பூஜை அறை சாஸ்திரங்கள் பகுதி -2
தெய்வத்திற்கு உகந்த ஸ்லோகங்கள்
தினசரி வாழ்க்கையில் நாம் நிகழ்த்த வேண்டிய முக்கிய ஆன்மீக குறிப்புகள், ஸ்லோகம்
பூஜை அறை - கிழக்கு முகம் சூரிய யோகம் சுபிட்ச யோகம்.
அளவுக்கு அதிகமாக தெய்வப் படங்கள் இராது ,தெய்வப் படங்கள் மறைந்து இல்லாது, உடைந்து இல்லாது, பிடித்தமான தெய்வப் படங்கள் மங்கலமாய் சுபிட்சமாக பார்வைக்கு வைப்பது சிறப்பு.
மகாலட்சுமி குபேரன் படங்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்தால் ,செல்வ கடாட்சம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
முடிந்தவரை தினமும் மலர் சாற்றி புத்தம்புதிய தீர்த்தம், 2 ஊதுபத்தி ஏற்றுவது சிறப்பு.
தினசரி பின்பற்றக்கூடிய எளிய ஆன்மீக வழிபாடு
காலையில் குளியல். அடுத்து சூரிய நமஸ்காரம் .ஒரு சிறிய ஸ்லோகம்
ஓம்அச்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி- தன்னோசூர்யா ப்ரசோதயாத்.
இந்த ஸ்லோகம், சூரிய பகவானின் பூரண அருள் நமக்குள் கிட்டும்.
அடுத்து சாப்பிடுவதற்கு முன்பாக பூஜை அறையில்
1-புதிய மலர் சாற்றுதல்
2- புதிய தீர்த்தம் மாற்றுதல்
3-தீபம் ஏற்றுதல்
4- இரண்டு ஊதுபத்தி ஏற்றுதல்
5- நான்கு வரி ஸ்லோகம்
ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ
ஓம் குல தேவதாய நமஹ
ஓம் இஷ்ட தேவதாய நமஹ
ஓம் அதிர்ஷ்ட தேவதாய நமஹ
அனைத்து தெய்வங்களையும் வணங்குகின்ற, நான்கு வரியில் மிக எளிய ஸ்லோகம் .
பிறகு உங்கள் காலை வேலைகளை தொடங்கலாம்.இரவு நிம்மதியான உறக்கம்.
இந்த நான்கு வரி ஸ்லோகம் என்பது நாள் முழுவதும் புத்துணர்ச்சி கொடுத்துக்கொண்டே இருக்கும். எதிர்மறை சக்திகள் மறைந்துவிடும். பாசிட்டிவ் எனர்ஜி அதாவது நேர்மறை சக்திகள் உங்களுக்குள் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நடப்பது அனைத்தும் நன்றாகவே நடக்கும். நல்ல செயல்களாகவே நடக்கும். தன்னம்பிக்கை மேம்பட உற்சாகம் பிறக்கும் .
'நான் என்பது நான் அல்ல,ஆட்டி வைப்பவன் அவனே' என உணர்ந்து 4வழி ஸ்லோகத்தை நன்கு மனமுவந்து சொல்லி வாழ்வில் மகிழ்ச்சி காண்போம்.
பூஜை அறை சாஸ்திரங்கள் பகுதி-1
https://balakshitha.blogspot.com/2021/0 மற்ற4/1.html
தெய்வீகமான மாங்கல்யம் செய்யக்கூடிய முழுமையான விளக்கங்கள் 🙏🌹👇👇
https://balakshitha.blogspot.com/2021/03/blog-post.html
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக