ஞாயிறு, 8 ஜூன், 2025

முருகனை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை


 முருகப்பெருமானை நினைத்து முறையாக விரதம் இருக்கும் முறை (Murugan Devotion)





அழகிய அரைஞான் ஆட 

மார்பினில் உள்ள பூணூல் ஆட-

மணம்  நிரம்பிய கடம்ப மாலை  ஆட

 இடையாட தோள் வளையாட

விளங்கும்  குழை ஆட  

பன்னிரு  கைகளும் ஆட  

 தாமரை மலர் போன்ற பன்னிரு  விழிகளோடு...

 நெற்றிக்கண்  ஆறும் சேர்ந்தாட 

மலர்ந்த  அழகிய வாய்இதழ்  ஆட

வேலாட  மயிலாட  நான்கு வேதங்களும் ஆட  அதைக்கண்டு நம்மையும் ஆட வைக்கும் முருகனின்  அழகுக்கு ஈடு இணை ஏது!

குமரகுருபரர்


முருகனுக்கு விரதம் இருப்பது எப்படி (How to observe Murugan viratham in Tamil)

 








தமிழரின் வாழ்வில் ஆன்மீகத்துக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் பிரதானமான இடத்தை பெறுபவர் முருகப்பெருமான். அவனை மனமார்ந்த நம்பிக்கையுடன் வணங்கினால் வாழ்க்கையின் அனைத்து  கவலைகளும் துன்பங்களும் நீங்கி மனநிம்மதியையும் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


மாதம் மற்றும் ஆண்டுதோறும் வரக்கூடிய வைகாசி விசாகம் , கிருத்திகை , சஷ்டி (Kiruthikai, Sashti, Vaigasiviratham)







 மாதந்தோறும் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம்  சஷ்டி மற்றும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் , கந்த சஷ்டி  , சூரசம்ஹாரம் போன்ற தினங்கள் முருகப் பெருமானுக்குரிய தெய்வீக நாள்களாகக் கருதப்படுகிறது.

விரதம் இருப்பதால் ஏற்படக்கூடிய பலன் என்ன? ( Benefits of observing  Virat (Fasting ) for Lord Murugan)








 முருகப்பெருமானை வணங்கும் நாள்களில் விரதம் இருப்பது என்பது உடல், மனம் , ஆன்மா என மூன்றையும் தூய்மைப்படுத்தும் ஒரு ஆன்மீக சாதனை மற்றும் உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல அது மனக்கட்டுப்பாடு. நற்சிந்தனை  ஆகியவற்றை வளர்க்கும் ஒரு வழியாகவும் அமைகின்றது.

முருகப்பெருமானுக்குரிய அந்த சிறப்பு தினங்களில்
நாம் எவ்வாறு விரத முறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை பற்றி பதிவினில் அறிந்து கொள்வோம்.



முருகனுக்கு விரதம் இருக்கும் முறை (Murugan viratham Guide)

  1. விடியற்காலை எழுந்து வழிபாடு செய்தல்


 முருகனின் அருளைப் பெற விரும்புவோர் அந்த நாளில் விடிகாலை எழுந்து ஸ்நானம் செய்து லயத்திற்கு சென்று அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பு .

நமது காரியங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் முருகப் பெருமானை மனமார வேண்டி விரதத்தை கடைபிடித்தால் அதற்கான பலன் முருகன் கொடுப்பார். 

2. விநாயகர் பெருமானை முதலில் வணங்குதல் 







எந்த வழிபாடும் தொடங்கும் முன்பாக விநாயகப் பெருமானை வணங்குவது நமது பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானது . விநாயகரை வேண்டியபிறகு முருகனிடம் விரதத்தை தொடங்குவது ஆன்மீக ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் சிறப்பினை தரும்.


3. நெற்றியில் தெய்வீகத் திலகம்


 விரத நாட்களில் நெற்றியில் குங்குமம் 
 விபூதி அல்லது சந்தனம் இட்டிருப்பது தெய்வீக ஆற்றலை ஈர்க்கும்  ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.  இது மனத்தையும் உடலையும்  குளிர்ச்சியுடன் நிலைப்படுத்தும் சக்தி மிக்கது.

 4   முருக பெருமானின் ஸ்லோகங்கள் விரத தினத்தில் படிக்க வேண்டுமா!

 காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றி கந்தபுராணம், கந்த சஷ்டி, கவசம் அல்லது சுப்பிரமணிய சுவாமியின்   108 நாமங்கள் சொல்வது  சிறப்பு . மேலும் முருகன் ஸ்லோகங்கள்  நம் மனதில் உள்ள இருளை அகற்றி ஒளியை உருவாக்கும் சக்தி கொண்டது. அதனால் விரத நாட்களில் முருகனின் ஸ்லோகங்கள் படியுங்கள்.












இப்படி முறையாக முருகப் பெருமானுக்குரிய சிறப்பு தினத்தில் முருகனை நினைத்து விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு , நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.





விரத தினத்தன்று முருகனையே நினைத்து ‌மனதை ஒரு நிலைப்படுத்தி,  உபவாசம் இருந்து,  சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.


நன்றி 🙏 பாலாக்க்ஷிதா 🌹


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பதிவுகளும் பாலாக்க்ஷிதா.காம் பிளாகரில் நீங்கள் படித்து பயன்பெறலாம் .

ஆன்மீகம் மற்றும் அறிவு சார்ந்த கேள்விகள் மற்றும் வீட்டு குறிப்புகள் என அனைத்து சந்தேகங்களுக்கும் கமெண்டில் தெரிவித்தால் உடனே அதற்கான நமது கலாச்சார கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து உண்மையான விளக்கமான பதில் பதிவுகள் அளிக்கிறோம்.

Please share your thoughts politely.
உங்கள் பதில்களை comment box-இல் பகிருங்கள்!
அதற்கான பயனுள்ள பதில்கள் விரைவில் நம்முடைய பக்கத்தில் வெளியாகும் 💡


---

❤️ Like செய்யுங்கள்
💭 Comment செய்யுங்கள்
🔄 Share செய்து நண்பர்களிடமும் பகிருங்கள்