சனி, 12 செப்டம்பர், 2020

புரட்டாசி மகாளய அமாவாசையின் சிறப்பு


புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசையின் சிறப்பு

அமாவாசையன்று முறையாக வழிபட்டு முன்னோர்களின் ஆசி கிடைத்தால் அனைத்து வளமும் உண்டாகும்.


ஆயிரம் இன்னல்கள் கொண்டது நம் வாழ்க்கை- எனினும் தவறு செய்யாத மனிதனாக வாழ்ந்து வாழ்ந்த பயனை அடைவதற்கு பூஜை நமஸ்காரங்கள் மிக முக்கியம் .தெய்வங்களுக்கு இணையாக நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்படி வாழ்வதற்கு வேண்டுகின்ற விரதநாள்தான் இந்த அமாவாசை என்பதை நினைவில் கொள்க..


இறந்த நற்கதி அடைந்த நம் முன்னோர்களின் ஆசி என்றும் கிடைக்கட்டும். வாழ்வினில் வளம் பெற்று இனிமை கிடைக்கட்டும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவட்டும் செல்வ செழிப்பு உண்டாகட்டும் சிந்தையில் குளிர்ச்சி கிடைக்கட்டும்


இவை அனைத்தும் பெற்றிட அமாவாசையின் சிறப்பைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்..

அமாவாசை அன்று செய்யக்கூடிய முக்கியமான ஐந்து விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள கீழ்காணும் லிங்கை அழுத்தவும் 🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇

https://youtu.be/0qnp0hOCarw

மனக்குழப்பம் தோஷம் கண் திருஷ்டி அனைத்தும் விலக கல்உப்பிலே ஐந்து விதமான பரிகாரங்கள் 🌹🍀🌹👇👇👇https://youtu.be/0p5op0-Zjwk


சிறப்பு 1  சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் சேர்கின்ற தினம்தான் அமாவாசை .அன்றைய தினத்தில்  இறந்த நற்கதி அடையும் தாய் வழி முன்னோர்களை இந்த பூமிக்கு அனுப்பி வைப்பது சந்திரனுடைய கிரக அமைப்பு ..


அதைப்போல தந்தை வழி முன்னோர்களை இந்த பூமிக்கு அனுப்பி வைப்பது சூரியனுடைய கிரக அமைப்பு.


 நம் முன்னோர்கள் இந்த பூமிக்கு வந்து நம்மை கண்டு வாழ்த்தி விட்டு செல்லும் நாள் தான் அமாவாசை .


இந்த நாளில் சூரியன் சந்திரன் சேர்க்கையின் சக்தி -முன்னோர்களின் சக்தி -நம்முடைய குல தெய்வத்தின் சக்தி- என எல்லாம் சேர்ந்து நாம் நினைத்த காரியம் கைகூடும்.

அனைத்து வளமும் இன்றைய நாளில் நமக்கு கிடைக்கும் .


 அமாவாசை அன்று முக்கியமாக நாம் நம்முடைய முன்னோர்கள்- இறந்த பெற்றவர்களை  நினைத்து வழி பட வேண்டும்.  




 பெற்றவர்கள் இல்லை என்றால் நாம் கிடையாது. பெற்றவர்கள் நம் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு ஈடு இணை கிடையாது .அவர்கள் நம்மை கஷ்டப்பட்டு வளர்த்து  ஒரு நல்ல நிலைமைக்கு வருவதற்கு துணையாக இருந்திருப்பார்கள் என்பதை நினைவுபடுத்தும் நாள் தான் அமாவாசை .

சிறப்பு-  2 வேளையோடு படைத்து காகத்திற்கு சாதம் வைப்பது சிறப்பு.


இந்த நாளில் அவர்களை நினைத்து  விரதமிருந்து படைத்து காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் சாப்பிட வேண்டும் .நம் முன்னோர்கள் காகங்களாக  நம் வீட்டிற்கு வருவார்கள். பிள்ளைகளின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள்.அதனால் முடிந்த வரை நம்முடைய முன்னோர்களை காக்க விடாது 12 மணிக்குள் படைத்து காகத்திற்கு சாதம் வைத்து விடுங்கள்.


சிறப்பு - 3 அகத்திக்கீரை கொடுப்பது சிறப்பு





அமாவாசை அன்று அகத்திக்கீரை பசுமாட்டிற்கு கொடுப்பது வேண்டும். அதை ஏன் கொடுக்கவேண்டும் எனும் காரணத்தை தெரிந்து கொண்டு கொடுத்தால்- கொடுப்பதற்கான பலனும் அதிகம் கிடைக்கும்.


