்றி ஓடியாடி இங்குமங்கும் புத்துணர்ச்சியோடு இருக்கும் குடும்பம் பொன் குடும்பம் கலகலப்பு மாறாத இல் குடும்பம் - நல் குடும்பம் என திகழ ..இஞ்சிக்கு பங்கு அதிகம். அதனால் தினமும் இஞ்சி ஏதாவது ஒரு வகையில் சேர்ப்பது அவசியம்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப டீ தூளை பாலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கொதிக்கும்போது சேர்க்கக்கூடிய ஐந்து பொருட்களை பார்ப்போம்..
நான்கு பேருக்கு தேவையான அளவு
1- இஞ்சி துண்டு சிறியதாக ஒன்று..
நல்ல மணம் தரும் இஞ்சியில்சுவை
அதிகம்.. காரம் அதிகம் .. இனிப்பு சுவை காரத்தோடு நாவில் பட்டு தொண்டையில் இறங்கும்போது சோர்வு நீங்கி புத்துணர்ச்சி காணும் இவ்வுடல் என்பது உண்மை .
பித்தம் மயக்கம் கபம் சோர்வு செரிமான பிரச்சனை அனைத்தும் நீங்க - இஞ்சி சேர்ப்பது நல்லது.
கொத்தமல்லி -1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி நன்றாக பசியை தூண்டும். ஜுரம் ஜலதோஷம் அனைத்தும் நீக்க வல்லது .உடலில் உள்ள தேவையற்ற நீரை இறக்கும்.
பட்டை - ஒரு சிறியதாக ஒரு பட்டை ஒடித்து போடலாம் .நல்ல மணம் கொடுக்கும் .தோல்நோய் அலர்ஜி அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும்.
கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.
ஏலக்காய் - இரண்டு நறுக்கிப் போடலாம் .நன்றாக பசியைத்தூண்டும். தலைவலி வாமிடிங் சென்சேஷன் பறந்து போகும். நல்ல மணம் கொடுக்கும்.
மிளகுப்பொடி 1/4 டீஸ்பூன் - மிளகு கைவசம் இருந்தால் எதிரிகள் வீட்டிலும் உணவு உண்ணலாம்- என்பது பழமொழி .உடலில் உள்ள கிருமிகளை கொல்லும். ஜீரண சக்தி அதிகரிக்கும். அனைத்து விதமான நோய்களையும் நீக்க வல்லது மிளகு.
நன்றாக கொதிக்கவத்து தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
உடல் ஒரு மாயை என்று மனம் அறிந்த போதும்- உடல் இன்றிஉயிர் ஏது! அவ்வுடல் பிணியின்றி வாழ்வதற்கு இந்த ஐந்து வகை பொருட்கள் அருமருந்தாக அமையும் என்பதை நினைவில் கொள்க.
இந்த ஐந்து பொருட்களையும் சேர்த்து தேனீர் என்று சொல்லக்கூடிய டீயில் சேர்த்து நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் பாதுகாத்துக் கொள்வோம்.
உடல் ஆரோக்கியம் உண்பதில் கண்டு நல்ல செய்கையில் மன ஆரோக்கியம் கண்டு- பண்பு நிறைந்திட நோய் நொடியின்றி வாழ்ந்து வாழ்ந்த பயனை அடைந்து -பலன் பெருகவே.
உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சாம்பார்🌹🍀🌹🍀🌹👇👇👇👇
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக