தென்கலை
ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் முத்தியால்பேட்டை புதுச்சேரி
வேதபுரி என்கின்ற புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் அமைந்துள்ளது தென்கலை ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில்.
ராமானுஜரின் பிரதான சிஷ்யரான முதலியாண்டான் சுவாமிகளின் சம்பந்தம் பெற்ற திருக்கோவில். செட்டியார் சமூகத்தை சேர்ந்த வரயோகி ராமானுஜர் என்பவரால் தீர்மானம் செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அழகிய திருத்தலம் தென்கலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருத்தலம்.
அவரது காலத்திற்கு பிறகு பத்மசாரியார் பட்டு சாரியார் என்ற இரண்டு சமூகத்தினரால் பராமரிக்கப்பட்டு வழிவந்த குலத்தவரால் எழுந்தருளப்பட்ட தெய்வீக ஸ்தலம்.
மணவாள மாமுனிகள் இத்தலததில் பிரதான சன்னதியாக காட்சி தருவதும் தனி சிறப்பு.
தென்கலை ஸ்ரீநிவாசபெருமாள் என்று ஏன் சொல்கிறோம் ?
நம்முடைய ஆன்மீக வரலாற்றின் படி பார்த்தால் தென்கலை, வடகலை எனும் இரு சம்பிரதாயங்கள் உண்டு .
தென்கலை சம்பிரதாயம் என்பது தமிழ் சார்ந்த மரபு வழி வந்த ஸ்ரீரங்கம் .
வடகலை என்பது சமஸ்கிருத மொழி சார்ந்த காஞ்சிபுரம் .
ஸ்ரீரங்கத்தில் பெருமாளுக்குரிய விசேஷ நாட்களில் தென்கலை சம்பிரதாயப்படி வேத பாராயணங்கள் தமிழில் படிப்பார்கள்.
காஞ்சிபுரத்தில் பெருமாளுக்கரிய விசேஷ நாட்களில் வடகலை சம்பிரதாயப்படி வேத பாராயணங்கள் சமஸ்கிருத மொழியில் படிப்பார்கள்.
தென்கலை ஸ்ரீநிவாச பெருமாள் திருத்தலம் ஸ்ரீரங்கத்தை சார்ந்து இருப்பதால் தென்கலை ஸ்ரீ ஸ்ரீனிவாசபெருமாள் ஆலயமாகத் திகழ்கின்றது.
கிழக்கு நோக்கி பார்த்தவாறு பிரதான சன்னதியில் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளியுள்ளார். பெருமாளை பார்க்கும்பொழுது திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை பார்த்துவந்த திருப்தி பக்தர்களுக்கு ஏற்படும் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு.
ஸ்ரீ ஸ்ரீநிவாசபெருமாளுக்கு முன்பாக பெருமாளின் வாகனமாய், பெருமாள் தினமும் எழுந்தருளும் அற்புத காட்சியை என்நேரமும் கண்டு மகிழ்ந்திடும் கருடாழ்வார் காட்சி தருகின்றார்.
மூன்று அவதாரங்கள் ஒருசேர தரிசனம்
ஸ்ரீ அபயலட்சுமி நரசிம்மர், பக்கத்தில் அரங்கநாதர் என மிக அழகான தரிசனம், காண கோடி புண்ணியம்.
கோவிந்தன், ஸ்ரீவைகுண்டன், பத்மநாபன் ,மதுசூதனன் ,வேங்கடவன் என பல திருநாமங்களில் போற்றப்படும் எம்பெருமான் நாராயணன் , இங்கே மூன்று நிலைகளில் காட்சி தருகின்றார் என்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
நின்றகோலத்தில்- ஸ்ரீநிவாசனாக
சயனித்த கோலத்தில்- அரங்கநாதனாக
அமர்ந்தகோலத்திலே- ஸ்ரீ அபய லஷ்மி நரசிம்மராக
திருக்காட்சி அளிக்கின்றார்.
எம்பெருமானை மூன்று நிலைகளில் ஒரே இடத்தில் தரிசனம் காண்பது என்பது இந்த திருதலத்தில் மட்டுமே காணக்கூடிய அற்புத நிகழ்வாகும்.
மாசற்ற மனம் பெற்று - மங்கல வாழ்வு நாம் பெற்று- நினைத்த காரியம் சித்தி பெற்று -சிந்தை முழுதும் தெளிவுபெற்று - பழம் கனிந்து விழுதல் போன்று கைமேல் பலன் பெற்று, தம்பதி சமேதராக வாழ்வதற்கு தெய்வீக ஸ்தலமான புதுச்சேரி முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீ சீனிவாச பெருமாளை சேவிப்பது என்பது மிகச் சிறப்பு.
