தானம் செய்யும் முறை - அன்ன தானம் அளிப்பவர் இடும் தானத்திலே கொடுப்போரும் பெறுவோரும் ஒருசேர மகிழ்ச்சி பெற்றால் அந்த தானத்தில் பலன் உண்டு.
கர்ணனின் கொடைத்தன்மையை உலகறிய செய்வதற்கு திருவிளையாடல் புரிந்தான் கண்ணன் அன்று..
பாண்டவரை அழைக்கின்றான் தங்ககுன்று , வெள்ளி குன்று -எனஇரு குன்றுகளை பரிசாக அளிக்கின்றான்..
அதுபோன்றே கர்ணனை அழைக்கின்றான்... அதுபோன்றே இரு குன்றுகளும் பரிசாக அளிக்கிறான். ஆணை இடுகின்றான்- அழகிய புன்சிரிப்போடு ..மாலை பொழுதுக்குள் இந்த குன்றுகள் தானம் அளிக்க பட வேண்டும். அதனால் கிடைக்கப்படும் புண்ணிய பலன்கள் அனைத்தும் நீர் பெருக.
கேட்டதும் மகிழ்வுற்ற பாண்டவரோ ஆரம்பித்தனர் வேளையை அக்கணமே..
அனைவரையும் அழைத்து செதுக்கிய குன்றுகளை- கொடுக்கக் கொடுக்க நீண்டு கொண்டே போனது மக்களின் வரிசை - ஆனால் குன்றுகளோ குறைந்தபாடில்லை..
நடந்த சம்பவம் கண்முன்னே..
தானம் செய்வதற்கு கர்ணனோ ஆவலோடு பார்க்கின்ற அந்நேரத்தில் ஏழ்மையான விவசாயி கண் முன்னே வருகின்றான்..
ஏழ்மையானவன்- பஞ்சம் கொண்டவன் பசியில் துவள்பவன்- உழைப்பாளிிகள் ஆனால் விவசாயி ..அவ்வழியே செல்வதை கண்ட கர்ணன் கைகூப்பி வணங்குகின்றான்.
'யான் கொடுக்கும் வற்றாத செல்வம் தரும் குன்றுகளின் தானத்தை, ஐயா நீர் பெருக' என மனம் உவந்து அளிக்கின்றான்.
குன்றுகளை கொடுத்த கொடைவள்ளல் கர்ணனுக்கோ மகிழ்ச்சி. பெற்ற விவசாயிக்கோ! பஞ்சம் முழுவதுமாக தீர்ந்து விட்டதென்று பெரும் மகிழ்ச்சி. ஒரு நிமிடத்தில் முடித்துவிட்டான் தானத்தை.. புண்ணியத்தை பெற்றுவிட்டான் ஒரு நொடியில்.
உவந்த மனதோடு கொடுக்கும் தானத்திற்கு என்றும் பலன் உண்டு. தானம் என்பது நம் வாழ்வில் புண்ணிய பலன்கள் கொடுத்து- நம் தலைமுறைகள் இனிதாக வாழ்வதற்கு வழி வகுக்கும்.
ஒரு தந்தை மிகுந்த மகிழ்வோடு தன் மகளை 'கன்னிகாதானம்' செய்து வைப்பதை புரிந்துகொள்ளும் மகன் (மருமகன் )விதத்திலும் புண்ணிய பலன்கள் சமபங்கு உண்டு.
கொடுப்பவரும் பெறுபவரும் அடைகின்ற மகிழ்ச்சியில் வரும் புண்ணிய பலன் பூஜா பலன் அனைத்தும் ஒருசேர கிடைக்கும்.
செல்வம் இருப்பவர் மட்டுமே தானம் செய்யலாம் என்றில்லை.. ஏழ்மைகொண்டோரும் தானம் செய்யலாம் .
ஒரு பிடி கம்பு இருந்தால் போதும் -காகம் குருவி பசி தீர்ப்பதும் சிறந்த தானமே .
இரண்டு வாழைப்பழம் இருந்தால் போதும் -கோமாதாவின் பசி தீர்ப்பதும் சிறந்த தானமே.
