நீரிழிவு நோய் போயே போச்சே!
மனித வாழ்க்கை என்பது அழகான ஒரு நெடுந்தூர பயணம்தான்
நீரிழிவு நோய் வருவதற்கான காரணம்
அதிக மன அழுத்தம் காரணமாக அனைத்து நோய்களும் உண்டாகும்.
குறிப்பாக நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் மன அழுத்தமே.
பரம்பரை நோய் என்றும் கூறலாம். பெற்றோர்களுக்கு இருந்தால் வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வரக்கூடும்.
இன்சுலின் எனும் ஹார்மோன் சுரக்காமல் போனால் அல்லது குறைவாக சுரந்தாலும் நீரிழிவு நோய் உண்டாகும்.
உடல் பருமன் ஒரு காரணமாக அமைகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு சில சமயம் குழந்தைகள் வளரும்போது இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரந்தால் நீரிழிவு நோய் வரலாம். ஆனால் குழந்தை பிறந்த பிறகு அவர்களுக்கு சரியாகிவிடும்.
நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
சர்க்கரை நோயானது நமக்கு ஒன்றும் செய்யாது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்.
படிப்படியாக நாளடைவில் நம்முடைய உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனை பட வேண்டியிருக்கும்.
மயக்கம், சரும நோய் பிரச்சனை , பாத வலி , பாத எரிச்சல் , கால்கள் மரத்துப்போதல் , உடல் நடுக்கம் விரல்கள் பாதிப்பு போன்ற பல விளைவுகளை சந்திப்பதை தவிர்க்கவும்.
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் .சிறிது தூரம் காலார நடந்து செல்லுங்கள். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஆரோக்கியபானம் அல்லது காய்கறி கலந்த உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த நாளில் நம்முடைய பெற்றோர்கள் எடுத்துக் கொண்ட பாரம்பரிய உணவு கேழ்வரகு கம்பு திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்பு என்னும் அகம் கொண்டு
பொறுமை எனும் குணம் கொண்டு
துணிவு எனும் துணைகொண்டு
சோதனை வந்தாலும் எதிர்கொண்டு
லட்சியப் பாதையில் நடந்து சென்று….
வாழ்ந்தால் போதும். அனைத்து நோய்களில் இருந்தும் விலகி ஆரோக்கியமான வாழ்வுதனை நாம் பெறலாம்.
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்