அலர்மேலுமங்கை தாயார்
ஸ்ரீ ஸ்ரீனிவாசபெருமாள் வலதுபக்கத்தில் அலர்மேலு மங்கை தாயாரை முதலில் தரிசித்து பிறகே பெருமாளை தரிசிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறப்பை தரக்கூடிய மாங்கல்ய பலம் அமைவதற்கு அலர்மேலு தாயை வணங்கி சேவிப்பது, அந்த குங்குமத்தை வாங்கி நெற்றியிலும், மாங்கல்யத்திலும், தலை வகிட்டிலும் இட்டுக் கொள்வது சிறப்பு.
ஆண்டாள் நாச்சியார் சன்னதி
அருள்பாவிக்கும் ஆஞ்சநேயர்
அலர்மேலு மங்கை தாயார் பக்கத்திலே வடக்கு முகமாக வரங்களை அருளும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாவிக்கின்றார் .
மார்கழி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் அமாவாசை தினத்தன்று, ஹனுமன் பிறந்த ஹனுமன் ஜெயந்தி விழா மிக சிறப்பாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.
அரங்கநாத பெருமாள்
அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி மங்கையரோடு சயன கோலத்தில் காட்சி தர , நாபிக்கமலத்தில் பிரம்மாவும், அனந்தசயன ரங்கநாதரின் பாதத்தின் நடுவே விபீஷணன் காட்சி தருவதும் கண்களுக்கு குளிர்ச்சி தரும் அற்புத நிகழ்வாகும்
மணவாள மாமுனிகன் சன்னதி, சக்கரத்தாழ்வார் ,கிருஷ்ணன்,ராமர் சன்னதி ,நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ராமானுஜர் என ஒவ்வொரு சன்னதியும் இந்த திருத்தலத்தில் காண்பது தனி சிறப்பு.
அபயலக்ஷ்மி ஸ்ரீ நரசிம்மர்
லக்ஷ்மி நரசிம்மரின் பிரகாரத்தை சுற்றி வந்தால்....
நம்மை அறியாது ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என உதடுகள் முணுமுணுக்க 'ஓம் நமோ நாராயணாய நமஹ ' என மனமோ ஆனந்த கீர்த்தனையில் அளவளாவ, ஆனந்தப் பெருக்கில் நம்மையே அறியாமல் கண்களில் கண்ணீர் உருண்டோட இதுவே ஆனந்தம் . இதுவே ஆன்மீகம். இதுவே ஆத்மார்த்தம். இதுவே பிறவிப்பயன். இதுவே மோட்சத்திற்கான வழி.
திருத்தலத்தில் நடக்கக் கூடிய அற்புத விசேஷங்கள்
மடப்பள்ளி
இந்த மடப்பள்ளியில் விநாயகர், விஸ்வக்க்ஷேனர் ,நாச்சியார், தும்பக்கி ஆழ்வார் வீற்றிருக்கும் தெய்வீக ஸ்தலம்.
புரட்டாசி மாதம் 30 நாளும் தினசரி இந்த மூன்று பெருமாளின் ஒரே இடத்தில் தரிசனம்... அந்த தரிசனத்தை காண்போர் பூர்வஜென்ம பாவங்கள் அனைத்தும் கரைந்து, புத்தம் புது வாழ்க்கை மலர்ந்து ,சுபிட்சம் பிறக்கும். வாழ்வில் அனைத்து வெற்றிகளும் பெற்று, பதினாறு செல்வங்களும் பெற்று இனிதே வாழ்ந்து வாழ்வில் பிறந்த பயனை அடைகவே.p
தென்கலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் வரலாற்று சிறப்பு பற்றி அருளியவர் விஸ்வஜித் பட்டர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏🙏🙏
சொந்தமாக மனை வாங்கி ,வீடு கட்டும் யோகம் பெறுவதற்கு பத்துவிதமான தெய்வீக வழிபாட்டு முறைகள் அமேசானில் மிண்னனு புத்தகமாக படித்து பயன்பெறுங்கள்🙏🌹👇👇👇
https://www.amazon.in/dp/B088CY7RNZ/ref=cm_sw_em_r_mt_dp_U_fYRTEbPP2W3MC
'இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ 'புத்தகம்
64 பக்கங்கள் கொண்டு... தம்பதியர்கள் சிறப்பாக வாழக்கூடிய 16 வழிமுறைகள் கொண்ட கடக்கு அடக்கமான அழகிய கவிதை தொகுப்பு புத்தகம்
திருமணம் சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க ஏற்ற புத்தகம்.
புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொண்டு , திருமண நிகழ்ச்சியில் அன்பளிப்பாக பூங்கொத்துடன் ஒரு புத்தகம் வைத்து திருமண தம்பதியர்களுக்கு கொடுத்தால்
நிச்சயம் மனம் கனிநத ஒரு மகிழ்ச்சி உங்களுக்கு பிறக்கும்.
📞அணுகவும் 8124152666
💐 என் புத்தகத்தை அமேசானில் படிக்க. இந்த link click செய்யுங்கள் 💐
https://read.amazon.in/kp/kshare?asin=B08GJGL2C7&id=6jyb424mevh3tn3csp2ds
Copy rights at Balakshitha







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்