சங்கடஹர சதுர்த்தி
வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியை கொடுக்க கூடிய மந்திரமே ஸ்ரீ கணேச மந்திரம் .ஓம் எனும் மந்திரத்துடன் விநாயகரின் திருநாமங்கள் சேர்ந்து உச்சரிக்கும் பொழுது -
அந்த தெய்வீக அதிர்வலைகள் நம் ஆத்மாவின் உள் சென்று தீய சக்திகள் விலகி நல்ல சிந்தனை கிடைத்து நேர்வழி பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தைை நம் மனம் எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் . வாழ்வு தழைக்கும் . வளங்கள் நிறையும் . பனி போல துன்பங்கள் விலகிிவிடும்.
சங்கடகர சதுர்த்தி அன்று ஓம் எனும் மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருங்கள் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளைப் பெறுங்கள்.
இன்று ஒரு தகவல்..
வாழ்க்கையில் மிக அழகான ஒரு பந்தம் திருமணம். அந்த திருமணம் விரைவில் நடைபெறாது சிலருக்கு காலதாமதம் ஆகும். அவர்களுக்கு இந்த சங்கடகர சதுர்த்தியில் செய்யக்கூடிய மிக அருமையான பரிகாரம்..
மாலை சங்கடகர சதுர்த்திக்கு விநாயக பெருமானுக்கு அபிஷேக ஆராதனை அனைத்து கோவில்களிலும் நடக்கும் திருமணம் நடக்கக்கூடிய மகனும் மகளும் அவர்களின் பெற்றோருடன் கோவிலுக்கு இரண்டு மாலைகள் கொண்டு செல்லவும் .
விநாயகப் பெருமானுக்கு மாலை சூடி இரண்டு அகல் தீபம் ஏற்றி வழிபடவும்.
மறுநாள் காலை அதே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விநாயகப்பெருமானின் கழுத்தில் சூடியுள்ள ஒரு மாலையை அர்ச்சகர் மூலமாக திருமணம் நடக்க இருக்கும் மகனுக்கோ ( அ ) மகளுக்கோ கழுத்தில் சூடிக் கொள்ள வேண்டும்.
பிறகு வீட்டிற்கு வந்து அந்த மாலையில் பதப்படுத்தி வைக்கவும் இந்த பரிகாரம் செய்து முடித்தால் மூன்று மாதத்துக்கு ஒரு நல்ல வரன் கண்டிப்பாக அமையும்.
அனைவரும் ஆன்மீகத்தில் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் ஆதாரம் தெய்வ நம்பிக்கையே.
அந்த நம்பிக்கையோடு தினமும் அந்தந்த தெய்வத்திற்குரிய விசேஷ நாட்களில் தெய்வத்தை வழிபட்டால் நம் வாழ்விலும் வரக்கூடிய துன்பங்கள் பனிபோல் விலகி ஒரு நல்ல சூழ்நிலை அனுகூலமான வாழ்க்கை கிடைக்கும்.
இன்று சங்கடகர சதுர்த்தி விநாயகப் பெருமானை வேண்டி ..முடிந்தால் கோவிலுக்குச் சென்று தரிசித்து நிலவின் முகம் பார்த்து பிறகு விரதத்தை முடிக்கவும்.
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கைக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
விரைவில் திருமணம் கை கூட பத்து விதமான பரிகார தெய்வீக வழிபாட்டு முறைகள்🙏🌹👇👇
https://amzn.in/ibYVUJD
Copy rights at Balakshitha


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்