எழுத்தாளர்களுக்குரிய இலக்கணம்
எழுத்தாளர்கள் எழுதுவது ஆனந்தம் என்றால் , படிப்பவரோ பேரானந்தம் பெறவேண்டும். இதுதான் எழுத்தாளர்களுடைய இலக்கணம்.
எழுத வேண்டும் நிறைய படைப்புகளை மக்களுக்கு தரவேண்டும் எனும் பிடிவாதம் மனத்துக்குள் எழுந்துவிட்டால் அது முடியும் வரை தளரக்கூடாது. நல்ல நோக்கத்தை கொண்டு அமைவதாக இருக்க வேண்டும் . அந்த பிடிவாதம் வெற்றி பெறும்.
மாணிக்கவாசகர் அடிச்சுவட்டில், கௌதம புத்தர் அடிச்சுவட்டில், சேக்கிழார் அடிச்சுவட்டில் என அற்புதமான பயண இலக்கியங்களை படைத்தவர் சிவபாதசுந்தரம் எழுதிய அழகிய நூல்களைப் படித்தால்
இன்றும் புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது .
அந்தந்த இடங்களுக்கு திருத்தலங்களுக்கு சென்று அங்கே உரையாடி நடந்த சம்பவம் வரலாறுகளை படைத்து வெற்றிகண்ட மாமனிதர் .
மனதிற்குள் பிடிவாதம் மன உறுதி இரண்டும் இருந்ததால்தான் அவரால் சாதிக்க முடிந்தது .
ஒரு எழுத்தாளர் ஆவதற்கான இலக்கணம் என்பது ..
எழுதும் எழுத்துக்கள் உண்மையானதாக இருக்கவேண்டும். ரசிக்கும்படியாக இருக்க வேண்டும். சுவாரசியம் கலந்ததாக இருக்க வேண்டும் .அடுத்தது என்ன என்ற ஆர்வம் கொண்டு அமைய வேண்டும். படிப்பவர் மனதில் நிற்க வேண்டும்.
அப்போதுதான் நல்ல சிறந்த எழுத்தாளர் என்று ஒரு முத்திரை குத்தப்படும்.
ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஆழ்ந்து கிடக்கும் எண்ணங்கள் பல கோடி... அதை வெளிக்கொண்டு வர எழுதுகோல் மிக அவசியம். அனைவரும் நிறைய எழுதுங்கள்.
நம்முடைய எதிர்கால சந்ததியினர் படித்து பயன் தரக்கூடிய நல்ல கருத்துக்களை எழுதுங்கள்.
நிறைய எழுதி, நிறைய படித்து பல நல்ல கருத்துக்களை மனதில் பதித்து பல துறைகளில் சாதித்து வெற்றி பெற்று வாழ்வில் நிறைந்த பயன் அடைந்து சிறப்புற வாழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக