குலதெய்வம் காப்பாற்றிய சம்பவம்
என்னுடைய தோழி சொன்ன சம்பவத்தை பகிர்கின்றேன்
எனக்கு திருமணமான புதிது.
நான்கைந்து மாதங்கள் இருக்கும். என்னுடைய கம்மலின் திருகாணி தொலைந்துவிட்டது.
என்னுடைய கணவர் கொஞ்சம் கோபக்காரர் என்பதால் எப்படி சொல்வது என்று பயந்தேன் .
குலதெய்வத்தை வேண்டிக் கொண்டால் எந்த பொருளும் உடனே கிடைத்து விடும் என்று என் தாய் அடிக்கடி சொல்வதுண்டு .அதன்படி குலதெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.
மறுநாள் என் கணவர் என்னிடம் ஒரு பொருளை கொடுத்தார் . வெளியே சாக்கடை ஓரத்தில் கண்ணுக்கு பளபளவென்று இந்தப் பொருள் கிடந்தது. எடுத்துப் பார்த்தேன் திருகாணி போல தெரிகின்றது .எடுத்து பத்திரமாக வை என்று கொடுத்தார்.
உண்மையிலேயே அந்த நேரம் எனக்குள் மிகப்பெரிய மகிழ்ச்சி.
எப்படி சொல்வது என்று பயந்து கொண்டிருந்த என்னிடம் என் கணவரின் கையாலேயே அந்த திருகாணி கொடுக்கப்பட்டது ...
அந்த நேரம் எனக்கு குலதெய்வத்தின் திருவருளால் தான் என்று மனதிற்குள் தோன்றியது.
மனதார குல தெய்வத்திற்கு விளக்கேற்றி மனமுருக வேண்டிக் கொண்டு நமஸ்காரம் செய்தேன்.
பட்டாசு வெடிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்🙏
இன்றுவரை என் நினைவை விட்டு அகலாத ஒரு பசுமையான நினைவு அது.
என்று இன்றுவரை என்னுடைய தோழி குலதெய்வத்தின் சக்தி உண்டு என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
குலதெய்வ வழிபாடு என்பது நம்முடைய வேண்டுதல் அதனை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த ஒரு வழிபாடு.
குலதெய்வம் வழிபடும் முறைகள்🙏🌹🍀🌹👇👇👇
https://balakshitha.blogspot.com/2019/11/part-1.html
குடும்பம் சுபிட்சமாக மலரவதற்கு குலதெய்வ வழிபாட்டு ஸ்லோகம்🙏🌹🍀👇👇
https://balakshitha.blogspot.com/2019/08/blog-post.html
நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹
Copy rights at Balakshitha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .
ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.
Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡
---
❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்