ஒரு பிஸ்கட் பாக்கெட் இருந்தால் போதும்- பைரவர் வாகனம் பசி தீர்ப்பதும் சிறந்த தானமே.
ஒரு பால் பாக்கெட் இருந்தால் போதும்- ஒரு ஏழை குழந்தையின் வயிற்று பசி தீர்ப்பதும் சிறந்த தானமே .
ஒரு நோட்புக் பென்சில் பாக்ஸ் இருந்தால் போதுமே- ஏழ்மை சிறுவன் கல்விப்பசி தீர்ப்பதும் சிறந்த தானமே .
இவை அன்றாடம் நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தானங்கள்.
பத்து நாட்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் இந்த தானங்களைச் செய்து பாருங்கள் .உங்கள் மனம் நிறைந்திருக்கும் வாழ்வினில் நிறைவு கண்ட திருப்தி இருக்கும்.
உங்கள் குழந்தைகளை நீங்கள் பார்க்கும் பொழுது , யான் செய்த தானம் குழந்தைகளை காப்பாற்றும் -என்ற மகிழ்வு இருக்கும். குழந்தைகளுக்கும் இதே முறையை சொல்லித் தாருங்கள்..
கர்ணனாக இல்லாவிட்டாலும் கர்ணன் வழிவந்த பரம்பரை நாம் அன்றோ என்ற நிறைவை நிச்சயம் காண்போம்.
மலர் வனத்தில் பூத்துக்குலுங்கும் பூக்களை, அப்பொழுதே கட்டி மாலையாக தொடுத்து தெய்வத்திற்கு சாற்றி -புண்ணியம் காண்பது போன்றதுதான் தானம் செய்யக்கூடிய முறைகளும் .
நிறைந்த செல்வந்தர் இடத்திலே விருந்து வைப்பதைவிட -ஒரு வேளை சோற்றுக்கு ஏங்கும் உள்ளங்களுக்கு மனமுவந்து அன்னதானம் செய்வது உத்தமம்.
சிறப்பு -1 தானம் செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்து விட்டால் உடனே நிறைவேற்றுக .
சிறப்பு -2 மனமுவந்து மகிழ்ச்சியோடு தானம் செய்க.
சிறப்பு - 3 இடமறிந்து தானம் செய்க- இல்லாதவர்க்கு தானம் செய்க.
சிறப்பு -4 புகழ் பாராது தானம் செய்க-புண்ணிய பலன் அனைத்தும் நீர் பெருக.
சிறப்பு- 5 தானத்தின் மகிமைதனை தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க.
அதிகாலை பொழுதினிலே- மேகத்தின் நடுவினிலே,
தேவர்களோ ரதத்திலே- உலா வந்து கொண்டிருக்க ,
அழகிய சிரிப்பொலி காதினிலே -விழக்கேட்ட
தேவர்களின் கண்களுக்கு, தென்பட்டது ஒரு குழந்தைபூமிதனில் _ சிரிக்கின்றான் !சிணுங்குகிறான் ! கைகளை ஆட்டி மகிழ்கின்றான் !
கவசகுண்டலம் அவன் வசமே_ காணும் அழகெல்லாம் அவன் வசமே !ஆனந்தம் அடைந்த தேவர்களோ - ஆசையோடு வாரி அணைப்பதற்கு, கைகளை நீட்டி அழைத்தனரே-
"யாசகம் கேட்க வந்தனரோ" என நினைத்த மழலை அவன் ..தன் ஆபரணத்தை கழற்றி நீட்டுகின்றான் . 'வருங்காலத்தில் கர்ணன் *நானே 'என விழைகின்றான்.
குழந்தையாக இருக்கும்போதே கர்ணன் கொடை வள்ளலாக திகழ்ந்தவன். அதனால்தான் இன்றும் அவன் புகழ் நிலை பெற்று இருக்கின்றது.
சொந்தமாக வீடு மனை அமைவதற்கான 10 தெய்வீக வழிபாட்டு புத்தகத்தை Amazon Kindle app டவுன்லோட் செய்து படித்துப்பயன் பெறலாம்🌹🍀👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
Copy rights at balakshitha



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்