 அமாவாசை அன்று நாம் ஒரு பத்து பேருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அப்போதுதான் இறந்த ஆத்மாக்களின் ஆசி நமக்கு கிடைக்கும். ஆனால் பலவித சூழல் காரணமாக நம்மால் யாரையும் அழைத்து சாப்பாடு போடுகின்ற அந்த நிலை இருக்காது ..


அமாவாசை அன்று அகத்திக் கீரை வாங்கி பசுமாட்டிற்கு கொடுக்கும்போது அந்த மாடு நன்றாக பால் சுரக்கும். நாம் கொடுத்த அகத்திக்கீரையின் பல நாள் சுரந்த அந்தப் பாலை அனைவரும் பெறக்கூடிய புண்ணியம் நமக்கு  கிடைக்கின்றது .


ஒரு அகத்திகீரை மாட்டிற்கு நாம் வாங்கிக் கொடுக்க- ஒரு லட்சம் பேருக்கு உணவளித்த புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும் .


அதனால் ஒவ்வொரு அமாவாசை அன்றும்  கண்டிப்பாக அகத்திக் கீரை வாங்கி பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.


  சிறப்பு -4  அமாவாசை அன்று சுபகாரியங்கள் செய்யலாமா!


 அமாவாசை அன்று சுபகாரியங்கள் செய்யலாமா என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்..


 ஏதாவது சுபகாரியங்கள் செய்ய போகின்றோம் அல்லது நாம் ஒரு தொழில் ஆரம்பிக்க போகின்றோம் என்றால் முதலில் குலதெய்வத்தை தான் வணங்குவோம்.


 குலதெய்வங்கள் என்றால் நம்முடைய முன்னோர்கள் தாத்தா பாட்டி வழிவந்த முன்னோர்களின் ஒன்று சேர்க்கைதான் நம் குலதெய்வம். அவர்களுடைய ஆசி கிடைக்கும் நாள்தான் இந்த அமாவாசை .



அதனால் அமாவாசை அன்று 'நான் இந்த  சுப காரியத்தை தொடங்குகின்றேன் ..இந்த தொழில் தொடங்குகிறேன்.. அந்தக் காரியம் வெற்றி பெற என்றும் துணை இருக்க வேண்டும் ' என்று மனதார வேண்டிக்கொண்டு வேண்டுதலை வைத்து வழிபடலாம்.


 பிறகு அமாவாசை மூன்றாம் நாள் வளர்பிறை ஆரம்பிக்கும் .அந்த நாளில் நல்ல நாள் பார்த்து நம்முடைய காரியங்களைத் தொடங்கலாம். நிச்சயம் நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைத்து வாழ்வினில் வெற்றி கிடைக்கும் .


சிறப்பு-5  கண் திருஷ்டி சுற்ற ஏற்ற நாள் தான் அமாவாசை .


 பூசணிக்காய் எலுமிச்சை பழம் தேங்காய் போன்றவற்றின் மீது கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி போடலாம் .


கல்உப்பில்  வேப்பெண்ணை தீபம் ஏற்றுவது சிறப்பு .அமாவாசை அன்று மாலை ஆறு மணிக்கு ஒரு தாம்பாளத் தட்டில் கல் உப்பைப் பரப்ப வேண்டும். ஒரு பெரிய அகல் தீபம் ஏற்றி வைத்து வேப்பெண்ணெய் ஊற்ற வேண்டும்.

அனைத்து திருஷ்டிகளும் விலக வேண்டும் என்று வேண்டி தீபம் ஏற்ற வேண்டும்.



 வேப்பெண்ணையும் கல்உப்பும் சேர்ந்து  எதிர்மறை சக்திகள் கண்திருஷ்டி அனைத்தையும் கிரகித்துக்கொள்ளும் .


மறுநாள் அந்த கல் உப்பை தண்ணீரில் கொட்டி கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம் . மாதம்தோறும் அமாவாசை அன்று தீபம் ஏற்றி  வந்தால் ..


நம் வீட்டில் நேர்மறை சக்திகள் கொண்ட  தெய்வீக சக்தி நிறைந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் தெரிவதை கண்கூடாக பார்க்கலாம் அமாவாசை விரத தினத்தை முறையாக கடைப்பிடித்து வாழ்வினில் வளம் பெற்று சிறப்பு காண்போம். 

சொந்தமாக வீடு மனை அமைப்பதற்கான 10 வழிபாட்டு முறைகள் புத்தகம் அமேசான் Kindle app டவுன்லோட் செய்து  kdp யில்பயன் பெறலாம்🌹🍀🌹🍀🌹👇👇👇👇👇👇

https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC


திருமணம் விரைவில் நடப்பதற்கு சங்கடகர சதுர்த்தி விரதம்🌹🍀🌹👇👇

https://youtu.be/594UG7jAuuo

Copy rights at balakshitha


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக