நற்பவி எனும் ஆன்மீக சொல்லுக்கான விளக்கம்
மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு ஒரே ஒரு மந்திர வார்த்தை
முற்பிறவியில் செய்த வினை என ஆட்டிப்படைப்பது விதி.
விதிப்பயனை நிர்ணயம் செய்வது ஆண்டவன்.
அதே விதிப்பயனை மாற்ற நினைப்பது மனம்.
அந்த மனதினை ஆட்டிப் படைப்பது சிந்தனை.
நற்சிந்தனைக்கு இடம் கொடுத்தால் ஆண்டவன் விதியை மாற்றி நல்லருள் புரிவான் என்பது திண்ணம் .
பிடிக்காத இடம், பிடிக்காத செயல் , நினைக்காத துன்பம் இவை தான் விதி. மனது வைத்தால் நம்பிக்கை வைத்தால் அதே விதியை மாற்றக்கூடிய சக்தி தெய்வீக மந்திரத்திற்கு உண்டு.
நேர்மறையான ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லும்போது அந்த தெய்வீக வார்த்தையானது நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பத்தை நீக்கி மகிழ்ச்சியான வாழ்வு நமக்கு கிடைக்கும்.
அதை மாற்றுவதற்கான ஒரே மந்திரம் நற்பவி எனும் வார்த்தை.
நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும் என்பது" நற்பவி' எனும் வார்த்தையின்
அர்த்தம். தெய்வீகமான புனிதம் நிறைந்த வார்த்தை நற்பவி.
நற்பவி எனும் ஒரு வார்த்தையில் நம்முடைய தலையெழுத்தை நிச்சயமாக மாற்ற முடியும். அடிக்கடி சொல்லுங்கள். நினைக்கும்போதெல்லாம் சொல்லுங்கள் .
நற்பவி எனும் வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும்போது ,நினைக்கும் பொழுது...
1-உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வருவதை காண்பீர்கள்.
2 - நல்ல செயல்கள் மட்டுமே செய்வீர்கள்
3 - நல்ல சொற்களை மட்டுமே பேசுவீர்கள்.
4- நல்ல சிந்தனை மட்டுமே நினைப்பீகள்.
5 - மனதில் மகிழ்ச்சி மட்டுமே உணர்வீர்கள் .
6 - தெய்வத்தின் பார்வை பட்டு தெய்வீக அருள் பெற்றதை உணர்வீர்கள்.
7- முகம் பிரகாசமாவதை உணர்வீர்கள்.
8 - இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே எனும் நம்பிக்கை அடைவீர்கள்.
9 - சொந்த பந்தங்கள் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்.
10 - பதினாறு செல்வங்களையும் பெறுவீர்கள்.
ஆதலால் அடிக்கடி 'நற்பவி' எனும் வார்த்தையை மனதால் நினைத்து அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வாழ்க வாழ்கவே மனிதப்பிறவியின் வாழ்ந்த பிறந்த பயனை அடைகவே.
முகூர்த்தக்கால் நடும் விழா எவ்வாறு செய்ய வேண்டும் 🌹🍀🌹👇👇
https://balakshitha.blogspot.com/2020/01/blog-post_6.html
திருமணம் விரைவில் நடைபெற மரப்பாச்சி பொம்மை வழிபாடு🙏🌹👇https://balakshitha.blogspot.com/2020/06/blog-post.html
வாழ்க்கையில் தோஷங்கள் அனைத்தும் விலகி சுபிட்சம் பெற கல் உப்பு பரிகாரம்🙏🌹👇
சொந்தமாக வீடு மனை அமைய தெய்வீக வழிபாடு🙏🌹👇👇
Copy rights at Balakshitha.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக