நளபாகு லட்டு
லட்டு என்றால் கொள்ளை பிரியம் திருப்பதி லட்டு, ரவா லட்டு, பச்சைபருப்பு லட்டு ஜவ்வரிசி லட்டு என பல ரகம்...
மனதைக் கவர்ந்தாலும் நாம் ஏன் புதிதாக ஒரு லட்டு செய்தால் என்ன? என நேற்று நினைத்தேன். உடனே தோன்றிய என் கைவண்ணத்தில் அமைந்த நளபாகு லட்டு இதோ உங்களுக்காக...
சர்க்கரை 1கப்
கடலை மாவு ஒரு கப்
ரவை ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைப்பயிறு ஒரு டேபிள்ஸ்பூன்
கான்பிளவர் மாவு ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் சர்க்கரையோடு சேர்த்து பொடி செய்தது( சலித்துக் கொள்ளவும்)
முந்திரி பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன் உடைத்துக் கொள்ளவும்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
பச்சைப் பருப்பு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (குக்கரில்)
கடலை மாவை சலித்து ,ஒரு கப் கடலை மாவு, அரை கப் தண்ணீர் , சிறிது கேசரி பவுடர்,சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் . (தேவை என்றால் சிறிது சோடா உப்பு சேர்த்துக் கொள்ளலாம்)
கடாயில் எண்ணெய் ஊற்றி பூந்தி கரண்டி அதாவது ஜல்லிகரண்டியில் கடலை மாவை ஊற்றி எண்ணெயில் பூந்தி போல் பொறித்துக் கொள்ளவும்.(பூந்தி போன்று ஹார்டு(Hard) ஆக இல்லாமல் சாப்டான (soft) ஆன பதத்தில் முன்பே எடுத்து விடவும்)
அடுத்த வாணலில் ஒரு டேபிள்ஸ்பூன் ரவை வறுத்து எடுக்கவும்.
முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும் .
பாதி வேலை முடிந்தது இனி சர்க்கரைப்பாகு தயார் செய்ய வேண்டும். சர்க்கரை ஒரு கப் எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி சிறிது கேசரி பவுடர் சேர்த்து கொதி வந்ததும் பூந்தி , பச்சைப்பயிறு, ரவா மூன்றையும் சேர்த்து நன்றாக வேகவைத்து சுண்டியதும் (கடலைமாவு பூந்தி , பச்சைப்பயிறு , ரவா மூன்றும் சேர்ந்து mingle ஆகும்போது ஏற்படும் சுவையே தனி.. . )
ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சுண்டியதும் எடுத்து ஆறவைத்து முந்திரிப்பருப்பு (பாதாம் பிஸ்தா நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி சேர்க்கலாம் )சேர்த்து உருண்டை பிடித்தால் அருமையான சுவையான நளபாக லட்டு தயார்.
உடலுக்கு ஆரோக்கியமான அருமையான சுவை கொண்ட இந்த நளபாகு லட்டு செய்வதற்கு மிக எளிதாக இருக்கும் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து சாப்பிடக்கூடிய இனிப்பு நளபாகு லட்டு என்பதால் இன்றே செய்து பாருங்கள்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்