கண்ணனை நினைத்து
துடிக்கின்ற ஒரு தாயிடம்
எவ்வளவு அழகாக
உணர்த்துகின்றான்
நம் கிருஷ்ணன் ..
கண்ணனை நினைத்து விட்டேன்
கவலைகள் மறந்து விட்டேன்
என் மகன் கண்ணனவன் கோபிகையின் மன்னன் அவன்!
கண்ணனை அழைக்கின்றேன் காண்பதற்கு துடிக்கின்றேன் கண்ணனோ சிரிக்கின்றான்
கண்டு கண்டு ஒளிகின்றான்!
பாலகனின் முகம் காண
மனதால் வேண்டுகின்றேன்
ஏதோ சொல்கின்றான்
என் கண்ணன் -உணர்வால் உணர்த்துகின்றான்
என் கண்ணன்!
உன்னுள் நான் இருக்க- தேடுவது
வீண் தானே என் தாயே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக