கோவிட் 19 எனும் நோய்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வழிமுறைகள்..
போன வருடம் வரை மிக அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தோம் .சொந்தபந்தங்கள் ஒருவர் வீடு ஒருவர் வந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம். செய்த பலகாரங்கள் பரிமாறிக்கொண்டோம்.
ஒன்றாகக் கூடி பொழுதுபோக்காக சுற்றிக் கொண்டிருந்தோம். கோவில் குளம் என வயதானவர்களை அழைத்துக்கொண்டு புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தோம்.
இன்றைக்கு அனைத்தையும் இழந்து ஏதோ கூண்டுக்குள் அடைத்த பறவைகள் போல வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..
ஏதோ ஒரு விரக்தி பயம் கவலை என வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு நிகழ்வு என இப்பொழுது நடந்து கொண்டு இருக்கின்றது. நிச்சயமாக இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் உண்டு. நாம் மறுபடி பழைய நிலைமை மாறி இயல்பாக சந்தோஷமாக வாழ்வதற்கான சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும். அதற்கான முயற்சிகள் மருத்துவத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.
இந்த தொற்றுக்கு மருத்துவத்தில் தீர்வு கிடைக்கும் வரை -நாம் முன்னெச்சரிக்கையாக நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாத்துக் கொள்ள -இரண்டு முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்..
ஒன்று தினசரி நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய மூன்று பொருட்கள்.
இரண்டாவது உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது தலைவலி தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறி தெரிந்தால் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான பொருட்கள் என இரண்டு விஷயங்களைப் பற்றி பார்ப்போம் .
நார்மலாக தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய முக்கிய பொருட்கள்..
1- கண்டிப்பாக தினமும் வெதுவெதுப்பான சுடு தண்ணீர் குடிப்பது அவசியம் . குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்போது நோய்த்தொற்று அபாயம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினமும் வெந்நீர் எடுத்துக்கொள்ளுங்கள் . நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
2- நெல்லிக்காய் ஒன்று அல்லது இரண்டு பெரிய நெல்லிக்காய் ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியே சாப்பிடுங்கள். நோய்த்தொற்று உண்டாவதை தடுக்கக்கூடிய அருமருந்தாக நெல்லிக்காய் பயன்படுகின்றது.
3- தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பு எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஆதலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் எடுத்துக் கொள்ளவும்.
4 - இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த இஞ்சி டீ அல்லது இஞ்சி பால் காலையில் தினமும் எடுத்துக் கொள்ளவும். அதுபோல் இரவில் படுப்பதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து பூண்டுப் பல் சேர்த்து கொதிக்க வைத்து அந்தப் பாலை அருந்துங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
5 - இதுதவிர புரதம் வைட்டமின் நிறைந்த காய்கறி உணவு வகைகளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
அடுத்ததாக நமக்கு உடல்நிலை சரியில்லை என்ற அறிகுறி தெரிந்தால் எடுத்துக் கொள்ளவேண்டிய பொருட்கள் ..
1- இஞ்சி மிளகுத்தூள் தேன் கலந்த சாறு இஞ்சி ஒரு துண்டு எடுத்து நன்றாக இடித்து கால் டம்ளர் வெந்நீரில் சேர்த்து வடிகட்டி அந்த நீரில் -அரை டீஸ்பூன் மிளகு -ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடனே நமக்கு நிவாரணம் தெரியும் .தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 - ஒரு நாளைக்கு இரண்டு முறை வேது பிடித்தல் அவசியம்
துளசி -நொச்சி இலை -வேப்பிலை வெற்றிலை- கற்பூரவல்லி -கல் உப்பு மஞ்சள் தூள் நம் வீட்டில் நமக்கு கிடைக்கின்ற பொருளை வைத்து வேதுபிடிக்கலாம்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு செய்யக்கூடிய🌹🍀🌹👇👇👇
பூண்டு மிளகு சாம்பார்
இல்லை என்றாலும் ஒரு அலுமினிய பாத்திரத்தில்- அரை பாத்திரம் அளவு தண்ணீர் ஊற்றி -கொதிக்கும் போது ஒரு கைப்பிடி கல் உப்பு -ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து- பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து வேதுபிடிக்கலாம். நன்றாக போர்வையால்
மூடிக்கொண்டு முகம் -காது -மார்பு என இரு பக்கமும் மாறி மாறிவேது பிடிக்க வேண்டும்.
நன்றாக வாயைத்திறந்து மூச்சை நன்றாக இழுத்து அந்த வேதின் ஆவி தொண்டை வரை போகுமாறு காட்ட வேண்டும். இந்த வேது பிடிக்கும் முறை உங்களுக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
3 -காய்கறிகள் சேர்த்த சூப் அல்லது மட்டன் சூப் காலையில் வெறும் வயிற்றில் சூடாக அருந்த..
நோய்த்தொற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நறுக்கிய காய்கறிகள் அல்லது மட்டன் சேர்த்து வெங்காயம் -தக்காளி -பூண்டு- இஞ்சி உப்பு- மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து அந்த சூப்பில் ..வறுத்து அரைத்த சீரகப் பொடி -மிளகு பொடி சேர்த்து சூடாக ஒரு டம்ளர் குடியுங்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
4- குளிர்ந்த பொருட்களை தவிர்க்கவும். அனைத்து பொருட்களும் சூடாக சாப்பிடுவது அவசியம்.
5 - இரவில் கல் உப்பு சேர்த்து கொதிக்க வைத்த நீரை ஆற வைத்து வெதுவெதுப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டையில் இருக்கும் நோய்த் தொற்றுக் கிருமிகளை அழித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த முறைகளை பின்பற்றலாம்.
கண்டிப்பாக உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தொடர்ந்து நான்கைந்து நாட்கள் உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை பார்த்தல் அவசியம்.
பிணிகள் அனைத்தும் தொலைந்து ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்து மீண்டும் பழைய வாழ்க்கை தொடர்ந்து அனைவரும் இன்புற்று இருப்பதற்கு - இரு கை கூப்பி இறைவனை வணங்கி வாழ்வினில் இனிது காண்போம்.
மேலும் இந்த வீடியோவை பார்த்து பயன் பெறலாம்..
கொரோனா சமயத்தில் நம் உடலை பாதுகாக்க உதவும் சுதுப்பனாங்காரைமீன் குழம்பு👇👇
அனைத்து பிணிகளையும் நீக்கக்கூடிய
மிளகு மருத்துவ குழம்பு🌹🍀🌹👇👇👇
Copy rights at balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக