ஞாயிறு, 26 ஜூலை, 2020

மனம் ஒத்து தம்பதிகள் வாழ்வதற்கான எளிமையான பூஜை

           தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு ஏற்ற எளிமையான  பூஜை



மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்நாமி ஸுபகே சஞ்சீவ ஸரதம் சதம்

இந்த அருமையான பூஜா பலனை எமக்கு எடுத்துரைத்த ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த பழுத்த பழமான வயதான மூதாட்டிக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றி.

திருமண வாழ்க்கை திருப்தியை கொடுத்தாலும் -ஆனந்த வாழ்வுதனை அகம் ஏற்றாலும்- கண் கண்ட கணவன் அன்பில் நிறைந்தாலும் -ஏதோ ஒரு சங்கடம் -பிரச்சனை -தேவையில்லாத மனக் குழப்பம் ..என தம்பதியர் பிரிவதற்கு வழி வகுப்பதுண்டு.


இருவரின் மனதிலும் ஒத்து வாழ மனம் இசைந்தாலும்- தேவையற்ற சஞ்சலம் அடிக்கடி நிகழ்கின்ற வாய்ப்புகள் அதிகம் வருவதுண்டு.

வாழ்க்கை நிலைக்க வேண்டும் மாங்கல்யம் மனதுக்கு இனிக்க வேண்டும்- மனம் நிறைந்த கணவன் அகம் குளிர நடக்கவேண்டும்..என நினைக்கும் சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த பூஜையை செய்யலாம்.


தொடர்ந்து இந்த பூஜையை  5 வாரம் செய்துவர -நினைத்தது நிறைவேறும். தம்பதியினர் ஒன்று சேர்வர். பூஜா பலன்கள் அனைத்தும் கைகொடுத்து வாழ்க்கையில் சிறப்பு பெறுவர்.

அமாவாசை முடிந்து வளர்பிறை நல்ல நாள்  வெள்ளிக்கிழமை  தேர்வு செய்து கொள்க .


அன்றைய  தினம் சிறிது மஞ்சள் தூள் தண்ணீரில் கலந்து கங்கா ஸ்நானம் செய்யவும் .மஞ்சள் என்பது மங்கலம்- மங்கலம் பெண்களுக்கு அமைய இந்த ஸ்நானம் செய்வது மிக சிறப்பு .

மஞ்சள் வாழ்வில் கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் மஞ்சள் நீராடினால் நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் நம்முடைய உடலுக்கு புத்துணர்ச்சி மட்டுமல்லாது நாம் செய்யக்கூடிய எண்ணக்கூடிய எதிர்பார்க்கக்கூடிய அத்தனை செயல்களும் ஜெயமாகும்.

மஞ்சள் நீராடுதல் ஆயுள் முழுதும் தீர்க்க சுமங்கலியாய் வாழ்க என்ற வரத்தை அம்பிகையிடம் இருந்து பெறலாம்.

 பச்சை -மஞ்சள் -சிகப்பு என கலர் உடைய புடவை அணிந்து கொள்வது சிறப்பு . தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு பொட்டிட்டு மங்களகரமாக இந்த பூஜையை செய்வது மிக உத்தமம்.பூஜை

பூஜைஅறையை அலங்கரித்து பச்சரிசி மாக்கோலம் இட்டு ஐந்து முக தீபம் ஏற்றி கொள்க..


அன்னபூரணி அம்மன் சிலை அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும் இல்லையென்றால் ஒரு மனையில் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அதன்மேல் வெற்றிலை வைத்து இந்த பூஜை செய்க..

மஞ்சள் குங்குமம் தாலி சரடு மலர் கற்கண்டு என ஒரு தட்டில் வைத்து அருகே வைக்கவும் ஒரு இனிப்பு பிரசாதம் செய்து வைக்கவும்.


மங்களம் உண்டாகும் மஞ்சள் தூள் ஒரு தட்டில் ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.

' ஸர்வ மங்கள மாங்கல்யே
 சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே '

எனும் மந்திரத்தை 27 முறை ஜபித்து  கையில் உள்ள பிடி மஞ்சள் பொடியை எலுமிச்சை பழம் போன்று உருளையாக பிடித்து -அன்னபூரணி அம்மன் மடியிலே வைக்கவும் .அல்லது வெற்றிலையின் மீது வைக்கலாம்.

உங்களுடைய வேண்டுதலை நன்றாக வேண்டிக்கொண்டு மஞ்சளில் குங்குமத்தால் பொட்டிட்டு கற்பூர ஆராதனை காட்டவும்.

கண்ணாடி வளையல்கள் சுமங்கலிப்பெண்கள் அணிவதன் அவசியம் 🌹🍀🌹🍀🌹👇👇👇👇
http://balakshitha.blogspot.com/2020/07/blog-post_22.html

குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருக்கும் முறை 🌹🍀🌹🍀🌹🍀👇👇👇
http://balakshitha.blogspot.com/2019/10/blog-post_30.html



ஐந்து  வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்து வர படிப்படியாக  தம்பதியர் வாழ்க்கை ஒன்றுபட்டு சிறப்பாக வாழ்வதற்கு இந்த பூஜை கண்கண்ட பலனைத்தரும்.

மஞ்சள் சிறக்க -குங்குமம் நிறைக்க 'தீர்க்க சுமங்கலி பவ' எனும் ஆசி நிலைக்க -சிந்தாது சிதறாது தேன் கிண்ணம் போல வாழ்க்கை இனிக்க இருவரும் மனம் நிறைந்து இன்பமுற வாழிய வாழிய  வாழியவே.

நாம் கண்ட  இந்த பூஜா பலன் அனைவரும் பெறுகையில் அனைத்து மங்கலமும் புண்ணியமும் நமக்கும் சேரும் என்பதால் அனைவருக்கும் பகிர்வதில்  இனிமை காண்க.

கண் திருஷ்டி தோஷம் விலகி வாழ்க்கை சுபிட்சம் பெற எலுமிச்சை பழத்தில் ஐந்து விதமான பரிகாரங்கள்🌹🍀🌹👇👇

வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC

Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்